அவர்கள் சிங்காசனத்திற்கு முன்பாக, “ஓரு புதுப்பாட்டைப்” பாடினார்கள். இரட்சிக்கப்பட்ட 1,44,000 பேர் தவிர, வேறு ஒருவரும் கற்றுக்கொள்ளக்கூடாத ஒரு பாடலாக அது இருந்தது. அதுதான் விடுதலையின் பாட்டாகிய மோசேயின் பாடலும், ஆட்டுக்குட்டியானவரின் பாடலுமாம். அது இலட்சத்து நாற்பத்து நாலாயிரம் பேர்களுடைய அனுபவத்தைக் குறித்த பாடலாக இருந்ததினால், அவர்கள் தவிர வேறொருவரும் அந்தப் பாடலைக் கற்றுக்கொள்ள முடியாததாயிருந்தது — அது வேறு அந்த ஒரு கூட்டதாரும், இதுவரையில் எப்பொழுதுமே பெற்றிராத ஒரு அனுபவத்தைக் குறிப்பதாக இருக்கின்றது. “ஆட்டுக்குட்டியானவர் எங்கே போனாலும் அவரைப் பின்பற்றுகிறவர்கள் இவர்களே” உயிரோடிருக்கிறவர்களின் மத்தியிலிருந்து, பூமியிலிருந்து மறுரூபமாக்கப்பட்ட இவர்கள், “தேவனுக்கும் ஆட்டுக்குட்டியானவருக்கும் முதற்பலனாக மீட்டுக்கொள்ளப்பட்டவர்கள்” (வெளி. 15:2, 3; 14:1-5). “இவர்கள் மிகுந்த உபத்திரவத்திலிருந்து வந்தவர்கள்.” யாதொரு ஜாதியாரும் தோன்றினது முதல் அக்கால மட்டும் உண்டாயிராத, கொடிய இக்கட்டுக்காலத்தைக் கடந்துவந்திருந்தவர்கள்; அவர்கள் யாக்கோபின் இக்கட்டுக்காலத்தின் வேதனையை சகித்திருந்தவர்கள்; தேவனுடைய நியாயத்தீர்ப்புகள் பூமியின்மீது இறுதியாக ஊற்றப்படும்போது, பரிந்துபேசிகின்ற ஒரு மத்தியஸ்தர் இல்லாமலே அவர்கள் இதைக் கடந்துவந்து நின்றவர்கள் ஆவர். — GC 648, 649 (1911). கச 196.4
இலட்சத்து நாற்பத்து நாலாயிரம் பேர்களில் யார் யார் இருப்பார்கள்? என்பது போன்ற, நம்முடைய ஆவிக்குரிய ஜீவியத்திர்கு பிரயோ ஜனப்படாத கேள்விகளில் நாம் நுழைந்து, வாக்குவாதத்தில் இடுபடுவது தேவனுடைய சித்தம் அல்ல. தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட இவர்களைக்குறித்து, ஒரு குறுகிய காலத்தில் கேள்விக்கிடமின்றி வெளியரங்கமாகும். — 1SM 174 (1901). கச 196.5