Go to full page →

A. திருச்சபை முழுவதற்குமான சரித்திரப்பூர்வமான ஒரு அப்பியாசம் கச 133

கி.பி. 31-ல் பெந்தெகொஸ்தே நாளில் முன்மாரி பொழிந்தது கச 133

கிறிஸ்துவின் கட்டளைக்குக் கீழ்ப்படிந்த அவர்கள் (சீஷர்கள்), பிதாவின் வாக்குத்தத்தமான — ஆவியானவரின் பொழிவிற்காக எருசலேமிலே காத்திருந்தார்கள். ஒன்றுமே செய்யாமல் அவர்கள் காத்திருக்கவில்லை. அவர்கள், “நாடோறும் தேவாலயத்தில் தேவனைப் புகழ்ந்து துதித்துக்கொண்டிருந்தார்கள்” என்று (லூக். 24:53) வேதம் கூறுகின்றது… கச 133.4

சீஷர்கள் வாக்குத்தத்தம் நிறைவேறக் காத்திருந்தபோது, உண்மையான மனவருத்தத்துடன் தங்களது இருதயங்களைத் தாழ்த்தி, தங்களது அவிசுவாசத்தை அறிக்கை செய்தார்கள்… தங்களது அன்றாட ஜீவியத்தில், மனிதர்களைச் சந்திப்பதினால் ஏற்படும் தொடர்பிலே, உரையாடல்கள் மூலம் பாவிகளைக் கிறிஸ்துவண்டை வழிநடத்தக்கூடிய சரியான வார்த்தைகளைப் பேசுவதற்கு ஏற்ற ஒரு தகுதியைப் பெற்றுக்கொள்வதற்காக ஆழ்ந்த ஊக்கத்துடன் சீஷர்கள் ஜெபித்தனர். எல்லா வேறுபாடுகளையும், தன்னை உயர்த்தவேண்டும் என்ற எல்லா விருப்பத்தையும் அப்புறப்படுத்திவிட்டு, கிறிஸ்தவ ஐக்கியத்தில் ஒருவருக்கொருவர் நெருங்கி வந்தனர். — AA 35, 37 (1911). கச 134.1

சீஷர்கள் பூரணமாக ஐக்கியத்திற்குள் வந்து, மேலான இடத்தைப் பிடிக்கும் போட்டி அவர்களில் மறைந்தபிறகே ஆவியானவர் பொழியப்பட்டார். 8T 20 (1904). கச 134.2

அப்போஸ்தலர்களில் நாட்களில் நிகழ்ந்த ஆவியின் அருள்மாரி முன்மாரியின் ஆரம்பமாக இருந்தது. அதனுடைய பலனும் மகிமை மிக்கதாக இருந்தது. காலத்தின் முடிவுரையிலும், ஆவியானவரின் பிரசன்னம் அவரது உண்மையான சபையோடு நிலைத்திருக்க வேண்டியதாக இருக்கின்றது. — AA54, 54 (1911). கச 134.3