Go to full page →

அருளப்பட்ட வெளிச்சத்தின்படி நியாயந்தீர்க்கப்படுதல் கச 41

ஆசரிப்புக்கூடாரத்திலிருக்கின்ற தராசுகளின் மூலமாக, ஏழாம் நாள் அட்வென்டிஸ்ட் சபை நிறுக்கப்படவேண்டியதிருக்கின்றது. சபைக்குக் கொடுக்கப்பட்ட சந்தர்ப்பங்களைப் பொறுத்தும் அனுகூலமான காரியங்களை பொறுத்தும், அது நியாயந்தீர்க்கப்படவிருக்கின்றது. விலைமதிக்க முடியாத தியாகத்தினாலே கிறிஸ்து சம்பாதித்துக் கொடுத்த நன்மைகளுக்கேற்றபடி சபையினுடைய ஆவிக்குரிய அனுபவம் ஒத்திராவிட்டால், ஊழியம் செய்வதற்கென்று கொடுக்கப்பட்ட ஆசீர்வாதங்கள் சபையைத் தகுதிப்படுத்தாவிட்டால். “குறையக் காணப்பட்டாய்” என்கின்ற தீர்ப்பு அதன்மீது கூறப்படும். சபைக்கு அளிக்கப்பட்டிருந்த வெளிச்சத்தினாலும், கொடுக்கப்பட்டிருந்த சந்தர்ப்பங்களினாலும் அது நியாயந்தீர்க்கப்படும்... கச 41.3

அன்போடு நெஞ்சார நேசித்து, ஊழியத்திற்காக வைத்திருந்த வசதிகளான இடங்களின் அழிவு கொடுக்கும் பக்திவிநயமான எச்சரிப்பின் கண்டனங்கள் நமக்குக் கூறுவது: “ஆகையால், நீ இன்ன நிலைமையிலிருந்து விழுந்தாயென்பதை நினைத்து, மனந்திரும்பி ஆதியில் செய்த கிரியைகளைச் செய்வாயாக” (வெளி. 2:5) 10உலகிலேயே மிகப்பெரியதும், மிகவும் அறியப்பட்டதுமான அட்வென்டிஸ்ட் ஸ்தாபனமாகிய, பேட்டில் கிரீக் சுகாதார மையம், 1902-ம் ஆண்டு பிப்ரவரி 18-ம் தேதி எரிந்த தரைமட்டமானது. இதைத் தொடர்ந்து, ரிவியூ அன்ட் ஹெரால்ட் அச்சக சங்கமும்கூட 1902-ம் ஆண்டு , டிசம்பர் 30 - ம் தேதி நெருப்பினால் அழிந்தது.... கச 41.4

சபை தற்போது தனது சொந்த மருளவிழுகையினாலே புளித்துப் போயிருக்கின்ற நிலையிலிருந்து, தனது தவறுக்காக வருந்தி மனந்திரும்பாவிட்டால், தன்னைத்தானே அருவருக்கும் வரை, தன் சொந்த கிரியைகளின் பலனையே புசிக்கும், மாறாக, தீமையை எதிர்த்து, நன்மையைத் தெரிந்துகொண்டு, அனைத்து தாழ்மையோடும் தேவனைத் தேடி, கிறிஸ்து தன்னை அழைத்திருக்கின்ற உன்னதமான அழைப்பை அடைந்து, நித்திய சத்தியத்தின் அஸ்திபாரத்தின்மீது நின்றுகொண்டு, அவளுக்காக ஆயத்தம்பண்ணப்பட்டிருக் கிறவைகளை விசுவாசத்தோடே பற்றிக்கொள்வாளானால், அவள் நிச்சயமாய் குணப்படுவாள். உலகத்தின் கண்ணிகளிலிருந்து பிரிந்து சென்று, தேவன் தனக்கு அளித்திருக்கின்ற சுத்தத்திலும் எளிமையிலும் அவள் தோற்றமளித்து, மெய்யாகவே சத்தியம்தான் தன்னை விடுதலையாக்கிற்று என்பதை தெளிவுப்படுத்திக் காட்டுவாள். அப்போது அவளது அங்கத்தினர்கள், மெய்யாகவே தேவனால் தெரிந்தெடுக்கப்பட்ட அவரது பிரதிநிதிகளாய் இருப்பார்கள். - 14MR 102 (1903). கச 41.5