Go to full page →

மீதமானவர்கள் தேவனைத் தங்களுக்கு அடைக்கலமாக்கிக்கொள்வர் கச 189

“உன் ஜனத்தின் புத்திரருக்காக நிற்கிற பெரிய அதிபதியாகிய மிகாவேல் அக்காலத்தில் எழும்புவான். யாதொரு ஜாதியாரும் தோன்றினதுமுதல் அக்காலமட்டும் உண்டாயிராத ஆபத்துக்காலம் வரும்; அக்காலத்திலே புஸ்தகத்தில் எழுதியிருக்கிறவர்களாகக் காணப்படுகிற உன் ஜனங்கள் அனைவரும் விடுவிக்கப்படுவார்கள்” — தானி. 12:1. இந்த இக்கட்டுக்காலம் வரும்போது, ஒவ்வொருவருடைய வழக்கும் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டிருக்கும்; அதற்குப் பின்பு கிருபையின் காலம் என்பது இல்லை; பாவத்தை எண்னி வருந்தாதவர்களுக்கு, அங்கு இனி ஒருபோதும் இரக்கம் காத்திருக்காது. ஆனால், ஜீவனுள்ள தேவனுடைய முத்திரை அவரது ஜனத்தின்மீது போடப்பட்டிருக்கும். கச 189.4

வலுசர்பத்தைத் தலைமையாகக்கொண்டு சேனையோடு வந்துகொண்டிருக்கின்ற பூமியின் வல்லமைகளுக்கு எதிரான மரணத்துக்கேதுவான இந்தப் போரட்டத்தில், தங்களைக் காத்துக்கொள்ள இயலாதவர்களான இந்தச் சிறிய மீதமான கூட்டத்தார், தேவனைத் தங்களுக்கு பாதுகாப்பாக ஆக்கிக்கொள்வர். மரணம் மற்றும் உபத்திரவத்தினுடைய தேவனையின்கீழ் அவர்கள் மிருகத்தை வணங்கி அதன் முத்திரையைப் பெற்றுக் கொள்ளவேண்டும் என்ற சட்டம், பூமியின் உயர்ந்த பதவியிலுள்ள அதிகாரிகளால் பிறப்பிக்கப்பட்டுவிட்டது. தேவன் தாமே அவரது ஜனங்களுக்கு இப்பொழுது உதவிசெய்வாராக. அவரது உதவியின்றி அச்சுறுத்தக்கூடிய அந்தப் போராட்டத்தில், அப்பொழுது அவர்களால் என்ன செய்யமுடியும்! — 5T 212,213 (1882). கச 189.5