Go to full page →

உபவாசித்து ஜெபிப்பதற்கான நேரம் கச 59

இப்பொழுதிலிருந்து காலத்தின் முடிவு வரையிலும், தேவனுடைய மக்கள் மிகவும் ஊக்கமாகவும், அதிக விழிப்போடும், தங்களது சொந்த ஞானத்தை நம்பாமல் தங்களது அதிபதியின் ஞானத்தையே நம்பியிருக்க வேண்டும். அவர்கள் உபவாசித்து ஜெபிப்பதற்கான நாட்களை ஒதுக்க வேண்டும். மிகவும் எளிமையான உணவை அளவாக உண்ண வேண்டும். — CD 188, 189 (1904). கச 59.3

அனைவருக்கும் பரிந்துரைக்கப்பட வேண்டிய உண்மையான உபவாசம் என்பது, நம் உணர்வுகளைத் தூண்டிவிடக்கூடிய அநைத்து வகை உணவுகளைத் தவிர்த்து, தேவன் ஏராளமாய் அளித்திருக்கின்ற முழுசத்தும் அடங்கிய எளிமையான உணவை சரியான விதத்தில் உபயோகிப்பதே ஆகும். என்னத்தைக் குடிப்போம், என்னத்தைப் புசிப்போம் என்று அநித்தியமான உணவைக்குறித்து மனிதன் குறைவாகவே சிந்திக்க வேண்டும். மாறாக, முழுமையான ஆவிக்குரிய அனுபவத்திற்கு மனவுறுதியையும் பலத்தையும் அளிக்கக்கூடிய பரலோக மன்னாவைக் குறித்து மிகவும் அதிகமாக சிந்திக்க வேண்டும். — MM 283 (1896). கச 59.4

தேவபக்தியின் புளித்தமா அதனுடைய வல்லமையை முழுமையாக இழந்துவிடவில்லை. சபையின் ஆபத்தும் சோர்வும் அதிகரிக்கும் அந்த நேரத்திலே, சத்திய வெளிச்சத்திலே நின்றுகொண்டிருக்கின்ற சிறு கூட்டத்தார், தேசத்திலே செய்யப்படுகின்ற அருவருப்புகளுக்காகப் பெருமூச்சுவிட்டு அழுவார்கள். சபையின் விசுவாசிகள் உலகத்தின் வழக்கங்களைப் பின்பற்றி, அவைகளைச் செய்துகொண்டிருப்பதால், அந்தச் சிறிகூட்டத்தினரின் அதிகமான ஜெபங்கள் விசேஷமாக சபையின் சார்பாக மேலெழும்பும். — 5T 209,210 (1882). கச 59.5