கிருபையின் கால் முடிவையும், தேவனுடைய ஜனங்களிடையே ஏற்பட இருக்கின்ற அசைவையும்குறித்த, அநேக பத்திகளை சாட்சியாகமங்களிலிருந்து (Testimonies) எடுத்து, இந்த ஜனங்களிடமிருந்து வெளியே வருகின்ற தூய்மையும் பரிசுத்தமுமாக எழும்பக்கூடிய மக்களைக்குறித்து நீங்கள் பேசக்கூடும். ஆயினும், இப்படிப்பட்ட காரியங்கள் அனைத்தும், தற்போது சத்துருவானவனை அநேகர் ஏற்றுக்கொண்டு, அதைகுறித்துப் பேசி அதன்படி செயல்படுவார்களானால், ஏழாம் நாள் அட்வென்டிஸ்ட் மக்கள் மத்தியிலே இதுவரை காணப்படாத மிகப்பெரிய சமயவெறிகொண்ட கிளர்ச்சிகளை நாம் காணலாம். இதைதான் சாத்தானும் விரும்புகின்றான். - 1SM 179 (1809). கச 35.5
ஏழாம் நாள் அட்வென்டிஸ்ட் ஜனங்களை (சபையை) பாபிலோன் என்று அழைக்கவும், தேவனுடைய ஜனங்களை அதிலிருந்து வெளியே வரும்படிக்கு அழைக்கவும்தக்கதான ஒரு செய்தியையும் கர்த்தர் உங்களுக்குக் கொடுக்கவில்லை. இதைக்குறித்து நீங்கள் கொடுக்கக்கூடிய அத்தனை காரணங்களும் எனக்கு மதிப்புள்ளதல்ல, ஏனெனில், இப்படிப்பட்ட செய்திக்கு எதிராக போதுமான வெளிச்சத்தை கர்த்தர் எனக்குக் கொடுத்திருக்கின்றார்... கச 35.6
கர்த்தர் தமது சபையை நேசிக்கின்றார் என்பதை நான் அறிவேன். இந்த சபை , ஒழுங்குமுறை குலைக்கப்படவோ அல்லது தனித்தனி இயக்கமாக சிதறடிக்கப்படவோ கூடாது. இதில் சிறிதளவுகூட எந்த ஒரு உடன்பாடும் இல்லை. அப்படி நடக்கும் என்பதற்க்கு, எந்த ஒரு சிறிதளவு ஆதாரமும் இனி இருக்கப்போவதும் இல்லை. - 2SM 63, 68, 69 (1893). கச 35.7
என் சகோதரர்களே, நான் உங்களுக்குச் சொல்லுகிறதாவது: கர்த்தர் தமது வேளையைச் செய்வதற்கு ஒழுங்குபடுத்தப்பெற்ற அமைப்பு ஒன்றை தமக்கு வைத்திருக்கின்றார். தேவனுடைய கற்பனைகளைக் கைக்கொள்ளுகின்ற ஜனங்களாக ஒழுங்குபடுத்தப் பெற்றிருக்கும் அமைப்பிலிருந்து யாதொருவர் தங்களை விலக்கிக் கொள்ளும்போது, அப்படி அந்த நபர் தனது சொந்த மனுஷீக அளவுகோல்களால் சபையை அளக்க ஆரம்பித்து, அவர்களுக்கு விரோதமாக நியாயத்தீர்ப்பைக் கூற ஆரம்பிக்கும்போது, அவரை தேவன் வழிநடத்தவில்லை என்பதனை நீங்கள் அறிந்துகொள்ளலாம். அந்த நபர் தவறான வழியில் சென்று கொண்டிருக்கின்றார். - 3SM 17, 18 (1893). கச 36.1