Go to full page →

ஆறாவது வாதை கச 182

பிசாசுகளின் ஆவிகள் பூமியின் ராஜாக்களிடத்திற்கும் முழு உலகத்திற்கும் சென்று, அவர்களை வஞ்சகத்தில் சிக்கச்செய்யவும், பரலோக அரசாங்கத்துக்கு விரோதமான சாத்தானுடைய கடைசி யுத்தத்தில் அவனுடன் இணைந்துகொள்ள வற்புறுத்தவும் செய்கின்றன. — GC 624 (1911). கச 182.1

தேவ ஆவியானவர் உலகத்திலிருந்து படிப்படியாக எடுத்துக்கொள்ளப்படுகின்றார். சாத்தான் “பூமியின் ராஜாக்களினிடத்திற்கும் உலகம் முழுவதற்கும்” சென்று. அவர்களைத் தனது கொடியிங்கீழாக ஒன்று சேர்த்து, “சர்வவல்லமையுள்ள தேவனுடைய மகாநாளில் நடக்கும் யுத்தத்திற்கு” அவர்களுக்குப் பயிற்சியளிப்பதற்காக, தனது பயங்கரமான படைகளை ஒன்றுதிரட்டிக்கொண்டிருக்கின்றான் (வெளி. 16:14). — 7BC 983 (1890). கச 182.2

கடைசி மாபெரும் யுத்தத்திற்கு உலகமனைத்தையும் சேர்க்கக் கூடியதான, அற்புதம் செய்கின்ற அந்த வல்லமையைப்பற்றி வெளி.16-ம் அதிகாரத்தில் கொடுக்கப்பட்டுள்ள யோவானுடைய விளக்கவுரைக்குப் பிற்பாடு, அடையாளங்கள் விழுகின்றன; “இதோ, திருடனைப்போல் வருகிறேன். தன் மானம் காணப்படத்தக்கதாக நிர்வாணமாய் நடவாதபடிக்கு விழித்துக்கொண்டு, தன் வஸ்திரங்களைக் காத்துக் கொள்ளுகிறவன் பாக்கியவான்” (வெளி.16:15) என்று ஒரு நிச்சயமான தொனியை எக்காளம் மீண்டும் ஒரு முறை கொடுக்கிறது. மீறுதலுக்குப் பிற்பாடு, பாதுகாப்பின் மற்றும் ஒளியின் வஸ்திரம் ஆதாம் ஏவாளை விட்டு நீங்கினபடியால், அவர்கள் நிர்வாணிகளாய் இருந்தார்கள். கச 182.3

நோவாவின் காலத்தில் வாழ்ந்த மக்களைப்போலவும், சோதோமில் குடியிருந்த மக்களைப்போலவும், உலகம் தேவனுடைய அறிவுரைகளையும் எச்சரிப்புகளையும் மறந்துவிட்டிருக்கும். அவர்கள் தங்களது அக்கிரமத்தின் அனைத்துக் கண்டுபிடிப்புகளுடனும் திட்டங்களுடனும் எழும்பினார்கள். ஆனால் சடுதியிலே வானத்திலிருந்து வந்த அக்கினியின்பொழிவு தேவபக்தியில்லாத அந்தக் குடிகளைப் பட்சித்துப்போட்டது. “மனுஷகுமாரன் வெளிப்படும் நாளிலும் அப்படியே நடக்கும். ” (லூக். 17:30). — 14MR 96, 97 (1896). கச 182.4