Go to full page →

நேரத்தை நிர்ணயம் பண்ணுதல் அவிசுவாசத்திற்கு வழிநடத்தும் கச 24

திரும்பத் திரும்ப நிர்ணயித்த நேரங்கள் கடந்துபோய் விட்டதால், கிறிஸ்துவின் சீக்கிர வருகையைக்குறித்த விஷயத்தில், உலகம் முன்பைவிட ஒரு மிகவும் தீர்மானிக்கப்பட்ட நம்பிக்கையின்மையின் நிலையில் இருக்கின்றது. உலக மக்கள் நேர நிர்ணயக்காரர்களின் தோல்விகளை அருவருப்புடன் நோக்குகின்றனர். மனிதர்கள் அதிகமாக வஞ்சிக்கப்பட்டு விட்டபடியால் எல்லாவற்றிற்க்கும் முடிவு சமீபமாயிற்று என்ற தேவனுடைய வார்த்தையின் ஆதாரப்பூர்வமான சத்தியத்திலிருந்தும் திரும்பச் சென்றுவிடுகின்றனர். - 4வு 307 (1879). கச 24.1

கர்த்தர் இன்னும் ஐந்து ஆண்டுகளுக்குள் வந்துவிடுவார் என்று சகோதரர் (E.P.) டேனியல்ஸ் முன்போலவே நேரத்தை நிர்ணயம் செய்து கூறியிருப்பதை நான் அறிந்திருக்கின்றேன். நாம் நேரத்தை நிர்ணயம் செய்கிறவர்கள் என்ற கருத்து வெகுதூரம் பரவி விடாது என்று நான் இப்பொழுது நம்பியிருக்கின்றேன். அப்படிப்பட்ட கருத்துக்கள் கூறப்பட வேண்டாம். அவைகள் எந்த நன்மையும் செய்யாது. அப்படிப்பட்ட எந்த ஒரு அடிப்படைகளின்மீதாகவும், ஒரு எழுப்புதலைக் கொண்டுவர முயற்சிக்க வேண்டாம். ஆயினும், கொள்கியவெறியர்கள் எதையாகிலும் பிடித்துக் கொண்டு, ஒரு கிளர்ச்சியை உருவாக்கி, கர்த்தருடைய ஆவியை துக்கப்படுத்திவிடாதபடிக்கு. பேசப்படுகின்ற ஒவ்வொரு வார்த்தையைக் குறித்தும் போதிய எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும். கச 24.2

ஜனங்களின் வெறி உண்ர்ச்சிகளை நாம் தூண்டிவிட வேண்டியதில்லை; அப்படிச் செய்வோமாயின் உணர்ச்சிகள் கிளர்ச்சியடையும்; கொள்கை தன் கட்டுப்பாட்டை இழக்கும்; தீங்கிழைப்பதில் ஒரு வல்லமையாக இருக்கின்ற தனது தந்திரங்களையும் மாய்மாலங்களையும், மெல்ல மெல்ல உட்புகுத்தி, தன்னால் இயன்றமட்டும் முழுமூச்சோடு சாத்தான் கிரியைசெய்துகொண்டிருப்பதால், நாம் எல்லாப் பக்கங்களிலும் காக்கப்பட்டிருக்கவேண்டியது அவசியம் என நான் உணருகின்றேன். உணர்ச்சியைத் தூண்டக்கூடிய எந்த ஒரு காரியமும் ஒரு தவறான அடிப்படையின்மீதாக ஒரு மன எழுச்சியை உண்டாக்கும். அப்படிப்பட்ட காரியங்களின் எதிர்விளைவு நிச்சயமாய் வரும் என்பதால், அதைக் குறித்து நாம் கண்டிப்பாக அச்சங்கொள்ளவேண்டும். - Letter 34, 1887. கச 24.3

தேவனால் நடத்தப்படுகின்றோம் என்று உரிமைப்பாராட்டிக்கொள்கின்ற, தாங்கள் அனுப்பப்படுவதற்கு முன்னதாகவே ஓடி, நிறைவேறாத தீர்க்கதரிசனம் நிறைவேறுவதற்கான நாளையும் தேதியையும் குறிப்பாக அளிக்கக்கூடிய சபையிலுள்ள நபர்களால் உருவாக்கப்படும் பொய்யான மற்றும் கொள்கைத் தீவிரவாத இயக்கங்கள் எப்பொழுதும் இருக்கும். அவர்களது தொடர்ச்சியான தோல்விகளும், தவறான பாதைகளுக்குள் நடத்திச் செல்லுதலும், அவர்களை அப்படிச் செய்யவைப்பதில் சத்துரு பிரியமாயிருக்கின்றான். 2SM 84 (1897). கச 24.4