Go to full page →

வேதவாக்கியங்களை மனப்பாடம் செய்தல் கச 47

ஒவ்வொரு நாளும் விலையேறப்பெற்ற பொன்னான நேரங்கள், வேதவாக்கியங்கள் அநேக முறை படிப்பதற்கும் ஜெபிப்பதற்கும் ஒப்படைக்கப்பட வேண்டும். ஆத்துமாவில் ஆவிக்குரிய வாழ்க்கையை நிலைத்திருக்கச் செய்வதற்கான காரியம், ஒரு வசனத்தை நினைவில் வைத்துக்கொண்டு அதனை மனப்பாடம் செய்வதில் மாத்திரமே இருக்கின்றது. -4T 459 (1880). கச 47.7

பரலோக ராஜாவுக்கு விசுவாசமுள்ளவர்களாய் இருக்கும் வாலிபர்களுக்கு, தேவனுடைய விலையேறப்பெற்ற வார்த்தை, ஒரு அளவு கோலாக இருக்கின்றது. அவர்கள் வேதவாக்கியங்களைப் படிக்கட்டும். அவர்கள் ஒவ்வொரு வசனங்களாக நிலைவில் வைத்து மனப்பாடம் செய்து, கர்த்தர் சொல்லியிருப்பதின் ஒரு அறிவைப் பெற்றுக்கொளளட்டும். - ML 315 (1887). கச 48.1

உன்னைச் சுற்றிலும் வேதவாக்கியங்களின் ஒரு சுவரைக் கட்டு. அப்பொழுது உலகம் அதைத் தகர்க்க இயலாததை நீ காணலாம். வேதவாக்கியங்களை நினைவில் வைத்து அதை மனப்பாடம் செய்தால், சத்தான் அவனுடைய சோதனைகளுடன் வரும்பொழுது, “எழுதியிருக்கிறதே” என்ற வார்த்தையை சரியாகத் திருக்பவும் அவனுக்கு எதிராக நீ சொல்ல முடியும். இந்த வகையாகவே நம்முடைய கர்த்தரானவர், சாத்தானின் சோதனைகளைச் சந்தித்து, அவைகளை எதிர்த்து நின்றார். - RH April 10, 1888. கச 48.2

ஞாபகம் என்ற கூடத்தை விலையுயர்ந்த கிறிஸ்துவின் வார்த்தைகளைகொண்டு அலங்கரியுங்கள். அவைகள் பொன் அல்லது வெள்ளியைக் காட்டிலும், மிகவும் மேலானதாக மதிக்கப்பட வேண்டும். - 6T 81 (1900). கச 48.3

நீ வேலை செய்யும்பொழுது, சட்டைப்பையில் வைத்துக்கொள்ளக்கூடிய சிறிய அளவிலான ஒரு வேதாகமத்தை உன்னுடன் வைத்திரு. அதனுடைய விலையேறப்பெற்ற வாக்குத்தத்தங்களை நினைவில் வைத்து, மனப்பாடம் செய்யும்படியான ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும் மேம்படுத்து. - RH April 27, 1905. கச 48.4

அநேகர், எழுதப்பட்ட வார்த்தையை இழக்கக்கூடிய நேரம் வரும். ஆனால், இந்த வேதவார்த்தைகள் மனதில் பதிக்கப்பட்டிருந்தால், நம்மிடமிருந்து எவரும் அதனை எடுத்துக்கொள்ள இயலாது. - 20MR 64 (1906). கச 48.5

தேவனுடைய வார்த்தையைப் படியுங்கள். அதனுடைய விலையேறப்பெற்ற வாக்குத்தத்தங்களை நினைவில் வைத்து மனப்பாடம் செய்யுங்கள். அப்படிச் செய்வதனால், வேதாகமங்களை நாம் இழக்க நேரிடும்பொழுதும், தேவனுடைய வார்த்தையை நம் மனதில் பெற்றிருப்பவர்களாக நாம் இருக்க முடியும். - 10MR 298 (1909). கச 48.6