Go to full page →

அத்தியாயம் 33 - பாபிலோனின் பாவங்கள் GCt 94

இரண்டாம் தூதனின் எச்சரிப்பிற்கு பின், பல திருச்சபைகளில் நிலவிய நிலையை நான் கவனித்தேன். ‘கிறிஸ்துவை பின்பற்றுகிறவர்கள்’ என்கிற நாமத்தை தரித்துக் கொண்டு, மிகுதியாக கெட்டுப்போயிருந்தார்கள். உலகத்திற்கும் அவர்களுக்குமிடையே வித்தியாசங்கள் காணப்படவில்லை. ஊழியர்கள் தேவ வசனத்தைக் கூறி, மாமிசத்தை திருப்திப்படுத்தும் செய்தியை பிரசங்கித்தார்கள். இதற்கு மனிதரின் இருதயங்களில் தடை ஏதும் இல்லை. மாமிச இருதயத்தில் கிறிஸ்துவின் இரட்சிப்பிற்கும், சத்தியத்தின் வலிமைக்கும், பரிசுத்த ஆவியானவருக்கும் மட்டுமே தடை இருந்தது. இவ்விதமாக பிரபலமடைந்திருந்த ஊழியத்தில், சாத்தானின் கோபத்தை கிளறவோ, பாவியை நடுங்க வைக்கவோ, நியாயத்தீர்ப்பின் உண்மையை விளக்கிக் காட்டவோ, இடமில்லாதிருந்தது. உண்மையான தெய்வீகத்தன்மையில்லாத நிலையை துன்மார்க்கர் விரும்பி, அத்தகைய சபையை ஆதரித்தார்கள். முழுமையான நீதியின் கவசமேயல்லாமல் வேறொன்றும் அந்தகாரத்தின் வல்லமையை மேற்கொள்ள இயலாது. திருச்சபைகளை ஒரு சரீரமாக சாத்தான் ஆட்கொண்டிருந்தான். தேவ வசனங்களின் கூர்மையான சத்தியத்திற்கு பதிலாக, மனிதர்களின் வசனிப்பும், செய்கைகளும் சபைகளில் தியானிக்கப்பட்டது. உலகத்தின் நட்பும், ஆவியும் தேவனின் பகைகளாகும். எளிமையும் வலிமையுமான சத்தியம், இயேசுவில் காணப்பட்டது போல, உலக ஆவியை எதிர்கொள்ள ஆரம்பித்தால், அங்கு துன்புறுத்துதல் உண்டாகும். தங்களை கிறிஸ்தவர்கள் என அழைத்துக்கொள்ளும் அநேகரிடம் தேவனைப்பற்றிய ஞானம் இல்லாதிருந்தது. அவர்கள். வேறு பெயரைக் கொண்ட சாத்தானின் விசுவாசமுள்ள ஊழியக்காரர்கள் என்பதை அறியாதிருக்கிறார்கள். GCt 94.2

இயேசு பரலோகக் கூடாரத்தில், பரிசுத்த ஸ்தலத்திலிருந்து அடுத்த பகுதிக்கு சென்றதை நான் கண்டேன். இச்சமயத்திலிருந்து, தங்களை கிறிஸ்தவர்கள் என அழைத்துக்கொண்டு, அநேக பாவங்களையும், இழிவான தீமைகளையும் இத்திருச்சபைகள் சேகரித்துக்கொண்டதை நான் கண்டேன். அவர்களுடைய அறிக்கைகளும், ஜெபங்களும், எச்சரிப்புகளும் தேவனுடைய பார்வையில் அருவறுப்பானவைகளாக இருந்தன. “இவர்களுடைய கூட்டங்களில் தேவன் வாசம் பண்ணமாட்டார்” என தூதன் சொன்னான். மனச்சாட்சியின் உந்துதல் இல்லாமல், சுயநலத்தையும், வஞ்சனையையும், சூதையும் அவர்கள் பின்பற்றி வந்தார்கள். இவை அனைத்தையும் மதப்போர்வையால் மூடிக்கொண்டார்கள். இச்சபைகளின் தற்பெருமையை நான் கண்டேன். அவர்களிடம் தேவச்சிந்தை இல்லாமல் சுயச்சிந்தையே இருந்தது. அழியக்கூடிய சரீரங்களை அலங்கரித்து, பெருமையுடன் பார்த்து, திருப்தியடைந்தார்கள். இயேசுவும் அவருடைய தூதர்களும் இதனைக் கண்டு கோபம் கொண்டார்கள். அவர்களுடைய பெருமையும், பாவங்களும் பரலோகத்தை சென்றடைந்தன. அவர்களுடைய பங்கு ஆயத்தமானது. நீண்ட காலமாக உறங்கிக்கொண்டிருந்த நீதியும் நியாயமும் விரைவில் விழித்தெழும்பும். “பழிவாங்குதல் எனக்குரியது, நானே பதிற்செய்வேன்” என்று கர்த்தர் சொல்லுகிறார். மூன்றாம் தூதனின் அச்சுறுத்தல்கள் நிஜமாகி, தேவனுடைய கோபாக்கினையின் உக்கிரத்தை அவர்கள் குடிக்க வேண்டும். திருச்சபைகளும், மதக்குழுக்களும் தீய தூதர்களால் நிரம்பி இருந்ததை நான் கண்டேன். மிகவும் திரளான பாவங்களும், கொடிய குற்றங்களும் மதப்போர்வையினால் மூடப்பட்டிருப்பதை கண்டு, அத்தூதர்கள் பேருவகையடைந்தார்கள். GCt 95.1

கர்த்தரின் சாயலில் படைக்கப்பட்ட மனிதன், சீர்குலைந்து, சகமனிதர்களின் தூண்டுதலால் கறைப்பட்டு, சிரழிந்து நிற்பதை பரலோகம் வருத்தம் நிறைந்த கோபத்துடன் கண்டது. மனித வேதனைகளை கண்டு மனதுருகிய இரட்சகரின் நாமத்தை தரித்துக்கொண்டு, இந்த மக்கள் இத்தகைய கொடும் பாவங்களில் தழைத்திருப்பதை கண்டேன். இவை அனைத்தையும் தேவதூதர்கள் பதிந்துக்கொண்டார்கள். புஸ்தகத்தில் எழுதப்பட்டாகிவிட்டது. அதே சமயத்தில், பக்தி-நிறைந்த புருஷர்களின் கண்ணீரும், ஸ்திரிகளின் கண்ணீரும் பரலோகத்தில் துருத்தியில் வைக்கப்பட்டிருக்கின்றன. மனிதனின் மனக்கிலேசங்கள் அனைத்து இடங்களிலும் பரப்பப்பட்டு வந்தது. தேவன் தமது உக்கிரத்தை இன்னும் சில காலங்களுக்கு கட்டுப்படுத்தி வைத்திருந்தார். இத்தகையான வேதனைகளின் வியாபாரங்களில் ஈடுபட்டிருந்த மதஅமைப்புகளின் மீது தேவன் வெகுவாக சினங்கொண்டிருந்தார். கிறிஸ்துவின் நாமத்தை தரித்துக்கொண்டு திரிந்த அநேகர், இத்தகைய அநீதிகளையும், கொடுங்கோலாட்சிகளையும், இதயமற்ற அலட்சியத்தோடு கவனித்துவந்தார்கள். மேலும் அநேகர், இத்தகைய வெறுப்பான காரியங்களில் திருப்தியடைந்ததோடு, தேவனையும் தைரியமாக வழிபட்டு வந்தார்கள். இஃது பயபக்தியுடன் கூடிய நிந்தையாகும். சாத்தான் இதனிமித்தமாக குதூகலித்து, இயேசுவையும் அவருடைய சீடர்களையும் “கிறிஸ்துவின் சீடர்கள் இப்படிப்பட்டவர்கள்” என்று கேலி செய்தான். GCt 95.2

இந்த பெயரளவு கிறிஸ்தவர்கள், இரத்தச் சாட்சிகளின் பாடுகளை படிக்கும்போது, கண்ணீர் வடித்தார்கள். ஆகிலும், அவர்களே பலரை துன்புறுத்தினார்கள். அதுமாத்திரமல்ல. இயற்கையின் உறவை துன்டித்து, ஒவ்வொறு நாளிலும் தேவனுடைய பிள்ளைகளுக்கு மிக கொடூரமான தண்டனைகளை அளித்துக்கொண்டிருந்தார்கள். திருச்சபையின் அங்கமாக இருந்து இவர்கள் செயல்படுத்திய இதயமற்ற கொடுமைகள், புறஜாதியார் சத்தியத்தின் பிள்ளைகளின் மீது தொடுத்த கொடுமைகளுக்கு நிகராக இருந்தது. இதனை கவனித்து வந்த தேவதூதன், “தேவனின் நியாயத்தீர்ப்பு நாளிலே இவர்களுக்கு நேரிடுகிறதைப் பார்க்கிலும் புறஜாதியாருக்கு நேரிடுகிறது இலகுவாக இருக்கும்” எனக் கூறினான். கர்த்தரின் சாயலில் படைக்கப்பட்ட ஒருவன் தனது சகோதரருக்கு இழைக்கக்கூடிய அநீதிகளையும் கொடுமைகளையும் பரலோகம் கவனித்துக்கொண்டிருந்தது. “இக்கொடுமைகளை செய்தவர்களின் நாமங்கள் இரத்தத்தினால் எழுதப்பட்டு, வேதனைமிகு பாடுகளின் கண்ணீரால் நிரப்பப்பட்டுள்ளது” என்று ஒரு தூதன் சொன்னான். பாபிலோனுக்கு இரட்டிப்பாக தண்டனையை கொடுக்காமல், தேவனின் கோபம் தனியப்போவதில்லை. “அவள் உங்களுக்குப் பலனளித்தது போல நீங்களும் அவளுக்கு பலனளியுங்கள்; ... அவள் உங்களுக்கு கலந்துகொடுத்த பாத்திரத்தில் இரட்டிப்பாக அவளுக்குக் கலந்து கொடுங்கள்”, என்கிற சத்தம் வானத்திலிருந்து உண்டாயிற்று. GCt 96.1

அறியாமையிலே, அடிமையாக பலரை சிறை வைத்ததற்காக, சாத்தான் விளக்கமளிக்கவேண்டியதை நான் கண்டேன். இத்தகைய அடிமையின் பாவங்கள் அனைத்தும் சாத்தானின் தலை மீது சுமத்தப்படும். ஆகிலும், தேவனை அறிந்துக்கொள்ளாத அடிமையை பரத்திற்கு எடுத்துச் செல்ல இயலாது. தேவனைக் குறித்தும், வேதத்தைக் குறித்தும் அவர்கள் அக்கறை கொள்ளாததே அதற்கு காரணம். ஆகிலும், இந்த அடிமைகளின் அதிபதியாகிய சாத்தான், கடைசி ஏழு வாதைகளையும் அனுபவித்து, இரண்டாம் உயிர்த்தெழுதலின் போது மீண்டும் எழுந்து, இரண்டாவது முறையாக, பயங்கரமான மரணத்தை தழுவுவான். அப்பொழுது தான் GCt 96.2

தேவனின் உக்கிரம் தனியும்.
பார்க்க : ஆமோஸ் 5 : 21
ரோமர் 12 : 19
வெளி 14 : 9-10; 18 : 6