Go to full page →

தூதர்களின் ஊழியம் கச 150

வேதாகமத்தின் உட்பொருளை ஆராய்ச்சி செய்யும்படி தூண்டுவதற்கு, பரலோகத்தின் தூதர்கள் மனித மனங்களை அசைத்துக் கொண்டிருக்கின்றார்கள். இதுவரை செய்யப்பட்டிருந்ததைவிட ஒரு மகா உன்னதமான பணி இனிமேல் செய்யப்படும். அதன் மகிமையில் ஒரு சிறிதளவுகூட மனிதருக்குச் செல்லாது; ஏனெனில் இரட்சிப்பைச் சுதந்தரித்துக்கொள்ளப்போகிறவர்களுக்காக தூதர்கள் இரவும் பகலும் பணிவிடை செய்துகொண்டிருக்கிறார்கள். — CW 140 (1875). கச 150.2

கொர்நேலியுவைப் போன்ற அநேக மனிதர்கள் நமது உலகத்திலே இருக்கின்றார்கள்... கொர்நேலியுவுக்காக தேவன் கிரியை செய்தது போலவே, உண்மையான தரத்தை உயர்த்திப்பிடிக்கின்ற இவர்களுக்காகவும் அவர் கிரியை செய்கின்றார்... கொர்நேலியு தேவனைப்பற்றின ஒரு அறிவை, பரலோகத்திலிருந்து வந்த தூதர்களின் சந்திப்பின் மூலமாகப் பெற்றுக்கொண்டதுபோலவே இவர்களும் பெற்றுக்கொள்வார்கள். — Letter 197, 1904. கச 150.3

தெய்வீக வல்லமை மனித முயற்சிகளோடு இணையும்போது, சருகுகளிடையே நெருப்பு பரவுவதுபோல ஊழியமும் மிக வேகமாகப்பரவும். மனிதனால் பகுத்தாராய முடியாத துவக்கங்களைக்கொண்ட ஏதுகரங்களை தேவன் பயன்படுத்துவார். தேவனுடைய கோரிக்கைகளுக்கு பதிலளிப்பதை மனிதர்கள் புறக்கணியாமல் இருந்திருந்தால் நிறைவேற்றியிருந்திருக்கக்கூடிய, ஆசீர்வாதத்தை பெற்றிருக்கும் ஒரு வேலையை தூதர்கள் செய்வார்கள். — 1 SM 118 (1885). கச 150.4