Go to full page →

ஒழுக்க வல்லமைகளை கட்டுக்குள் வைத்தல் கச 50

நம்முடைய விசுவாசத்திற்கான ஒரு காரணத்தைக் கொடுக்கக்கூடிய திறமை, ஒரு நல்ல சாதனையான காரியமாகும். ஆயினும், சத்தியம் இதைக்காட்டிலும் ஆழமாக ஊடுருவிச் செல்லாவிட்டால், ஆத்துமா ஒருபொதும் இரட்சிக்கப்பட முடியாது. ஆகையால், அனைத்து ஒழுக்கக்கேடுகளினின்றும் இருதயம் கண்டிப்பாகச் சுத்தம் செய்யப்படவேண்டும். - OHC 142 (1893). கச 50.2

தங்களது எண்ணங்களின் மற்றும் கற்பனைகளின் மீதான கட்டுப்பாட்டை பயிற்சி செய்யவேண்டியது என்பது ஒரு கடமை என்று ஒரு சிலரே உணர்கின்றனர். ஒழுங்குபடுத்தப்படாத மனதை, பயனுள்ள விஷயங்களின்மீது நிலையாக வைப்பதென்பது கடினமான காரியமாகும். ஆனால், எண்ணங்கள் சரியான விதத்தில் பயன்படுத்தபடாவிட்டால், சமயம் சார்ந்த காரியங்கள் ஆத்துமாவில் வளர்ச்சியடையாது. பரிசுத்தமானதும் நித்தியமானதுமான காரியங்களினால், மனம் முன்கூட்டியே ஈடுபடுத்தப்பட்டிருக்க வேண்டும். இல்லாவிட்டால், அற்பமானதும் மேலோட்டமானதுமான எண்ணங்களை அது வளர்த்துவிடும். அறிவுத்திறன் மற்றும் ஒழுக்க வல்லமை ஆகிய இரண்டுமே கட்டாயமாக பயிற்றுவிக்கப்படவேண்டும். அப்படிப் பயிற்சி செய்வதினால், அவைகள் பெலப்பட்டு முன்னேற்றமடையும். - OHC 142 (1893). கச 50.3

இழிநிலையான மற்றும் சிற்றின்ப நாட்டமுள்ள வல்லமைகளைக் காட்டிலும், நாம் மிகவும் அதிகமாக ஒழுக்க வல்லமைகளை பெலப்படுத்தவும், தூய்மையான கற்புடைய சிந்தனைகளை ஊக்கப்படுத்தி மேம்படுத்தவும் வேண்டும். தேவனே, எங்களது சுயவிருப்பத்திற்குப் பணிந்து செல்கின்ற ஆவல்களிலிருந்து நாங்கள் விழிப்படைய எங்களுக்கு உதவி செய்யும். - MM 278 (1896). கச 50.4