Go to full page →

வீடுகளாலும் நிலங்களாலும் பிரயோஜனமிராது கச 191

இக்கட்டுக்காலத்தின்பொழுது, சீற்றத்துடனுள்ள கூட்டத்தாருக்கு முன்பாக பரிசுத்தவான்கள் தப்பித்து ஓடவேண்டி இருப்பதால், வீடுகளாலும் நிலங்களாலும் அவர்களுக்குப் பிரயோஜனமிராது. அந்தச் சமையத்தில் நிகழ்கால சத்தியத்தை முன்னேற்றமடையச் செய்வதற்காக, அவர்களது சொத்துக்களை விற்பனை செய்யவும் முடியாது… கச 191.2

யாராவது தங்களது சொத்துக்களை இறுகப் பற்றிப்பிடித்தவர்களாக, அவைகளைக்குறித்துத் தாங்கள் செய்யவேண்டிய கடமை இன்னதென்று தேவனிடத்தில் விசாரிக்காமல் இருப்பார்களானால், அவர்கள் செய்யவேண்டிய காரியத்தை தேவனும் அவர்களுக்கு தெரிவிக்க மாட்டார். மேலும் அவர்கள், தங்களது சொத்துக்களைத் தாங்களே வைத்து கொள்ளும்படியாக அனுமதிக்கப்படுவார்கள். ஆனால், இக்கட்டுக்காலத்தின்போது அவர்களை நசுக்கிப்போடத்தக்கதான அளவிற்கு, அவை ஒரு பெரிய மலையைப்போன்று அவர்களுக்கு முன்பாகக் காணப்படும். அப்போது அவர்கள் அதை விற்பனை செய்ய முயற்சித்தாலும், விற்க முடியாது என்பதை நான் கண்டேன்… ஆனால் அவர்கள் கற்றுக்கொள்ள வேண்டுமென்று விரும்புவார்களானால், எப்பொழுது விற்கவேண்டும், எவ்வளவு விலைக்கு விற்கவேண்டும் என்று, ஏற்ற நேரத்திலே ஆண்டவர் அவர்களுக்குக் கற்றுத்தருவார். — EW 56,57 (1851). கச 191.3

உலகப்பிரகாரமான பொக்கிஷங்களை இறுகப் பற்றிக்கொண்டிருப்பதென்பது தற்போது மிகவும் காலதாமதமான காரியமாகும். தேவனுடைய சாபம் அதிகமதிகமாகவும் மிகவும் கடுமையாகவும் பூமியின்மீது தொடர்ந்திருக்கப்போவதால், அவசியமில்லாத வீடுகளும், நிலங்களும் விரைவில் யாருக்கும் உபயோகமில்லாமல் போய்விடும். உங்களுக்கு உள்ளவைகளை விற்றுப் பிச்சைகொடுங்கள் (லூக். 12:33) என்கின்ற அழைப்பு வருகின்றது. தேவனுக்குச் சொந்தமான பொக்கிஷம் உலகில் அவரது வேலையை முன்னேறச் செய்யும்படிக்குக் காணிக்கையாக அவருக்குத் திரும்பக் கொடுக்கப்படுவதற்கேதுவாக, இத்தூது உண்மையாகக் கொடுக்கப்படவேண்டும். - மக்களின் மனங்களில் பதியச்செய்யுமாறு வலியுறுத்தப்பட வேண்டும். - 16D 348 (1901). கச 191.4