Go to full page →

ஆவிக்குரிய வாழ்வில் நீங்கள் வல்லமையுடைவரா அல்லது பெலவீனரா? பிப்ரவரி 14 Mar 89

“இப்படிப்பட்ட வாக்குத்தத்தங்கள் நமக்கு உண்டாயிருக்கிற படியினால், பிரியமானவர்களே மாம்சத்திலும் ஆவியிலும் உண்டான எல்லா அசுசியும் நீங்க, நம்மைச் சுத்திக்கரித்துக் கொண்டு, பரிசுத்தமாகுதலை தேவபயத்தோடே பூரணப்படுத்தக் கடவோம்” - 2 கொரிந்தியர் 7: 1 Mar 89.1

ஆண்டவர் அவரது பிராமணத்தைக் கைக்கொள்கிறோம் என்று (பெயரளவில்) சொல்லிக்கொள்கிற மக்களைக் கடிந்து கொள்கிறார்; திருத்துகிறார். அவர்களது பாவங்களைச் சுட்டிக் கட்டி, அவர்களது அக்கிரமத்தை வெளிப்படையாக எடுத்துக் கட்டுகிறார்; ஏனேனில், அவருக்கு பயப்படும் பயத்திலே அவர்கள் தங்களது பரிசுத்தத்திலே நிறைவடையத்தக்கதாக, ஆண்டவரிலே அவர்கள் மாரிக்கத்தக்கதாகவும் அல்லது பரலோகத்திற்கு மறுரூபமாக்கப்படத்தக்கதாகவும் அவர்களிலிருந்து பாவத்தையும் துன்மார்க்கத்தையும் அகற்ற வேண்டுமென்று விரும்புகின்றார்... Mar 89.2

பரிசுத்தத்தையும், தூய்மையையுந்தவிர வேறு எதையும் தேவன் எற்றுக்கொள்ளமாட்டார். குணத்திலுள்ள ஒரு கறை-ஒரு திரை-ஒரு குறை, பரலோகம் அதின் மகிமைகள், பொக்கிஷங்கள் அனைத்தையும் என்றாக்குமாக பெற்றுக்கொள்ளமுடியாதபடி தடுத்து நிறுத்திப்போடும். Mar 89.3

கிறிஸ்தவர்கள் என்று சொல்லிக்கொள்கிற அநேகருக்கு, தாங்கள் பெற்றுக்கொள்ளவேண்டிய அவிக்குரிய வல்லமையைப் பற்றி எத்தகைய அறிவுமில்லை. இந்த வாழ்க்கையின் அற்பமான- அழிந்துபோகின்ற காரியங்களுக்காக, பேராவலோடும் தீவிரமான ஆர்வத்தோடும் விடாமுயற்சியோடும் இருப்பதுபோன்று, தெய்வீக காரியங்களைப்பற்றிய ஒரு அறிவைப் பெற்றுக்கொள்ள வாஞ்சிக்க வேண்டும். கிறிஸ்தவர்கள் என்று சொல்லிக்கொள்கின்ற திரளான மக்கள் கூட்டத்தார், அவிக்குரிய நிலையில் குள்ளர்களாயிருப்ப திலேயே திருப்தியடைந்திருக்கிறார்கள். முதலாவது தேவனுடைய இராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடவேண்டியதே தங்களது நோக்கமாக இருக்க வேண்டும் என்ற மனநிலை அவர்களுக்கு இல்லை; எனவே, கடவுட்பற்றானது அவர்களுக்கு மறைந்திருக்கும் ஒரு இரகசியமாகவே இருக்கிறது. அதை அவர்களால் புரிந்துகொள்ள முடிகிறதில்லை. அனுபவ அடிப்படையின் மூலமாக, கிறிஸ்துவை அறியும் அறிவைப் பெற்றுக்கொள்ளவில்லை. Mar 89.4

தேவனுக்குப் பயப்படும் பயத்திலே, பரிசுத்தத்தை நிறைவாக்க செய்யப்படும் முயற்சியிலே, நேர்மையாக, ஊக்கமாக, முன்யோசனையோடு உழைக்கும் அனைவருக்காகவும் ஏராளமான முன் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன. மீட்பின் சுதந்தரவாதிகளுக்காக பணிவிடை செய்யும் தூதர்களால் கொண்டுவரப்படும்படி, கிறிஸ்துவின்மூலமாக, வல்லமையும், கிருபையும், மகிமையும் அருளப்பட்டிருக்கின்றது. தங்களது பாவங்களை அகற்றிப்போட்டு, அக்கிரமத்தின் போக்கை நிருத்தியவர்களாக, ஜீவனுள்ள தேவனிடத்திற்க்கு முழுமையாக நோக்கங்கொண்டவர்களாக, திரும்புவார்களானால், வல்லமையும் பரிசுத்ததையும் நீதியையும் அவர்களுக்காக மரித்த இயேசுவில் கண்டுபிடிக்க முடியாத அளவிர்க்கு, எவரும் இழிவாகவும் கேடுநிறைந்தவர்களாகவும் தீயவர்களாகவும் இருக்கமாட்டார்கள். பாவத்தினாலே அழுக்கேறி, கறை படிந்திருக்கும் அவர்களது ஆடைகளை களைந்துபோட்டு, அவர்களுக்கு நீதியின் ஒளியான வெண் அங்கிகளை அணியச்செய்வதற்காக அவர் காத்துக்கொண்டிருக்கிறார். அவர்கள் மரிக்காமல் பிழைத்திருக்கவேண்டுமென்று அவர்களுக்குக் கூறுகிறார். அவரிலே அவர்கள் வளம் பெறலாம். அவர்களது கொடிகள் உலர்ந்துபோவதுமில்லை; கனியற்றிருப்பதுமில்லை. அவர்கள் அவரில் நிலைத்திருப்பார்களேயானால், அவரிடமிருந்து உயிர்ச்சாற்றையும் ஊட்டச்சத்தையும் பெற்றுக்கொள்ளாலாம். அவரது ஆவியினால் நிறைந்தவர்களாக, அவர் நடந்தது போல தாங்களும் நடந்து, அவர் வெற்றி பெற்றது போல தாங்களும் வெற்றிபெற்று, அவரது சொந்த வலது பாரிசத்திற்கு உயர்த்தப்படலாம்.⋆ Mar 90.1

வாக்குத்தத்த வசனம்: Mar 90.2

“...நீங்கள் திடமனதாயிருந்து காரியங்களை நடத்துங்கள், உத்தமனுக்குக் கர்த்தர் துணை...” - 2 நாளாகமம் 19:11 Mar 90.3