Go to full page →

தேவனுடைய நீயாயத்தீர்ப்புகளின் உறுதிப்பாடு கச 176

பாவியை தேவன் அழிப்பதில்லை என்பதுபோன்ற கோணத்தில், தேவனுடைய அன்பு நமது காலத்தில் எடுத்துக்காட்டப்படுகிறது. மனிதர்கள் தங்களது குறைந்த தரத்திலுருந்து, நீதி மற்றும் நியாயத்திற்கடுத்த காரியத்தில் வாதிடுகின்றனர். ” உன்னைப்போல் நானும் இருப்பேன் என்று நினைவுகொண்டாய்” — சங். 50:21. அவர்கள், தங்களைக்கொண்டே தேவனைக் கணக்கிடுகின்றனர். சந்தர்ப்ப சூழ்நிலைகளின் கீழ், அவர்கள் எப்படி தங்கள் மனதின்படியே செயல்படுவார்களோ தீர்மானிப்பார்களோ, அதுபோலவே தேவனும் செயல்படுவார் என்ரு அவர்கள் வாதிடுகின்றனர்… கச 176.2

எந்த ஒரு ராஜ்யமும் அரசாங்கமும், சட்டத்தை மீறினவர்களுக்கெதிராக என்ன தண்டனை தரப்படவேண்டும் என்பதைக்குறித்து, சட்டத்தை மீறினவர்களே கூறும்படியாக விடுவதில்லை. நம்மிடம் இருக்கின்ற அனைத்திற்காகவும், நாம் பெற்றிருக்கின்ற அவருடைய கிருபையின் நிறைவுகள் அனைத்திற்காகவும், நாம் தேவனுக்கு நன்றிபாராட்டக் கடமைப்பட்டிருக்கின்றோம். அப்படிப்பட்ட ஒரு தேவனுக்கு விரோதமான பாவத்தின் கேடுண்டாக்கும் குணத்தைக் கணக்கிடுவதைக்காட்டிலும் வாகனங்களை ஒரு அளவுக்கோல்கொண்டு அளந்துவிடலாம். ஏனெனில், தேவன் ஒரு பிதாவாகவும், அதேபோல நீதி சம்பந்தமான ஒரு ஆளுநராகவும் இருக்கின்றார். அவரே பிரமாணத்தைக் கொடுத்தவர். அவரே சட்டங்களை ஏற்படுத்தி, தமது சட்டங்களை நிறைவேற்றவும் செய்கின்றவர். தண்டனை இல்லாத சட்டம் வல்லமையற்றதாகும். கச 176.3

அன்புள்ள பிதாவானவர் தமது பிள்ளைகளை விடுவிக்கும் வல்லமையுடையவராயிருக்கையில், அக்கினியினாலுண்டாகும். தேவ தண்டனையை அவர்கள் அடைவதைக் காண விரும்பமாட்டார். என்று முறையீடு செய்யப்படலாம், ஆனால் தேவன் தமது ஆளுக்கைக் குட்பட்டவர்களின் நன்மைக்காகவும், அவர்களின் பாதுகாப்புக்காகவும் பாவிகளைத் தண்டிப்பார். மனிதத் திட்டத்தின்படி தேவன் கிரியை நடப்பிப்பவர் அல்ல. மனிதன் தன் சகமனிதனுக்கு முன்பாக அளவற்ற நீதியைச் செலுத்துவதற்கு உரிமை பெற்றிருக்கவில்லை; அதைத் தேவன் செய்ய முடியும். தனக்குத் தொல்லைக் கொடுத்த பரியாசக்காரர்களில் ஒருவனை நோவா தண்ணீரில் அமிழ்த்தியிருந்தால் தேவன் பிரியப்பட்டிருக்கமாட்டார், ஆனால் தேவன் முழு உலகத்தையும் தண்ணீரில் மூழ்கடித்தார். லோத்து தனது மருமகன்கள்மீது தண்டனையைத் திணிக்க உரிமை பெற்றிருந்திருக்கவில்லை, ஆனால் தேவன் கண்டிப்பான நீதியைச் செலுத்துவார். கச 176.4

தேவன், தாம் செய்யப்போவதாகச் சொல்லியிருப்பவைகளை செய்யமாட்டார் என்று யார் சொல்லக்கூடும்? — 12MR 207-209; 10MR 265 (1876). கச 176.5