Go to full page →

பெருந்திரள்கூட்டத்தார் அழைப்பிற்குச் செவிகொடுப்பர் கச 152

மதம் சார்ந்த மற்ற அமைப்புகளிலே சிதறியிருக்கும் ஆத்துமாக்கள் அழைப்புக்குச் செவிசாய்த்தார்கள். சோதோமின் அழிவிற்கு முன்னதாக லோத்து அதிலிருந்து துரிதமாக வெளியேற்றப்பட்டதுபோல், அழி விற்காக நியமிக்கப்பட்ட சபைகளிலிருந்து அருமையானவர்கள் தூரிதமாக வெளியேற்றப்பட்டார்கள். — EW 279 (1858). கச 152.6

இறுதிச் சோதனையின் வழியாகச் சென்று, ஒரு மலையைப் போல நிலையாய் நிற்கபோகின்ற, உறுதியான விசுவாசிகளின் சேனை ஒன்று இருக்கும். — 3SM 390 (1888). கச 153.1

உலகத்தின் அணிவரிசைகளிலிருந்தும், திருச்சபைகளிலிருந்தும் — கத்தோலிக்கத் திருச்சபைகளிலிருந்துகூட — வெளியே வரவிருக்கின்ற அநேக ஆத்துமாக்கள் இருக்கின்றனர். சத்தியத்தை அறிவிப்பதற்காக, இதுவரையில் பதவியிலும் பதிவேடுகளிலும் நின்றிருதோரின் (அட்வென்டிஸ்ட் மக்களின்) வைராக்கியத்தைவிட, அவர்களது வைராக்கியம் அளவில் மிஞ்சக்ககூடியதாயிருக்கும். — 3SM 386, 387, (1889). கச 153.2

திறல்கூட்டமான ஜனங்கள் விசுவாசத்தைப் பெற்று, கர்த்தருடைய சேனைகளில் வந்துசேருங்கள். — Ev 700 (1895). கச 153.3

இந்த மந்தையிலிருந்து விலகிப்போன அநேகர் பெரிய மேய்ப்பனைப் பின்தொடர்ந்து செல்லும்படியாகத் திரும்பி வருவார்கள். — 6T 401 (1900). கச 153.4

அஞ்ஞான ஆப்பிரிக்காவிலும், கத்தோலிக்க நாடுகளான ஐரோப்பாவிலும், தென் அமெரிக்காவிலும், சீனாவிலும், இந்தியாவிலும், கடலிலுள்ள தீவுகளிலும், பூமியின் இருண்ட மூலைகளிலும்கூட தெரிந்து கொள்ளப்பட்ட மேகம் போன்ற ஒரு திரளான ஜனங்களை, அதாவது, இருளின் மத்தியிலே பிரகாசித்து, தேவனுடைய பிரமாணத்திற்குக் கீழ்ப்படிவதனால் கிடைக்கக்கூடிய மறுரூபமடையச் செய்யும் வல்லமையை, மருளவிழுந்துபோன ஒரு உலகிற்குத் தெளிவாகக் காண்பிக்கக் கூடிய இப்படிப்பட்ட ஜனங்களை, தேவன் தமக்கென்று ஆயத்தமாக வைத்துவைத்திருக்கின்றார். இப்பொழுதுகூட, ஒவ்வொரு நாட்டிலும், ஒவ்வொரு பாஷைக்காரர் மற்றும் மக்கள் மத்தியிலும் அவர்கள் காணப்படுகின்றனர்; மருளவிழுகையின் மிகவும் இருண்ட மணி வேளையிலே, “சிறியோர், பெரியோர், ஐசுவரியவான்கள், தரித்திரர், சுயாதீனர், அடிமைகள்” போன்ற அனைவரையும், மரண தண்டனையின் அச்சுறுத்தலின் கீழாக, பொய்யான ஒரு ஓய்வுநாளிலன் பற்றுறுதியின் அடையாளத்தைப் பெற்றுக்கொள்ளும்படியாக சாத்தானுடைய மாபெரும் முயற்சி எடுக்கப்படும்போது, தேவனுடைய குமாரர்களாகிய கறைதிரையற்றவர்கள், கபடற்றவர்கள், கடிந்துகொள்ளப்படாதவர்கள் ஆகிய உண்மயுள்ள இந்த மக்கள், உலகத்திலே விளக்குகளைப்போல பிரகாசிப்பவர்கள். — PK 188, 189 (c. 1914). கச 153.5