Go to full page →

அத்தியாயம் 36 - யாக்கோபின் உபத்திரவ வேளை GCt 101

பரிசுத்தவான்கள், நகரங்களையும் கிராமங்களையும் விட்டு, தனிமையான இடங்களில் கூடி வாழ்வதை நான் கண்டேன். தேவதூதர்கள் அவர்களை போஷித்து வந்தார்கள். துன்மார்க்கரோவெனில், பசியினாலும் தாகத்தினாலும் வாடினார்கள். பின்பு, உலகத்தின் முக்கிய பிரமுகர்கள் கூடி, ஆலோசனை நடத்தியபோது, சாத்தானும் அவனுடைய தூதர்களும் அவர்களை சுற்றி நின்றதை நான் பார்த்தேன். எழுதப்பட்ட ஏதோ ஒன்றின் பிரதிகள் தேசத்தின் பல்வேறு பகுதிகளில் கொடுக்கப்பட்டது. அதிலே : “பரிசுத்தவான்கள் தங்களுடைய விசித்திரமான விசுவாசத்தைகளைந்து, ஓய்வுநாள் ஆசரிப்பை கைவிட்டு, முதலாம் நாளை அனுசரிக்காவிடில், கொலை செய்யப்படவேண்டும்” என்ற கட்டளை இருந்ததை நான் கண்டேன். ஆனால் இம்முறை, பரிசுத்தவான்கள் தங்கள் நிலையில் உறுதியாக நின்றார்கள். தேவன் மீது விசுவாசம் வைத்து, அவருடைய வாக்குத்தத்தங்களின் மீது பற்றுதலாயிருந்து, தங்களுக்கு விடுதலை வந்துவிடும் என்று காத்திருந்ததை நான் கண்டேன். இக்கட்டளை பிறப்பிக்கப்படுவதற்கு முன், தீயவர்கள், பரிசுத்தவான்களை அழித்துவிட வகை தேடினார்கள். உன்னதத்திலிருக்கிற தேவனின் பரிசுத்தவான்களை அழித்துவிட சாத்தான் வாஞ்சையாயிருந்தான். அந்நியர்களின் மத்தியிலும் கற்பனைகளை கைக்கொண்டவர்களுடன் ஒரு உடன்படிக்கையை ஏற்படுத்தும் பொருட்டு, இயேசு தமது தூதர்களை அனுப்பி, பரிசுத்தவான்களை காத்துக்கொண்டார். இயேசுவை கான்பதற்காக ஆவலுடன் காத்திருப்பவர்களை, மரணத்தை காணாமல் மறுரூபமாக்கிவிட்டால், இயேசுவே கனம்பெறுவார். GCt 101.3

பரிசுத்தவான்கள் மிகுந்த மனவருத்தங்களை அனுபவித்ததை கண்டேன். பூமியின் துன்மார்க்கர் அவர்களை சுற்றியிருந்ததைப் போல் இருந்தது. அனைத்துமே அவர்களுக்கு விரோதமாக இருந்தது. துன்மார்க்கரின் கரத்தினால் மடிந்துபோகும்படி தங்களை தேவன் இறுதியாக ஒப்புக்கொடுத்துவிட்டாரோவென சிலர் பயந்தார்கள். அவர்களுடைய கண்கள் திறந்திருக்குமானால், அவர்களை சுற்றிலும் இருந்த தேவதூதர்களை கண்டிருப்பார்கள். அநேக மூர்க்கவெறிக் கொண்ட துன்மார்க்கரும், தீய தூதர்களும் இணைந்து, பரிசுத்தவான்களை அழிக்க முற்பட்டார்கள். அவர்கள் அப்படி செய்ய விரைந்துபோது, வலிமையான பரிசுத்த தூதர்களை அவர்கள் எதிர்கொள்ளவேண்டியிருந்தது. பரிசுத்த தூதர்கள் அவர்களை பின்னடையச் செய்தார்கள். பரிசுத்தவான்களுக்கு இது ஒரு பயங்கரமான வேதனையின் மணிவேளையாக இருந்தது. விடுதலைக்காக தேவனிடத்தில் இரவும் பகலுமாய் வேண்டிக் கொண்டே இருந்தார்கள். வெளித்தோற்றத்தில் பார்க்கும்பொழுது, அவர்களுக்கு விடுதலையின் வாய்ப்பே இல்லாதிருந்தது. “உங்கள் தேவன் ஏன் இன்னமும் உங்களை எங்கள் கரங்களிலிருந்து விடுவிக்கவில்லை? நீங்கள் உயர எழும்பி, உங்கள் ஜீவனைக் காத்துக்கொள்ளவேண்டியது தானே?” என்று துன்மார்க்கர்கள் ஏளனம் பண்ணினார்கள். ஆகிலும், பரிசுத்தவான்கள் அவர்களை பொருட்படுத்தவில்லை. யாக்கோபைப் போல், அவர்கள், தேவனிடத்தில் போராடினார்கள். தேவதூதர்கள் இவர்களை கவனித்துக்கொண்டே இருந்தார்கள். தேவன் தம்முடைய வல்லமையை எழுப்பி, மகிமையாக இவர்களை விடுவிக்கும் வேளை அருகில் இருந்தது. புறஜாதியாரின் நடுவில் தமது நாமத்தை, தேவன், ஏளனப்படவொட்டார். அவருடைய நாமத்தின் மகிமைக்கென்று, தமக்காக காத்திருந்து, ஜீவ புஸ்தகத்தில் பெயரெழுதப்பட்டிருந்த யாவரையும் அவர் விடுவிப்பார். GCt 102.1

விசுவாசமுள்ள நோவாவின் நாட்களுக்கு நான் திருப்பப்பட்டேன். மழை பொழிந்து, வெள்ளம் புரண்டோடியது. நோவாவும், அவனுடைய குடும்பத்தினரும் பேழைக்குள் சென்றபின், தேவன் வாசலை அடைத்தார். அவனை ஏளனம் பண்ணி நகைத்திருந்த போதிலும், நோவா, வரவிருந்த அழிவை குறித்து இம்மக்களுக்கு விசுவாசத்துடன் எச்சரித்திருந்தார். வெள்ளம் எழும்பத் துவங்கியபோது, மூழ்கி, மரணத்தோடு போராடுகையில், தாங்கள் ஏளனம் செய்திருந்த பேழை மாத்திரம் பத்திரமாக மிதந்துக்கொண்டிருப்பதையும், நோவாவின் குடும்பத்துக்கு தேவையான பாதுகாப்பை அது கொடுத்திருந்ததையும், அவர்கள் கண்டார்கள். எனவே, வரவிருக்கம் அழிவைக் குறித்த விசுவாசத்துடன் எச்சரித்த பிள்ளைகளை தேவன் காக்கிறார் என்று நான் கண்டேன். மிருகத்தின் முத்திரையை வணங்காமலும், தரித்துக் கொள்ளாமலும் இருந்தவர்களையும், மறுரூபமாக்குதலை எதிர்நோக்கியிருந்தவர்களையும், துன்மார்க்கரின் கைகளுக்கு விடுவிக்க தேவன் வாஞ்சையாய் இருந்தார். நீதிமான்களை அழிக்கும் அனுமதியை பெற்றுவிட்டால், தேவனை வெறுக்கின்ற சாத்தானும் அவனுடைய சகாக்களும், திருப்தியாகிவிடுவார்கள். சாத்தானின் மகிமையை பரைச்சாற்றுகின்ற அனுபவமாக அது அமைந்துவிடும்! தேவனுடைய பிள்ளைகளை நிந்தித்திருந்த யாவரும், தேவன் தமது பிள்ளைகளின் மேல் வைத்திருக்கும் பற்றையும், அவர்கள் பெறவிருக்கும் இரட்சிப்பையும் காண்பார்கள். GCt 102.2

பரிசுத்தவான்கள் பட்டணங்களையும் கிராமங்களையும் விட்டு வெளியேறியபோது, துன்மார்க்கர் அவர்களை பின்தொடர்ந்தார்கள். நீதிமான்களை அழிக்கும்படி பட்டயங்களை அவர்கள் உயர்த்தியபோது, பெலனற்ற, உலர்ந்த புல்லைப்போல் உடைந்து விழுந்தார்கள். தேவதூதர்கள் நீதிமான்களை பாதுகாத்துக்கொண்டார்கள். தேவனை நோக்கி இரவு பகலுமாக அவர்கள் எழுப்பிய குரல், தேவ சமூகத்தில் வந்த சேர்ந்தது. GCt 103.1

பார்க்க : ஆதியாகமம் 6: 1-22 ;7 : 1-24 ;
சங்கீதம் 91 : 1-16
மத்தேயு 20 : 23
வெளிப்படுத்தல் 13 : 11 -17