Go to full page →

கீழ்ப்படிதலினால் ஏற்படும் மகிழ்ச்சி! , மார்ச் 12 Mar 141

“கர்த்தாவே, உம்முடைய இரட்சிப்பின்மேல் ஆவலாக இருக்கிறேன்; உம்முடைய வேதம் என் மனமகிழ்ச்சி.” — சங்கிதம் 119:174. Mar 141.1

கிறிஸ்துவின் நுகமானது, தனது கழுத்தைத் தாக்கக்கூடியதாக இருக்கிறதென்று உண்மையான கிறிஸ்தவன் ஒருபோதும் சொல்ல மாட்டான். இயேசுவிற்குச் செய்யும் சேவையை உண்மையான விடுதலை என்று எடுத்துக்கொள்கிறான். தேவனுடைய பிரமாணம் அவனுடைய மகிழ்ச்சியாக இருக்கிறது. தெய்வீகப் பிரமாணங்களை தனது குறைபாடுகளுக்கு எற்றாற்போல், மட்டந்தட்டாமல், அந்தப் பிரமாணங்களின் பூரணத்துவ நிலைக்கு எற்றாற்போல் உயரவேண்டுமென்று தொடர்ந்து முயற்சிக்கிறான். Mar 141.2

தேவனுடைய அந்த நாளில், நாம் நிற்பதற்கு ஆயத்தமாக வேண்டுமானால், அத்தகைய அனுபவம் நம்முடையதாக இருக்க வேண்டும்; இப்பொழுது, இன்னும் தவணையின் காலம் தயங்கி நிற்கும்பொழுது, இரக்கத்தின் குரல் இன்னமும் கேட்கப்படும் பொழுது, நமது பாவங்களை விட்டொழிக்க இதுவே தருணம் என்று அறிய வேண்டும்.. Mar 141.3

ஆண்டவரின் வருகைக்காக ஆயத்தப்பட்டுக்கொண்டிருக்கும் நாம், எக்காரியத்திலும் குறைவுபட்டுக் காணப்படாமல், அவரது கிருபையிலே நிறைவுபெற்றவர்களாக நிற்கத்தக்கதாக போதிய காரியங்களை தேவன் நமக்கு முன்னேற்பாடாகச் செய்துவைத்திருக்கிறார். நீங்கள் ஆயத்தமாக இருக்கிறீர்களா? கல்யாண வஸ்திரத்தை தரித்துக்கொண்டிருக்கிறீர்களா? வஞ்சித்தல், தூய்மையற்ற நிலை, ஊழல் அல்லது மாய்மாலம் போன்ற காரியங்களை இந்த வஸ்திரம் ஒருபோதும் மூடிமறைக்காது. தேவனுடைய கண் உங்கள்மீது வைக்கப்பட்டுள்ளது.. மனிதரின் கண்களுக்கு நமது பாவங்களை நாம் மறைத்துவைத்துக்கொள்ளலாம்;ஆனால், எதையுமே நம்மை உண்டாக்கியவரிடத்தில் நாம் மறைத்துவைக்க முடியாது. Mar 141.4

தேவன் நமது பாவங்களுக்காக தமது சொந்தக் குமாரனென்றும் பாராமல், அவரை மரணத்திற்கு ஒப்புக்கொடுத்து, நாம் நீதிமான்களாகத்தக்கதாக, அவரை உயிரோடேயெழுப்பினார். கிறிஸ்துவின் மூலமாக, அந்தக் கிருபையின் சிங்காசனத்தண்டையில், அவர் முன்னிலையில், நமது விண்ணப்பங்களை வைக்கலாம். தகுதியற்ற நிலையிலிருக்கும் நாம், அவர்மூலமாக ஆவிக்குரிய ஆசீர்வாதங்கள் அனைத்தையும் பெற்றுக்கொள்ளலாம். நாம் நித்திய ஜீவனைப் பெற்றுக்கொள்ளத்தக்கதாக அவரிடத்தில் வருகின்றோமா? Mar 142.1

அவரது பரிசுத்த பிரமாணத்தின் கொள்கைகளின் தேவனுடைய சித்தம் வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது. இந்தப் பிரமாணத்தின் கொள்கைகளே பரலோகத்தின் கொள்கைகளாகும். தேவனுடைய சித்தத்தை அறிவதைவிட, பரலோகத்தின் தூதர்கள் வேறு எந்த உயர்ந்த அறிவையும் பெற்றுக்கொள்கிறதில்லை. அவர்களது வல்லமைகளை, உயர்ந்த சேவையில் ஈடுபடுத்திக்கொள்வதே அவரது சித்தத்தைச் செய்வதாகும். Mar 142.2

ஆனால் பரலோகத்தில் சட்டப்பூர்வமான ஆவியிலே சேவை செய்யப்படவில்லை. சாத்தான் யேகோவாவின் பிரமாணத்திற்கு ஏதிராகக் கலகஞ்செய்தபோது, பிரமாணம் என்ற ஒன்று இருக்கிறது என்று சிந்தனையானது, இதுவரை நினைக்காத காரியத்தைக் குறித்து ஏறக்குறைய ஒரு திடீர் விழிப்பு ஏற்பட்டதுபோலிருந்தது. தேவ தூதர்கள் தங்களது ஊழியத்திலே, வேலைக்காரர்களைப்போல இல்லாமல், குமாரர்களைப்போல இருக்கிறார்கள்.. கீழ்ப்படிதலானது அவர்களுக்கு அடிமை வேளையைப்போல் இருக்கவில்லை. தேவனிடத்தில் அவர்கள் கொண்டிருந்த அன்பானது, அவர்களது சேவையை மகிழ்ச்சியான ஒரு காரியமாக மாற்றுகிறது மகிமையின் நம்பிக்கையாகிய கிறிஸ்து வாழுகின்ற ஒவ்வொரு ஆத்துமாவிலும் அவரது பின்வரும் வாரத்தைகள் மீண்டும் எதிரொலிக்கிறது: “ஆ, என் தேவனே, உமது சித்தத்தைச் செய்ய விரும்புகிறேன். உமது பிரமாணம் என் இதயத்துக்குள் இருக்கிறது.”⋆ Mar 142.3

வாக்குத்தத்த வசனம்: Mar 142.4

“சாந்தகுணமுள்ளவர்கள் பூமியைச் சுதந்த்ரித்து, மிகுந்த சமாதானத்தினால் மனமகிழ்ச்சியாயிருப்பார்கள்.” - சங்கிதம் 37:11 Mar 142.5