சுகபோகங்களோடுகூடிய செழிப்பு, பெயர்க்கிறிஸ்தவர்களை பெரும் எண்ணிக்கையில் அதிகரிக்கச் செய்யும். உபத்திரவம் அவர்களை சபையிலிருந்து வெளியேற்றி தூய்மைப்படுத்தும். — 4T 89 (1876). கச 126.3
ஒவ்வொரு ஆத்துமாவிற்கும் வரப்போகின்ற சோதனைக் காலம் வெகு தொலைவிலில்லை. மிருகத்தின் முத்திரை நம்மீது திணிக்கப்படும். உலகப்பிரகாரமான கோரிக்கைகளுக்கு படிப்படியாக இணங்கி, உலகப் பிரகாரமான பழக்க வழக்கங்களுக்கு ஒத்துப்போனவர்கள், ஏளனம், இகழ்ச்சி, அச்சுறுத்துகின்ற சிறைவாசம் மற்றும் மரணத்துக்குத் தங்களை உட்படுத்திக்கொள்வதைவிட, ஆட்சியிலிருக்கும் அதிகாரங்களுக்குப் பணிந்துபோவதை ஒரு கடினமான காரியமாக கருதமாட்டார்கள். போராட்டம் தேவனுடைய கற்பனைகளுக்கும் மனிதருடைய கற்பனைகளுக்கும் இடையில் இருக்கின்றது. இந்த நேரத்தில்தான் சபையிலிருக்கின்ற களிம்பிலிருந்து பொன்னானது பிரிக்கப்படும். — 5T 81 (1882). கச 126.4
ஆரோக்கியமான மற்றும் கேள்வி கேட்கப்படக்கூடாத கிறிஸ்தவத்தைத் தங்களிடத்தே கொண்டிருப்பதாகக் காணப்படுகின்ற மனிதர்கள், உபத்திரவம் இல்லாத வேளையில் நமது அணிவரிசைகளில் வந்து இணைந்திருக்கின்றனர். ஆனால், உபத்திரவம் எழும்புமானால், அவர்கள் நம்மிடமிருந்து வெளியேறிவிடுவார்கள். — Ev 360 (1890). கச 126.5
தேவனுடைய பிரமாணம் ஒன்றுமில்லாததாக ஆக்கப்படும்போது, சபை கட்டுப்படுத்துவதற்குக் கடினமான உபத்திரவங்களால் சலித்தெடுக்கப்படும். இப்போது நாம் எதிர்பார்ப்பதைக் காட்டிலும் அதிகளவு எண்ணிக்கையில் நமது சபையிலுள்ளவர்கள், வஞ்சிக்கிற ஆவிகளுக்கும் பிசாசுகளின் உபதேசங்களுக்கும் செவிகொடுப்பார்கள். — 2SM 368 (1891). கச 126.6