Go to full page →

நம்முடைய மகிழ்ச்சி தொடர்ந்து அதிகரிக்கும் கச 222

இரட்சிப்பின் திட்டத்தில் அநேக இரகசியங்கள் இருக்கின்றன — தேவ குமாரனின் தாழ்வுநிலை, மனிதரைப்போலக் காணப்பட்டத்தக்க தாக அவர் ஏற்றுக்கொண்ட ஒரு தோற்றம், தம்முடைய குமாரனை ஒப்புக்கொடுத்தனால் பிதா காண்பித்த இரக்கம் நிறைந்த அற்புதமான அன்பு இவைகளெல்லாம் பரலோக தூதர்களுக்கு தொடர்ச்சியான ஆச்சரியத்தின் ஆய்வுப்பொருள்களாக இருக்கின்றன... நித்திய யுகங்களாக, இவைகளெல்லாம் மீட்கப்பட்டவர்களின் ஆராய்ச்சிக்குரிய பாடமாக இருக்கும். சிருஷ்டிப்பிலும் மீட்பிலும் தேவனின் கிரியைகளை அவர்கள் தியானிக்கும் போது, ஆச்சரியப்படுகின்ற மகிழ்ச்சியடைகின்ற அந்த மனதுக்குப் புதிய சத்தியம் தொடர்ந்து வெளிப்படும். தேவனுடைய ஞானத்தையும் அன்பையும் வல்லமையையும் அதிகமதிகமாக அவர்கள் கற்றுக்கொள்ளும்போது, அவர்களுடைய மனது எப்பொழுதும் விரிவடைந்து கொண்டேயும், அவர்களுடைய மகிழ்ச்சி தொடர்ந்து அதிகரித்துக்கொண்டேயும் செல்லும். -5T 702, 703 (1889). கச 222.3

நித்தியத்தின் வருடங்கள் ஒவ்வொன்றாக உருண்டோட, தேவனைப் பற்றியும் கிறிஸ்துவைப்பற்றியும் மேன்மையான மற்றும் இன்னும் அநேக மகிமையான வெளிப்பாடுகள் வந்துகொண்டே இருக்கும். அறிவு பெருகிக்கொண்டே செல்லுவதுபோல், அன்பும், பயபக்தியும், மகிழ்ச்சியும் பெருகும். தேவனைப்பற்றி மனிதர் அதிகமாக அறிந்துகொள்ளும்போது, அவரது குணத்தைப்பற்றிய அவர்களது போற்றுதல் மிக அதிகமாய் இருக்கும். மீட்பின் ஜசுவரியங்களையும், சாத்தானுடனான மாபெரும் போராட்டத்தில் தாம் அடைந்த வியப்பூட்டும் சாதனைகளையும், அவர்களுக்கு முன்பாக இயேசுவானவர் திறந்து வெளிப்படுத்தும்பொழுது, மீட்கப்பட்டோரின் இதயங்கள் அதிக ஊக்கமான பயபக்தியுடன் ஆண்டவரை சேவிக்கவேண்டுமென்று உந்தப்பட்டு, அதிகப் பேரானந்தமான மகிழ்ச்சியுடன் அவர்கள் தங்களின் பொற்சுரமண்டலங்களை மீட்டி, ஆயிரம் பதினாயிரமான தங்கள் குரல்களை ஒருங்கிணைத்து, வல்லமையான துதியின் கீதத்தை எழும்பப்பண்ணுவார்கள். — GC 678 (1911). கச 223.1