Go to full page →

தேவனுடைய ஜனங்கள் பாவமான விருப்பங்களைச் சிந்தையில் வைத்திருக்கமாட்டார்கள் கச 195

நம்முடைய மகாபிரதான ஆசாரியராகிய இயேசு கிறிஸ்து நமக்காகப் பாவநிவாரணம் செய்துகொண்டிருக்கின்ற இந்த வேளையில், நாம் கிறிஸ்துவுக்குள் பரிபூரணமுள்ளவர்களாக மாறுவதற்குப் பிரயாசப்படவேண்டும். நம்முடைய இரட்சகரை ஒரு சிறு என்ணத்தால் கூட, சோதனையின் வல்லமக்கு இணங்கச்செய்ய சாத்தானால் இயலவில்லை. கச 195.4

ஆனால் மனித இருதயங்களிலே, தவறான விருப்பம் ஏதேனும் ஒன்று எங்காவது இருக்குமானால், அங்கே தனது கால்பதிக்கும் படியான ஒரு வழியைச் சாத்தான் கண்டுபிடிக்கின்றான்; அப்படியாக மனதில் போற்றிவளர்க்கப்படும் சில பாவமான விருப்பங்கள், அவனது சோதனைகள் தங்களது வல்லமையைப் பிரயோகிப்பதற்கு வழியாக அமைகின்றது. ஆனால் கிறிஸ்து இந்த உலகத்தின் அதிபதி வருகிறான், அவனுக்கு என்னிடத்தில் ஒன்றுமில்லை (யோவா 14:30) என்று தன்னைக்குறித்து அறிவிக்கின்றார். வெற்றியை அடையத்தக்கதான எந்த ஒரு காரியத்தையும் சாத்தானால் தேவகுமாரனிடத்தில் காணமுடியவில்லை. அவர் தமது பிதாவின் கற்பனைகளைக் கைக்கொண்டிருந்தார். சாத்தான் தனக்குச் சாதகமாக் உபயோகிப்பதற்கான எந்த ஒரு பாவமும் அவரிடம் காணப்படவில்லை. இக்கட்டுக்கால்த்தில் நிலைத்து நிற்கப் போகின்றவர்கள் மத்தியிலும், ஒரு சிறு பாவமுல்லாத இப்படிப்பட்ட பரிபூரண நிலை கண்டிப்பாகக் காணப்படவேண்டியதாய் இருக்கின்றது. — GC 623 (1911). கச 195.5