Go to full page →

குணத்திலே கிறிஸ்துவிற்கு ஒத்த ஒரு தன்மை கச 160

குணத்தில் கிறிஸ்துவிற்கு ஒத்த ஒரு தன்மையைக் கொண்டிருப்பவைகள் மீது மாத்திரமே, ஜீவனுள்ள தேவனுடைய முத்திரை போடப்படும். — 7BC 970 (1895). கச 160.4

ஜீவனுள்ள தேவனுடைய முத்திரையைப் பெற்றிருப்பவர்களும். இக்கட்டுக்காலத்திலே பாதுகாக்கப்படுபவர்களும், இயேசுவின் சாயலை முழுமையாகப் பிரதிபலிக்கவேண்டும். — EW 71 (1851). கச 160.5

தேவனுடைய முத்திரை பரிசுத்தமில்லாத் ஒரு ஆண் அல்லது பெண்ணின் நெற்றியின்மீது ஒருபோதும் போடப்படமாட்டாது. உலகப்பற்றுள்ள, உலகக் காரியங்களைக்குறித்து கவலையோடிருக்கின்ற ஆண் அல்லது பெண்ணின் நெற்றியின்மீதும் அது ஒருபோதும் போடப்படாது. பொய் நாவுகள் அல்லது வஞ்சக எண்ணங்களைக் கொண்ட ஆண்கள் அல்லது பெண்களின் நெற்றிகளின்மீதும் அது ஒருபோதும் போடப்படாது. முத்திரையைப் பெற்றுக்கொள்ளுகின்ற அனைவரும், தேவனுக்கு முன்பாகக் கறையற்றவர்களாக — பரலோகத்திற்குச் செல்லும் பிரஜைகளாக இருக்கவேண்டும். — 5T 216 (1882). கச 160.6

கீழ்ப்படிதலின்மூலமே அன்பு வெளிப்படுத்தப்படும்; பூரண அன்பு எல்லா பயத்தையும் புறம்பே தள்ளும், தேவனை நேசிக்கிறவர்கள், தேவனுடைய முத்திரையைத் தங்கள் நெற்றிகளில் பெற்றுக்கொண்டு, தேவனுக்கேற்ற கிரியைகளை செய்வார்கள். - SD51 (1894). கச 160.7

உலகத்தையும் மாம்சத்தையும் பிசாசையும் ஜெயிப்பவர்கள் மாத்திரமே, ஜீவவுள்ள தேவனின் முத்திரையைப் பெறுவதற்கு சலுகை பெற்றவர்களாக இருப்பார்கள். — TM 445 (c. 1886). கச 160.8

தேவனால் கொடுக்கப்பட்ட நமது அனைத்து வல்லமைகளையும் உபயோகித்து, கிறிஸ்துவுக்குள்ளாக நிறைவான வளர்ச்சியின் அளவுக்குத்தக்க, பூரண புருஷர்களாயும் ஸ்திரீகளாயும் மாறும் நிலையை அடைய நாம் கடினமாகப் போராடுகின்றோமா? அவரது முழுமையை நாடுகின்றோமா? தேவனுடைய ஊழியக்காரர்கள் இந்த நிலையை அடையும்போது, தங்களது நெற்றிகளிலே முத்திரையிடப்படுவார்கள், பதிவு செய்கின்ற தூதன் “முடிந்தது” என்று அறிக்கையிடுவார். சிருஷ்டிப்பினாலும் மீட்பினாலும், அவருக்குச் சொந்தமானவர்களான அவர்கள், அவருக்குள்ளாக முழுமையடைவார்கள். — 3SM 427 (1899). கச 160.9