Go to full page →

புனிதமான சரித்திரம் மறு ஆய்வு செய்யப்படும் கச 221

மீட்கப்பட்ட கூட்டத்தினர் ஒவ்வொரு உலகமாகச் சென்று வருவார்கள். அவர்களது பெரும்பகுதியான நேரம் மீட்பின் ரகசியங்களை ஆராய்வதிலே செலவழிக்கப்படும். — 7BC 990 (1886). கச 221.1

நித்திய யுகங்கள் நெடுகிலும் மீட்பைக்குறித்த ஆய்வுப்பொருளானது. மீட்கப்பட்டோரின் இருதயங்களையும் சிந்தகளையும் நாவுகளையும் ஆட்கொள்ளும். கிறிஸ்து தமது சீஷர்களுக்கு வெளிப்படுத்தவேண்டுமென்று ஏங்கிய, ஆனால் சீடர்கள் தங்கள் விசுவாசக் குறைபாட்டால் புரிந்துகொள்ளத் தவறிய சத்தியங்களை மீட்கப்பட்டோர் அறிந்துகொள்வார்கள். இனி நித்திய நித்தியமாக, கிறிஸ்துவின் பூரணமும் மகிமையும் புதிய கோணங்களில் வெளிப்படும். நித்திய யுகங்கள் நெடுகிலும், உண்மையுள்ள எஜமானர் தமது பொக்கிஷங்களிலிருந்து புதியதும் பழையதுமான அநேக காரியங்களை வெளிக்கொண்டு வருவார். — COL 134 (1900). கச 221.2

காலம் துங்குவதற்கு முன்பு தோன்றி, காலம் முடிவடையும்போது முடிவடையப்போகின்ற மாபெரும் போராட்டத்தின் காரியங்கள், அப்போது அவன் முன்பாக திறக்கப்படும். பாவத்தினுடைய துவக்கத்தின் சரித்திரம், சாவுக்கேதுவான பொய், அதன் நேர்மையற்ற கிரியையின் காரியம், சத்தியம் அதன் நியமிக்கப்பட்ட நேர்பாதையிலிருந்து சற்றேனும் விலகாத நிலை, அது தீமையை சந்தித்து மேற்கொண்ட விதம் — ஆகிய அனைத்தும் வெளிப்படையாகக் காட்டப்படும். காணக்கூடிய மற்றும் காணக்கூடாத உலகத்திற்கும் இடையே குறுக்கிட்டிருந்த திரை விலக்கப்பட்டு, அதிசயமான காரியங்கள் வெளிப்படுத்தப்படும். — Ed 304 (1903). கச 221.3

இப்பூமியின் துக்கங்களும் வேதனைகளும் சோதனைகளும் முடிவுற்று அதற்கான காரணம் அகற்றப்பட்டாலும், தேவனுடைய மக்கள் தங்களது இரட்சிப்பின் உன்னத விலையைப்பற்றிய தெளிவான விவேகமுள்ள அறிவை எப்பொழுதும் பெற்றிருப்பார்கள்... கச 221.4

நம் மீட்பர், சிலுவையின் தழும்புகளை என்றென்றைக்குமாக தமது சரீரத்தில் சுமந்துகொண்டிருப்பார். அவரது காயப்பட்ட சிரசின்மீதும், அவரது விலாவின்மீதும், அவரது கரங்கள் மற்றும் கால்களின்மீது மாத்திரமே பாவத்தின் கொடுமையான கிரியையின் அடையாளங்கள் இருக்கும். — GC 651, 674 (1911). கச 221.5