Go to full page →

முன்னேறுவதற்கான இரகசியம்! , மார்ச் 19 Mar 155

“ஜனங்களே, எக்காலத்திலும் அவரை நம்புங்கள்; அவர் சமுகத்தில் உங்கள் இருதயத்தை ஊற்றிவிடுங்கள்; தேவன் நமக்கு அடைக்கலமாயிக்கிறார்.” - சங்கீதம் 62:8. Mar 155.1

தெய்வீக வாழ்க்கையிலே நாம் முன்னேற்றமடையவேண்டும் என்றால், நாம் அதிகமாக ஜெபத்தில் தரித்திருக்க வேண்டும். சத்தியத் தூதானது முதன்முதலாக கூறியறிவிக்கப்பட்டபொழுது, நாம் எவ்வளவு அதிகமாக ஜெபித்தோம். வீட்டிலுள்ள அறையிலும், தானியம் சேர்த்துவைக்கப்பட்டிருக்கும் இடங்களிலும், பழத்தோட்டங்களிலும், சோலைகளிலும் மற்றவர்களுக்காகப் பறித்து ஜெபிக்கும் மன்றாட்டின் குரல் எவ்வளவாக அடிக்கடி காதுகளில் தொனித்தது. அடிக்கடி இரண்டு மூன்று பேராக இணைந்து, வாக்குத்தத்தத்தின் உரிமையைக் கோரி, மணிக்கணக்காக ஊக்கமான ஜெபத்தில் ஈடுபட்டோம். அடிக்கடி அழுகையின் குரல் காதுகளில் தொனித்தது; பின்னர், நன்றிசொலுத்துதலின் குரலும், துதியின் குரலும் கேட்கப்பட்டது. நாம் இந்த சத்தியத்தை முதலாவது விசுவாசித்த நாட்களைவிட, தேவனுடைய நாள் மேலும் அதிகமாக நெருங்கிவிட்டது. அந்த ஆரம்ப நாட்களைவிட, மேலும் அதிக ஊக்கத்தோடும் உற்சாகத்தோடும் விருப்பத்தோடுகூடிய ஆர்வத்தோடும் நாம் காத்திருக்க வேண்டும். நமக்கு வரவிருக்கின்ற ஆபத்துகள் முன்பைவிட மிகவும் பயங்கரமாக இருக்கின்றன. Mar 155.2

இயேசு தமது பூலோக வாழ்வின் களத்திலே, தனித்து ஜெபித்த மணிவேளைகளில் தான் ஞானத்தையும் வல்லமையையும் பெற்றார். நமது வாலிபர்கள் அதிகாலையிலும் மாலையிலும் இந்த அனுமதியான மணிவேளைகளில் நேரம் கண்டுபிடித்து, இயேசுவின் மாதிரியைப் பின்பற்றி, தங்களது பரலோகப் பிதாவுடன் ஆன்மீக உறவுகொள்ள வேண்டும். நாள் முழுவதும் தங்களது இதயங்களை தேவனிடத்தில் உயர்த்தட்டும். நாம் எடுத்துவைக்கும் ஒவ்வொரு காலடியிலும் அவர் நம்மை நோக்கி: ” உன் தேவனாயிருக்கிற கர்த்தராகிய நான் உன் வலதுகையைப் பிடித்து: ... பயப்படாதே, நான் உனக்குத் துணைநிற்கிறேன்” (ஏசாயா 41:13) என்று கூறுகிறார். நமது பிள்ளைகள் தங்களது வாழ்வின் ஆரம்பகாலங்களிலேயே, இந்தப் பாடத்தைக் கற்றுக்கொள்ளக் கூடுமானால், எத்தகைய புத்துணர்வும் வல்லமையும், எத்தகைய மகிழ்ச்சியும் இனிமையும் அவர்களது வாழ்க்கையிலே காணப்படும்! Mar 155.3

ஜீவனுள்ள தேவனுக்காக, உங்கள் இதயம் கொண்டிருக்கும் ஏக்கத்தினால், அது உடையட்டும், மானுடமானது தெய்வீகத் தன்மைக்குப் பங்காளியாவதின்மூலம், என்ன செய்யமுடியுமென்பதை கிறிஸ்துவின் வாழ்க்கை நமக்குக் காட்டியிருக்கிறது, கிறிஸ்து தேவனிடமிருந்து பெற்றுக்கொண்ட அனைத்தையும் நாமும் பெற்றுக்கொள்ளமுடியும்; அப்படியானால் கேளுங்கள்; பெற்றுக்கொள்ளுங்கள். யாக்கோபின் விடாப்பிடியான விசுவாசத்தோடும், எலியாவின் விட்டுக்கொடுக்காத உறுதியான பிடிவாதத்தோடும், தேவன் வாக்குத்தத்தம்பண்ணியிருக்கும் அனைத்தையும் உரிமைகோரி மன்றாடுங்கள். Mar 156.1

தேவனைப்பற்றி மகிமையான கருத்துக்களை உங்கள் உள்ளம் உடைமையாக வைத்திருக்கட்டும். இயேசுவின் வாழ்க்கையோடு உங்களது வாழ்வின் அந்தரங்கமான் இணைப்புகள் பின்னிப் பிணைந்திருக்கட்டும். இருளிலிருந்து வெளிச்சம் பிரகாசிக்கக்கடவது என்று கட்டளையிட்ட தேவன், உங்களது இதயத்திலும் பிரகாசிக்க விருப்பத்தோடு இருக்கிறார். இயேசு கிறிஸ்துவின் முகத்திலுள்ள தேவனுடைய மகிமைபற்றிய அறிவின் வெளிச்சத்தைக் கொடுக்க விரும்புகிறார். பரிசுத்த ஆவியானவர் தேவனுடைய காரியங்களை எடுத்து உங்களுக்குக் கட்டுவார்.. எல்லையற்ற பரம் பொருளின் நுழைவாயிலிற்கு கிறிஸ்து உங்களை நடத்திச் செல்லுவார். திரைக்கு அப்பாலுள்ள மகிமையை நீங்கள் காணலாம். நமக்காகப் பரிந்துபேசத்தக்கதாக, என்றும் வாழ்கின்ற அவர், போதிய தகுதி உடையவர் என்பதை மனிதருக்கு வெளிப்படுத்தலாம்.⋆ Mar 156.2

வாக்குத்தத்த வசனம்: Mar 156.3

“நீதியினால் ஸ்திரப்பட்டிருப்பாய்; கொடுமைக்குத் தூரமாவாய்; பயமில்லாதிருப்பாய்; திகிலுக்குத் தூரமாவாய், அது உன்னை அணுகுவதில்லை.” - ஏசாயா 54:14. Mar 156.4