Go to full page →

ஏழாம்நாள் அட்வென்டிஸ்ட் சபை நிறுவப்பட்டதற்கான காரணங்கள் கச 32

நமது எண்ணிக்கை அதிகரித்தபோது, ஸ்தாபனம் போன்றதொரு அமைப்பு இல்லாவிடில் அங்கு மாபெரும் குழப்பம் விளையும் என்பதும், ஊழியத்தை வெற்றிகரமாக முன்னோக்கிக் கொண்டுசெல்ல முடியாது என்பதும் தெளிவான காரியமாகும், ஊழியத்திற்கு ஆதரவளித்து தாங்குவதற்கும், புதிய இடங்களில் பணியை முன்னேற்றிச் செல்வதற்கும், தகுதியற்ற அங்கத்தினர்களிடமிருந்து சபைகளையும் ஊழியத்தையும் பாதுகாப்பதற்கும், சபை சொத்துக்களை நிர்வகிப்பதற்கும், அச்சகத்தின்மூலம் சத்தியத்தை வெளியீடு செய்வதற்கும், மற்றும் பல நோக்கங்களுக்காகவும் ஸ்தாபனம் மிகவும் இன்றியமையாததாக இருந்தது... கச 32.2

சபையிலே ஒழுங்கும் முழுமையான கட்டுப்பாடும் இருக்க வேண்டியதற்கு, ஸ்தாபனம் அத்தியாவசியம் என்ற வெளிச்சம், தேவனுடைய ஆவியால் அருளப்பட்டிருந்தது. அண்டசராசரம் முழுவதிலுமுள்ள தேவனுடைய கிரியைகளிலெல்லாம், ஒழுங்கும் கிரமும் வெளிப்படையாய்க் காணப்படுகின்றன. ஒழுங்கு என்பது பரலோகத்தின் பிரமானம் ஆகும். பூமியிலுள்ள தேவனுடைய ஜனங்களின் பிரமாணமும் அதுவாகவே இருக்கவேண்டும். - T M 26 (1902). கச 32.3