சிலர் அசைக்கப்பட்டு வெளியேற்றப்பட்டு வழியிலே விட்டுவிடப்பட்டனர். பரிசாகப் பெறப்பட்ட வெற்றியையும் இரட்சிப்பையும் போதுமானதாக எண்ணி, அதற்காக இடைவிடாது வேதனையோடு கெஞ்சிமன்றாடி பெற்றுக்கொண்டவர்களுடன் தங்களை இணைத்துக் கொள்ளாமல், கவனக்குறைவாகவும் அலட்சியமாகவும் இருந்தவர்கள் அதைப் பெற்றுக்கொள்ளவில்லை, அவர்கள் இருளில் பின்னாக விட்டுவிடப்பட்டார்கள். அவர்களது இடங்கள் சத்தியத்தைப் பிடித்துக் கொண்டு அணிவரிசைகளில் சேர்ந்துகொண்ட மற்றவர்களால் உடனடியாக நிரப்பப்பட்டன. — EW 271 (1858). கச 131.6
தொடர்ச்சி விட்டுப்போயிருக்கின்ற அணிவரிசைகள், கிறிஸ்து குறிப்பிடுகின்ற பதினோராம் மணிநேரத்திலே வந்து சேருகிறவர்களான கூட்டத்தாரால் நிரப்பப்படும். தேவனுடைய ஆவியானவர் அநேகருடன் போராடிக்கொண்டிருக்கிறார். சத்தியம் எது என்பதைக் கற்றுக்கொள்ள வாய்ப்பை இப்பொழுது பெறாதவர்களுக்கு, தேவனின் அழிக்கக்கூடியதான நியாயத்தீர்ப்புகளின் காலம் கிருபையின் காலமாக இருக்கின்றது. கர்த்தர் அவர்களைக் கனிவோடு நோக்கிப் பார்க்கின்றார். உள்ளே பிரவேசிக்க விரும்பாதவர்களுக்கு கதவு அடைக்கப்பட்டிருக்கும் அதே நேரம், அவருடைய கிருபை நிறைந்த இதயம் தொடப்பட்டு, அவர்களை இரட்சிக்கப்படும்படிக்கு அவருடைய கரம் இன்னமும் நீட்டப்பட்டிருக்கின்றது. இந்தக் கடைசி நாட்களிலே, சத்தியத்தை முதன்முதலாகக் கேட்கின்ற பெருந்திரளான கூட்டத்தார் சபையில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். — 8T 41 (1904). 1நவீனநோக்கு இறையியலாளர்களிடமிருந்து பழமைவாத இறையியலாளர்களை இங்கு எலன் உவைட் வேறுபடுத்திக் காட்டவில்லை; மாறாக, உலகப்பிரகாரமான சமரசத்தை முதலாவதாக வைத்து, தேவனுடைய காரியத்தை இரண்டாம் நிலைக்குத் தள்ளுவோரைப்பற்றியே இங்கு விளக்குகிறார். கச 132.1
*****