Go to full page →

வேதாகமத்தின்படி பரிசுத்தமாகுதல் என்பதன் பொருள் விளக்கப்படுதல்! , மார்ச் 22 Mar 161

“உம்முடைய சத்தியத்தினாலே அவர்களைப் பரிசுத்தமாக்கும்; உம்முடைய வசனமே சத்தியம்.” - யோவான் 17:17. Mar 161.1

சத்தியத்தின்மூலமாக பரிசுத்தமாக்கப்பட்டவர்கள், அந்த சத்தியத்தின் வல்லமையை, எடுத்துச்சொல்லுகின்ற உயிரோட்டமுள்ள பரிந்துரைகளாகவும் உயிர்த்தெழுந்த ஆண்டவரின் பிரிதிநிதிகளாகவும் இருக்கிறார்கள். கிறிஸ்துவின் மார்க்கமானது விருப்பத்தை மேம்படுத்தி, தீர்மானங்களைப் பரிசுத்தப்படுத்தி, ஆத்துமாவைத் தூய்மைப்படுத்தி, உயர்த்தி மேன்மையடையச் செய்கிறது; மேலும், பரலோக தூதர்களின் கூட்டுறவிற்கு கிறிஸ்தவனை மேலும்மேலும் தகுதியுள்ளவனாக்குகிறது. Mar 161.2

“அவர்களும் சத்தியத்தினாலே பரிசுத்தமாக்கப்பட்டவர்களாகும்படி, அவர்களுக்காக நான் என்னைத்தானே பரிசுத்தமாக்குகிறேன்” - யோவான் 17:19; “ஆகையால் நீங்கள் மாயமற்ற சகோதர சிநேகமுள்ளவர்களாகும்படி, ஆவியினாலே சத்தியத்திற்குக் கிழ்ப்படிந்து, உங்கள் ஆத்துமாக்களைச் சுத்தமாக்கிக்கொண்டவர்களாயிருக்கிறபடியால், சுத்த இருதயத் தோடே ஒருவரிலொருவர் ஊக்கமாய் அன்புகூருங்கள்” - 1 பேதுரு 1:22; “இப்படிப்பட்ட வாக்குத்தத்தங்கள் நமக்கு உண்டாயிருக்கிறபடியினால், பிரியமானவர்களே, மாம்சத்திலும் ஆவியிலும் உண்டான எல்லா அசுசியும் நீங்க, நம்மைச் சுத்திகரித்துக்கொண்டு, பரிசுத்தமாகுதலைத் தேவபயத்தோடே பூரனப்படுத்தக்கடவோம்” - 2 கொரிந்தியர் 7:1. Mar 161.3

இங்கு வேதாகமத்தின்மூலமாக, பரிசுத்தமாக்கப்படுதலை நாம் காண்கிறோம். இது வெறுமனே ஒரு காட்சியும் அல்ல; அல்லது வெளிப்படையாக நடைபெறும் பணியும் அல்ல. இது சத்திய வாய்க்காலின்மூலமாகப் பெற்றுக்கொண்ட பரிசுத்தமாகுதலாகும். இதயத்திலே ஏற்றுக்கொள்ளப்பட்டு, வாழ்க்கையிலே செயல் முறைப்படுத்தப்பட்ட சத்தியமாகும். Mar 161.4

சத்தியத்தின் ஒரு பகுதியை பின்புறமாகத் தள்ளிப்போடுகிறவர்களுக்கு, வேதாகமத்தின்மூலமாக பரிசுத்தமாகுதல் கிடைப்பது இல்லை. தேவனுடைய வார்த்தையிலே போதுமான வெளிச்சம் கொடுக்கப்பட்டுள்ளது; எனவே, எவரும் தவறுசெய்ய அவசியம் இல்லை...ஒரு மனிதனாக எண்ணிப்பார்க்கப்பட்ட இயேசு பூரணராக இருந்தார்; எனினும், அவர் கிருபையில் வளர்ந்தார். “இயேசு, பெருமான் ஞானத்திலும், வளர்த்தியிலும், விருத்தியடைந்தார்” - லூக்கா 2:52. மிகவும் பூரணமான ஒரு கிறுஸ்தவனுங்கூட தேவனைப்பற்றிய அறிவிலும் அன்பிலும் தொடர்ந்து பெருக முடியும்... பரிசுத்தமாக்கப்படுதல் என்பது ஒரு கணத்திலோ, ஒரு மணிநேரத்திலோ, அல்லது ஒரு நாளிலோ நடைபெறுகின்ற வேலை அல்ல. அது கிருபையிலே தொடர்ந்து வளரும் வளர்ச்சியாக இருக்கிறது... சாத்தானும் உயிரோடிருந்து சுறுசுறுப்பாகச் செயல்பட்டுக்கொண்டிருக்கிறதினால், அவனை எதிர்த்துப் போராடத்தக்கதாக நாம் ஒவ்வொரு நாளும் உதவியை நாடி,தேவனிடத்தில் ஊக்கமாக மன்றாடி, கதறவேண்டும். சாத்தான் ஆளுகைசெய்யும் காலம்வரை, நம்மால் அடக்கப்படவேண்டிய சுயமுமுண்டு; மேற்கொள்ளப்படவேண்டிய தொடரும் பாவங்களும் உண்டு. இந்த முயற்சிகளை எல்லாம் இங்கு நிறுத்திவிடலாம் என்று சொல்லத்தக்கதான இடமும் கிடையாது. நாம் முற்றிலும் தெரிவித்தோம்; எல்லாம் அடைந்தாயிற்று என்று துல்லியமாகச் சொல்லத்தக்கதான ஒரு அளவிற்கான படிநிலையும் கிடையாது... Mar 162.1

கிறிஸ்தவனின் வாழ்க்கையானது, நிலையாக - தொடர்ந்து அணியிலே முன்னேறிச்செல்வதைப் போன்றதாகும். இயேசு தமது மக்களை புடமிடுபவராகவும் சுத்திகரிக்கிறவராகவும் இருக்கிறார். அவர்களிலே தமது சாயல் முழுமையாகப் பிரதிபலிக்கும்பொழுது, அவர்கள் பூரணராகவும் பரிசுத்தராகவும் உயிர்த்தெழுதலைப் பெறுவதற்கு ஆயத்தமுள்ளவர்களாகவும் இருப்பார்கள்.⋆ Mar 162.2

வாக்குத்தத்த வசனம்: Mar 162.3

“செம்மையானவர்களுக்கு இருளிலே வெளிச்சம் உதிக்கும்; அவன் இரக்கமும் மன உருக்கமும் நீதியுமுள்ளவன்.” - சங்கீதம் 112:4. Mar 162.4