Go to full page →

இப்பொழுது... இப்பொழுதே தான்!, பிப்ரவரி 16 Mar 93

“மனுஷகுமாரன் வரும் நாளையாவது நாழிகையையாவது நீங்கள் அறியாதிருக்கிறபடியால் விழித்திருங்கள்.” - மத்தேயு 25:13 Mar 93.1

கிறிஸ்துவின் வருகையானது, அனைவரும் நித்திரைசெய்துகொண்டிருக்கிற நடுராத்திரியில் நிகழ்வதுபோல இருக்கும். சூரிய அஸ்தமனத்திற்குமுன்பே, தன் கணக்கு வழக்குகளைச் செவ்வைப்படுத்திக்கொண்டவனுக்கு அது நன்றாகவே இருக்கும். தனக்கும் தன் சக மனிதர்களுக்கும் இடையேயுள்ள அவனது எல்லாக் கிரியைகளுக்ம் சரியானதாகவும், நடத்தைகள் நியாயமானதகவும் இருக்கவேண்டும். அனைத்து நேர்மையற்ற செயல்களும், பாவம் நிறைந்த நடவடிக்கைகளும் வெகுதூரத்திற்குப் புறக்கணித்துட் தள்ளப்படவேண்டும். நமது விளக்குகளுடன் நமது கிண்ணங்களில் கிருபையின் எண்ணெயுங்கூட இருக்க வேண்டும். தேவ பக்தியின் வேஷத்தை தரித்து அதன் பலனை மறுதலிக்கக்கூடிய, அவரது சாயலும் மேலெழுத்தும் இல்லாத நிலையிலும், கிறிஸ்துவை நோக்கி, கர்த்தாவே, கர்த்தாவே, என்று கூப்பிடுகிற ஆத்துமாவின் நிலையானது, உண்மையிலேயே கவலைக்கிடமானதாகத்தான் இருக்கும்... Mar 93.2

தேவன் கிருபையாக தவணையின் ஒரு நாளையும், சோதனை, உபத்திரவம் ஆகிய ஒரு காலகட்டத்தையும் வழங்கியிருக்கிறார். “கர்த்தரைக் கண்டடையத்தக்க சமயத்தில் அவரைத் தேடுங்கள்; அவர் சமீபமாயிருக்கையில் அவரை நோக்கிக்கூப்பிடுங்கள்” (ஏசாயா 55:6) என்று அவர் அழைப்புக்கொடுக்கிறார்... Mar 93.3

இரக்கத்தின் குரல் அழைத்துக்கொண்டிருக்கிறது; இயேசு மனிதர்களை அவரது அன்பின் கயிறுகளால் கட்டி இழுத்துக்கொண்டிருக்கிறார்; ஆனால், இயேசு வெஞ்சினத்தின் ஆடையை அணியும் நாள் வரும்... உலகில் துன்மார்க்கம் ஒவ்வொருநாளும் பெருகிக்கொண்டிருக்கிறது. அது ஒரு குறிப்பிட்ட எல்லைக்கோட்டை அடையும்போது, பதிவேடு மூடப்பட்டு, கணக்கு வழக்குகளெல்லாம் முடிக்கப்படும். இனி பாவத்திற்காக பலி, தியாகம் எதுவும் இல்லை. இந்த பாவ உலகை நோக்கி, கர்த்தர் வருகிறார். அன்பின்-சகிப்புத்தன்மையின்-நீடிய பொறுமையின் ஒரு கரத்தை இரக்கமானது நீண்டகாலமாக நீட்டிவைத்திருக்கிறது. “எனது பெலத்தை பற்றிக்கொள்ளக்கடவான்...” என்ற அழைப்பு கொடுக்கப்பட்டாயிற்று; ஆனால், மனிதர்கள் அவர் இரக்கங்காட்டுகிறார் என்றெண்ணி, துணிகரங்கொண்டு, அவரது கிருபையை மறுத்துவிட்டார்கள். Mar 93.4

கர்த்தர் ஏன் தமது வருகையை இவ்வளவு தாமதித்துள்ளார்? காணாமற்போன இவ்வுலகிற்க்காக, இக்கடைசிப்பணியைச்செய்து முடிக்க, பரலோகத்தின் அனைத்து சேனைகளும் காத்துக்கொண்டிருக்கின்றன; எனினும், ஊழியம் தொடர்ந்து காத்துக்கொண்டிருக்கிறது; ஏனெனில், விளக்குகளுடன் கிருபையின் எண்ணெயும் தங்கள் கிண்ணங்களில் இருக்கிறது எனக்கூறுகின்ற சிலரும், உலகில் எரிந்து பிரகாசிக்கிற ஒளியாக மாறவில்லை; காரணம் என்னவெனில், தேவ ஊழியக்காரர்கள் வெகு சிலரே... Mar 94.1

ஒவ்வொரு வாரமும் எண்ணப்படும்பொழுது, நியாயத்தீர்ப்பு நாளின் காலத்தில் ஒரு வாரம் குறைகிறது; ஒவ்வொரு நாள் கடக்கும்பொழுதும் ஒரு நாள் நெருங்குகிறது. அந்தோ! பலர் உணர்ச்சிகளை சார்ந்திருக்கிறதும், மனக்கிளர்ச்சிகளால் ஆளப்படுகின்ற ஒரு மார்க்கத்தை, அதாவது நிலையற்ற ஒரு மார்க்கத்தை, அதாவது நிலையற்ற மார்க்கத்தைக்கொண்டிருக்கின்ற ஒரு பரிதாபமான நிலையிலும் காணப்படுகின்றனர். “முடிவு பரியந்தம் நிலைத்திருப்பவனே இரட்ச்சிக்கபடுவான்”” (மத். 10:22); எனவே இங்கள் இருதயங்களில் கிருபையின் எண்ணெய் உள்ளதா என்பதைப் பாருங்கள். அதை உடைமையாக்கக் கொண்டிருத்தலே நியாயத்தீர்ப்பில் உங்கள் நிலைமையைத் தீர்மானிககும்.⋆ Mar 94.2

வாக்குத்தத்த வசனம்: Mar 94.3

“அவர் காற்றுக்கு ஒதுக்காகவும், பெருவெள்ளத்டுக்குப் புகலிடமாகவும், வறண்ட நிலத்துக்கு நீர்க்கால்களாகவும், விடாய்ந்த பூமிக்குப் பெருங்கன்மலையின் நிழலாகவும் இருப்பார்.” — ஏசாயா 32:2. Mar 94.4