Go to full page →

முதல் இரண்டு வாதைகள் கச 178

கிறிஸ்து ஆசரிப்புக் கூடாரத்திலே தமது பரிந்துபேசுகின்ற ஊழியத்தை முடிக்கும்பொழுது, மிருகத்தையும் அதன் சொரூபத்தையும் வணங்கி, அதனுடைய முத்திரையைப் பெற்றுக்கொள்பவர்களை அச்சுறுத்தும்படியாக அவர்களுக்கு எதிராக (வெளி. 14:9,10) கலப்பில்லாத உக்கிரம் ஊற்றப்படும். வரப்போகின்ற வாதைகள், தேவன் இஸ்ரவேலரை எகிப்திலிருந்து விடுவிப்பதற்குச் சற்று முன்பாக எகிப்தின்மீது ஊற்றப்பட்ட வாதைகளுக்கு ஒத்ததாக இருந்தன. ஆனால் தேவனுடைய ஜனங்கள், இவ்வுலகத்திலிருந்து கடைசியாக பரலோகத்திற்கு மீட்டுக்கொள்ளப்படுவதற்குச் சற்று முன்னதாக, உலகத்தின்மீது ஊற்றப்படவிருக்கின்ற வாதைகள் மிகப் பயங்கரமான மர்றும் மிகப் பெரிதான நியாயத்தீர்ப்புகளாக இருக்கப்போகின்றன. அச்சம் விளைவிக்கின்ற அந்த கொள்ளை நோய்களைக்குறித்து யோவான் விவரிக்கும்போது, “மிருகத்தின் முத்திரையைத் தரித்தவர்களும், அதன் சொரூபத்தை வணங்குகிறவர்களுமாகிய மனுஷர்களுக்கு பொல்லாத கொடிய புண்ணுண்டாயிற்று.” “சமுத்திரம் செத்தவனுடைய இரத்தம் போலாயிற்று. சமுத்திரத்திலுள்ள பிராணிகள் யாவும் மாண்டுபோயின” (வெளி. 16:2,3) என்று கூறுகின்றார். — GC 627, 628 (1911). கச 178.4

வாதைகள் பூமியின் குடிகளின்மீது ஊற்றப்பட்டுக்கொண்டிருந்தன. சிலர், தேவனை வெளிப்படையாகக் கண்டனஞ்செய்துகொண்டும் சபித்துக்கொண்டும் இருந்தாகள். வேறு சிலர், தேவனுடைய மக்களிடத்தில், ஓடி, தேவனுடைய நியாயத்தீர்ப்புகளிலிருந்து தாங்கள் எப்படித் தப்பித்துக்கொள்வது என்பதைக்குறித்து கற்றுத்தருப்படியாகக் கெஞ்சினார்கள். ஆனால் பரிசுத்தவான்கள் அவர்களுக்காக எதையும் செய்ய முடியாது. பாவிகளுக்காகக் கடைசிச் சொட்டுக் கண்ணீரும் சிந்தப்பட்டாயிற்று, கடுந்துயரோடு கடைசி ஜெபமும் ஏறெடுக்கப்பட்டாயிற்று, கடைசி பாரத்தையும் சகித்தாகிவிட்டது; கடைசி எச்சரிப்பும் கொடுத்தாகிவிட்டது. — EW 281 (1858). கச 178.5