Go to full page →

உலகமனைத்தும் அழிவில் ஈடுபட்டிருக்கும் கச 174

உலகம் முழுவதும் வரப்போகின்ற அதன் அழிவைக்குறித்து எச்சரிக்கப்படும்வரைக்கும், யுத்தத்தின் காற்றுகள் வீசாதபடிக்கு, தற்போது தூதர்கள் அவைகளை கட்டுப்படுத்திக்கொண்டிருக்கின்றனர். என்ற போதும், பூமியின்மீது மோதத்தக்கதாக ஆயத்தமான நிலையில் ஒரு புயல் உருவாக்கிக்கொண்டு இருக்கின்றது தமது தூதர்கள் பிடித்திருக்கின்ற காற்றுகளை விடும்படியாக தேவன் அவர்களுக்குக் கட்டளையிடும்பொழுது எழுதுகோலால் விவரிக்கப்பட முடியாத, அத்தகைய போராட்டமான ஒரு காட்சி நிகழும், - ED 179, 180 (1903). கச 174.4

எருசலேமின்மேன் வரும் நியாயத்தீர்ப்புகளைக்குறித்த இரட்சகரின் தீர்க்கத்தரிசனம் மற்றுமொரு நிறைவேறுதலை அடையவேண்டியதாக இருக்கின்றது; நடந்து முடிந்த அந்த பயங்கர பாழ்க்கடிப்பு, சாதாரண ஒரு நிழலாட்டமே. தெரிந்துகொள்ளப்பட்ட அந்தப் பட்டணத்திற்கு நேரிட்ட முடிவிலிருந்து தேவனுடைய இரக்கத்தைப் புறக்கணித்து அவரது கற்பனைகளைக் காலின் கீழாக மிதித்துப்போடும் ஒரு உலகத்திற்கு வரப்போகின்ற அழிவை நாம் காண முடியும்.- GC 36 (1911). கச 175.1

அப்பொழுது சாத்தான் இந்த பூமியின் குடிகள் அனைவரையும் ஒரு மாபெரும் கடைசிப் போராட்டத்திற்குள்ளாக ஆர்வத்தோடு ஈடுபடுத்துவான். மனிதர்களுடைய தீவிர உணர்ச்சிகளின் பயங்கரமான காற்றுகளை, தேவதூதர்கள் தடுத்துக் கட்டுப்படுத்தாமல் விடும்பொழுது, யுத்தத்திற்கு ஏதுவான அனைத்து முலப்பொருள்களும் கட்டவிழத்துவிடப்படும். பழைய எருசலேம்மீது வந்த அழிவைக்காட்டிலும், மிகவும் பயங்கரமான அழிவில் அப்பொழுது உலகம் முழுவதும் ஈடுப்பட்டிருக்கும். — GC 614 (1911). கச 175.2