Go to full page →

கிருபையின் காலம் முடிந்த பின்பு மாபெரும் இக்கட்டுக்காலம் ஆரம்பமாகும் கச 185

மனிதனின் சார்பாக தாம் செய்யும் மத்தியஸ்த வேலையை கிறிஸ்து நிறுத்தும்போது, இந்த இக்கட்டுக் காலம் ஆரம்பமாகும். அப்போது ஒவ்வொரு ஆத்துமாவின் வழக்கும் தீர்மானிக்கப்பட்டிருக்கும். அதன் பின்பு, பாவத்திலிருந்து சுத்திகரிப்பதற்கான நிவர்த்திசெய்கின்ற இரத்தம் அங்கு இருக்காது. தேவனுக்கு முன்பாக, மனிதனின் மத்தியஸ்தராக, இயேசு தமது நிலையை விடும்பொழுது, “அநியாயஞ்செய்கிற்வன் இன்னும் அநியாயஞ்செய்யப்பட்டும்; அசுத்தமாயிருக்கிறவன் இன்னும் அசுத்தமாயிருக்கட்டும்; நீதியுள்ளவன் இன்னும் நீதி செய்யட்டும்; பரிசுத்தமுள்ளவன் இன்னும் பரிசுத்தமாகட்டும்” (வெளி. 22:11) என்ற பக்திவிநயமான அறிவிப்பு கொடுக்கப்படும், பின்பு பாவத்தைக் கட்டுப்படுத்தகூடிய தேவ ஆவியானவர் பூமியிலிருந்து எடுத்துக்கொள்ளப்படுவார். — PP 201 (1890). கச 185.1