Go to full page →

ஒரே ஒரு பாதுகாப்பான வழி!, பிப்ரவரி 18 Mar 97

“நீங்கள் சோதனைக்குட்ப்படாதபடிக்கு விழித்திருந்து ஜெபம் பண்ணுங்கள்:...” - மத்தேயு 26:41 Mar 97.1

தேவனுடைய மீதியான மக்கள் விழித்தெழத்தக்கதாக நான் என்ன சொல்வேன்?... கிறிஸ்துவின் நாமத்தை அறிக்கை செய்கிறவர்கள், நியாயத்தீர்ப்பிற்க்கு மிங்கூட்டியே ஆயத்தமாயிருக்கவும், நமது செயல்களைப்பதிவு செய்கின்ற தேவதூதன் அவர்கள் பெயருக்கு எதிரில் மன்னிக்கப்பட்டது என எழுதவுந்தக்கதாக, தங்களைத்தாங்களே மிகவும் கவனமாகச் சோதனையிட்டு, தங்களது அனைத்துப் பாவங்களையும் முழுமையாக அறிக்கையிடுமாறு நான் எச்சரிக்கிறேன். எனது சகோதரனே! எனது சகோதரியே! இந்த விலையேறப்பெற்ற கிருபையின் காலத்தை பயன்படுத்திக்கொள்ளாவிட்டால், நீங்கள் சாக்குப்போக்கிற்கு இடமில்லாமல் விடப்படுவீர்கள். நீங்கள் விழித்தெழுவதற்கு விசேஷ முயற்சி எடுக்காமல், மனந்திரும்புவதற்க்கு துடிப்புடன் செயல்படாமல் இருந்தால், இந்த பொன்னான மணித்துளிகள் சீக்கிரம் கடந்து போகும்; பின்பு நீங்கள் தராசில் நிறுக்கப்பட்டு, குறையாகக் கானப்படுவீர்கள். Mar 97.2

“விழித்திருந்து ஜெபம்பண்ணுங்கள்” என்ற எச்சரிப்பில் இயேசு பாதுகாப்பான ஒரே வழியை நமக்குச் சுட்டிக்காட்டியுள்ளார். விழித்திருப்பது அவசியமாயிருக்கிறது. நமது சொந்த இருதயம் வஞ்சகமுள்ளது. நாம் மனிதனுக்குரிய நலிவு, பெலவீனம் ஆகியவற்றுடன் தான் இருக்கிறோம். சாத்தான் நம்மை அழிப்பதற்கு நோக்கமாயிருக்கிறான். நாம் சில வேளைகளில் பாதுகாப்பற்று இருக்கலாம்; ஆனால், நமது எதிராளி ஒருபோதும் சோம்பலாக இருப்பதில்லை. அவனது சோர்ந்துபோகாத எச்சரிக்கையுள்ள தன்மையை அறிந்திருக்கிற நாம், மற்றவர்களைப்போல நித்திரையாயிருந்துவிடாமல், “தெளிந்த புத்தியுள்ளவர்களாய் விழித்திருக்க வேண்டும்.” உலகத்தின் ஆவி, செல்வாக்கு ஆகியவைகளை நாம் சந்திக்க வேண்டும்; ஆனால், அவை நம் மனதையும், இதயத்தையும் ஆண்டுகொள்ள அனுமதிக்கக்கூடாது. Mar 97.3

நித்திய ஒளியில் காண்பது போன்று உங்கள் இதயத்தை கவனமாகச் சோதனையிடுங்கள். உங்கள் சோதனயினின்று ஒன்றையும் மறைக்கவேண்டாம். ஆராயுங்கள்! நீங்கள் உயிர்பிழைக்கத்தக்கதாக ஆராயுங்கள்; உங்களை நீங்களே நியாயம் விசாரித்து தீர்ப்பளித்துக்கொள்ளுங்கள்; பின்பு விசுவாசத்தினால், உங்கள் கிறிஸ்தவ குணத்திலிருக்கும் கறைகளை அகற்ற, கிறிஸ்துவின் சுத்திகரிக்கும் இரத்தத்தை உரிமைகொண்டாடிப் பெற்றுகொள்ளுங்கள். உங்களை நீங்களே புகழ்ந்துகொண்டு, சாக்குபோக்குச் சொல்லிக்கொள்ளாதீர்கள். உங்கள் ஆத்துமாவோடு உண்மையுடன் செயல்படுங்கள்; பின்பு, உங்களை நீங்கள் ஒரு பாவியாகக் காணும்போது, நொறுங்கியவர்களாக சிலுவையின் முன்பாக விழுங்கள். மாசுபட்டிருக்கும் உங்களை இயேசு ஏற்றுக்கொள்வார். தமது இரத்தத்தால் உங்களை கழுவி, அனைத்து மாசுகளினின்றும் உங்களை சுத்திகரித்து, பரிசுத்தமும் ஒற்றுமையும் நிறைந்த பரலோகத்தின் தேவத்தூதர்களின் சமுதாயத்தில் அங்கம் வகிக்கத்தக்கதாக தகுதிப்படுத்துவார். எவ்வித முரண்பாடோ, கருத்து வேறுபாடோ அங்கு இல்லை. அங்கே இருப்பதெல்லாம் ஆரோக்கியமும், சந்தோஷமும், மகிழ்ச்சியுமே. Mar 98.1

இவ்வுலகம் அந்த உயர்ந்த பள்ளிக்குச் செல்வதற்கான ஒரு பயிற்சிக்கூடம். வரப்போகும் வாழ்விற்க்கு ஆயத்தமாவதற்கே இந்த வாழ்வு. பரலோக மன்றங்களில் பிரவேசிக்க ஆயத்தப்படவே இங்கு நாம் இருக்கின்றோம். ஒளியின் பரிசுத்தர்களின் குடும்பத்தில் அங்கம் வகிக்க ஆயத்தமாகும்வரை, சத்தியத்தை ஏற்றுக்கொண்டு, அதை நம்பி, நடைமுறைப்படுத்தவே, நாம் இங்கு இருக்கின்றோம்.⋆ Mar 98.2

வாக்குத்தத்த வசனம்: Mar 98.3

“உன் பிள்ளைகளெல்லாரும் கர்த்தரால் போதிக்கப்பட்டிருப்பார்கள்; உன் பிள்ளைகளுடைய சமாதானம் பெரியதாகும்.” - ஏசாயா 54:13 Mar 98.4