Go to full page →

பூமியின் நிகழ்வுகளைக் குறித்த பரலோகத்தின் அக்கறை கச 20

முதல் கொலையாளியின் ஜீவனைத் தப்பவிட்டதன் மூலம், மாபெரும் போராட்டத்தைக் குறித்ததான ஒரு பாடத்தை, முழு உலகத்தின் முன்பாகவும் தேவன் எடுத்துக் காண்பித்தார்... அவரது நோக்கம், கச 20.6

கலகத்தை வெறுமனே அடக்கிவிடுவதல்ல, மாறாக, கலகத்தின் தன்மையை அண்டசராசரத்திற்கு முன்பாக விளக்கிக் காட்டுவதாக இருந்தது... மற்ற உலகங்களின் பரிசுத்த குடிமக்கள், பூமியின்மீது நடைபெற்றுக்கொண்டிருக்கும் சம்பவங்களை, ஆழ்ந்த ஆர்வத்துடன் கவனித்துப் பார்த்துக்கொண்டிருக்கின்றனர்... 5விழுந்துபோகாத உலகங்களும், பரலோக தூதர்களும் கெத்செமனேயில் கிறிஸ்துவின் போராட்டத்தை, “தீவிரமான ஆர்வத்துடன்” கவனித்ததாக (DA 693) எலன் உவைட் கூறுகின்றனர். சாத்தானுடனான கிறிஸ்துவினுடைய நாலாயிரம் ஆண்டு போராட்டம் மற்றும் சிலுவையில் அவரது இறுதி வெற்றி குறித்து விவாதிக்கும்போது, “பரலோகப் பிரபஞ்சம் கண்டது;” “முழு பரலோகமும், விழுந்துபோகாத உலகங்களும் சாட்சிகளாக இருந்தன;” “அவர்கள் கேட்டனர்;” “அவர்கள் பார்த்தனர்;” ” பரலோகம் பார்த்தது;” ” பரலோகப் பிரபஞ்சத்திற்கு அது எப்படிப்பட்ட ஒரு காட்சியாக இருந்தது!” (DA. 693, 759, 760) என்பது போன்ற சொற்றொடர்களைப் பயன்படுத்துகின்றார். கச 21.1

தேவனுடைய மாபெரும் திட்டம், அதனுடைய முழுமையான நிறைவேற்றத்தை நோக்கி படிப்படியாக முன்னேறிக்கொண்டிருக்கும் பொழுது, அவர், முழு அண்டசராசரத்தின் இரக்கத்தையும் அங்கீகாரத்தையும் தன்னுடன் எடுத்துச் செல்கின்றார். - PP 78, 79 (1890). கச 21.2

மனிதனுடைய இரட்சிப்புக்காக மரித்த கிறிஸ்துவின் செயல், மனிதருக்குப் பரலோகத்தை எளிதில் அடையக்கொடியதாக்கியது மட்டுமல்லாமல், சாத்தானின் கலகத்துடனான அவர்களது அணுகு முறையில், தேவனும் அவரது குமாரனும் நீதியுள்ளவர்கள் என்பதை அண்டசராசரத்திற்கு முன்பாகவும் அது காட்டுகின்றது. - PP 68, 69 (1890). கச 21.3

நன்மைக்கும் தீமைக்கும் இடையிலான மாபெரும் போராட்டத்தின் கடைசிக் காட்சிகளை, அண்டசராசரமும் சொல்லி முடியாத ஆர்வத்துடன் உற்றுநோக்கிக்கொண்டு இருக்கின்றது. - PK 148 (c. 1914). கச 21.4

நமது சிறு உலகம், பிரபஞ்சத்தின் பாடநூலாக இருக்கின்றது. - DA 19 (1898). கச 21.5

*****