Go to full page →

நேரடியான சாட்சி அசைவை உண்டுபண்ணும் கச 127

நான் கண்ட அசைக்கப்படுதலின் அர்த்தம் என்ன என்று கேட்டேன். லவோதிக்கேயா சபைக்கு சத்தியமுள்ள சாட்சியின் (கிறிஸ்துவின்) ஆலோசனையினால் அருள்ப்பட்ட நேரடி சாட்சியினால் அந்த அசைவு உண்டாக்கப்படும் என்று எனக்குக் காண்பிக்கப்பட்டது. இந்தச் சாட்சி, அதைப் பெற்றுக்கொள்கிறவர்களின் மனதில் தனது தாக்கத்தை ஏற்படுத்தி, சத்தியத்தின் தரத்தை உயர்த்தி, நேரடியான சத்தியத்தைப் பொழியத்தக்கதாக அந்த நபரை வழிநடத்தும், சிலர் இந்த நேரடி சாட்சியைப் பொறுத்துக்கொள்ளமாட்டார்கள். அவர்கள் அதற்கு எதிராக எழும்புவார்கள்; மேலும் இதுவே, தேவனுடைய ஜனங்களின் மத்தியிலே ஒரு அசைவை உண்டுபண்ணும். — 1T 181 (1857). கச 127.4

ஆகானைப்போல இரட்சிக்கப்படுவதற்கான காலம் கடந்தபின், மிகவும் தாமதமாகப் பாவ அறிக்கை செய்யக்கூடியவர்கள் நம் மத்தியில் இருக்கின்றனர்… சரியான காரியங்களுடன் அவர்கள் ஒத்திசைவாக இல்லை. இருதயத்தைச் சென்றடையக்கூடிய நேரடி சாட்சியை அவர்கள் அலட்சியப்படுத்துவதுமன்றி, கடிந்துகொள்ளுதலை அளிப்பவர் அனைவரும் அமைதிப்படுத்தப்படுவதையும் பார்த்து அவர்கள் மகிழ்ச்சி அடைவார்கள். — 3T 272 (1873). கச 127.5

கடந்த வருடங்களில் கொடுக்கப்பட்ட ஒரு நேரடி சாட்சியின் புதுப்பித்தலுக்காக கர்த்தர் மீண்டும் அழைக்கின்றார். அவரது ஜனங்களின் ஆவிக்குரிய திறன்கள் வெகுநாட்களாக மந்த நிலையில் உள்ளது. எனவே, இப்படிப்பட்ட வெளிப்படையான மரணத்திலிருந்து அங்கு ஒரு உயிர்த்தெழுதல் உண்டாகவேண்டும். நாம் ஜெபத்தினாலும் பாவ அறிக்கையினாலும், ராஜாவின் (கிறிஸ்துவின்) 2-ம் வருகைக்கு நேர்ப்பாதையைச் செவ்வையாக்க வேண்டும். — 8T 297 (1904). கச 127.6