Go to full page →

மனப்பூர்வமாய் கண்களை மூடிக்கொள்பவர்களுக்கு மன்னிப்பு கிடையாது கச 158

யாதொருவரும், தாங்கள் இதுவரை பெற்றிராததும், பெற்றுக்கொள்ள முடியாததுமான, கவனம் செலுத்தா வெளிச்சத்திற்காகவும் சத்திய அறிவிற்காகவும் நியாயத்தீர்க்கப்படமாட்டார்கள். ஆனால் அநேகர், உலகத்தினுடைய தரத்தினை பின்பற்ற விரும்புவதால், கிறிஸ்துவின் பிரதிநிதியான தூதுவர்களால் தங்களுக்கு அளிக்கப்பட்ட சத்தியத்திற்குக் கீழ்ப்படிய மறுக்கின்றார்கள். தங்களது ஆத்துமாவிலே பிரகாசித்த வெளிச்சமும் தங்களது அறிவைச் சென்றடைந்த சத்தியமும் நியாயத் தீர்ப்பிலே அவர்களை நியாயந்தீர்க்கும். - 5BC 1145 (1884). கச 158.1

சத்தியத்தைக் கேட்பதற்கான ஒரு சந்தர்ப்பம் இருந்தும், அதைக் கேட்கவோ அல்லது புரிந்துகொள்ளவோ எந்த ஒரு முயற்சியும் எடுக்காமல், அந்தச் சத்தியத்தை கேட்காத பட்சத்தில் தாங்கள் அதற்குக் கணக்கு ஒப்புவிக்கத் தேவையில்லை என்று நினைத்துக்கொண்டு இருந்தால், சத்தியத்தைக் கேட்டு அதை நிராகரித்ததற்கு ஒப்பாக, அவர்கள் தேவனுக்கு முன்பாக குற்றமுள்ளவர்களாகத் தீர்க்கப்படுவார்கள். சத்தியம் என்ன என்று அரிந்துகொள்ளும்அறிவைப் பெற்றிருந்தும், தவறைச் செய்வதற்குத் தீர்மானிக்கின்றவர்களுக்கு மன்னிப்பே கிடையாது. கிறிஸ்துவானவர் தமது பாடு மரணத்தின் மூலமாக, அறியாமையினால் செய்கின்ற அனைத்துப் பாவங்களுக்கும் நிவாரணம் உண்டுபண்ணியிருக்கின்றார். ஆனால், வேண்டுமென்றே குருட்டுத்தனமாக வலிய தவறு செய்வதற்கு, அங்கு எந்தவிதப் பரிகாரமும் இல்லை. கச 158.2

நமது அறிவிற்கு எட்டாத சத்திய வெளிச்சத்திற்கு, நாம் கணக்கொப்புவிக்க வேண்டியதில்லை. ஆனால் நாம் எதிர்த்ததும் புறக்கணித்ததுமான சத்தியங்களுக்குக் கணக்கொப்புவிக்கவேண்டும். ஒரு மனிதன் தனக்கு ஒருபோதும் வழங்கப்படாத சத்தியத்தைப் புரிந்து கொள்ள முடியாது. ஆதலால் அவன் ஒருபோதும் தான் பெற்றிராத சத்திய வெளிச்சத்திற்காக நியாயந்தீர்க்கப்பட முடியாது. 5BC 1145 (1893). கச 158.3