Go to full page →

தொலைக்காட்சியும், திரையரங்கும் கச 63

மிகவும் ஆபத்தான பொழுதுபோக்கு இடங்களில் ஒன்று திரை அரங்கமாகும். அது நன்னடத்தையையும் நல்லொழுக்கத்தையும் கற்றுத்தரும் பள்ளியாக இருப்பதற்குப் பதிலாக, அநேகமுறை ஒழுக்கத்தைக் கற்றுத்தரும் இடம் என்று கூறிகொண்டு உரிமை பாராட்டினாலும், அப்படி இல்லாத ஒரு இடமாக, ஒழுங்கீனத்தை வளர்க்கின்ற ஒரு இடமாகவே இருக்கின்றது. இப்படிப்பட்ட பொழுதுபோக்குகளின் மூலமாக ஒழுக்கக்கேடான பழக்கவழக்கங்களும், பாவம் நிறைந்த இயற்கையான மனப்பாங்குகளும் பலப்படுத்தப்பட்டு உறுதியாக்கப்படுகின்றன. கீழ்த்தரமான பாடல்கள், காமவெறிகொண்ட உடல் அசைவுகள், முகபாவனைகள் மற்றும் செய்கைகள் சிந்தனை திறனை சீர்கெடுத்து, ஒழுக்கமான காரியங்களைத் தரம் குறையச் செய்கின்றன. கச 63.2

கற்பனைத்திறனை விஷமாக்கி, மார்க்க சம்பந்தமான எண்ணங்களை அழித்து, அமைதியான மகிழ்ச்சிக்கான விருப்பத்தையும், வாழ்க்கையின் உண்மைநிலைபற்றிய தெளிந்த அறிவையும் மழுங்கச் செய்கின்றதான திரையரங்கு பொழுதுபோக்குகளைப்போல அதிக வல்லமைகொண்ட செல்வாக்கான காரியம், நமது தேசத்தில் வேறு எதுவும் இருக்க முடியாது. இப்படிப்பட்ட இடங்களுக்கு வழக்கமாக கலந்துகொள்ளும் ஒவ்வொரு வாலிபரும் கொள்கையிலே நேர்மையற்றிருப்பார்கள். வெறியூட்டும் மதுவிற்கு உள்ள விருப்பம் அதனுடைய பயன்பாட்டால் பெலப்படுத்தப்படுவதுபோல, இந்த தவறான காட்சிகளைக் காணும் ஆவல் ஒவ்வொரு பாவ விருப்பத்தையும் அதிகரிக்கும். — 4T 652, 653 (1881). கச 63.3

ஆடல் அரங்குகளிலோ அல்லது திரை அரங்குகளிலோ செலவிடப்படும் நேரம், தேவனின் ஆசிவாதத்தை பெற்றுக்கொள்ள முடியாது. எந்த ஒரு கிறிஸ்தவனும் அப்படிப்பட்ட இடத்திலே தன் மரணத்தை சந்திக்க விரும்பமாட்டான். ஒருவரும் கிறிஸ்து வரும் நேரத்தில், அப்படிப்பட்ட இடத்தில்தான் காணப்பட விரும்பமாட்டார். — MYP 398 (1882). கச 63.4

கருத்தூன்றிய மற்றும் ஆவிக்குரிய எண்ணங்களை அகற்றாத பொழுதுபோக்குகள் மட்டுமே பாதுகாப்பான பொழுதுப்போக்குகள் ஆகும். கிறிஸ்துவை நம்மோடு அழைத்துச் செல்லக்கூடிய இடங்களே பாதுகாப்பான பொழுதுபோக்கு இடங்களாகும். — OHC 284 (1883). கச 63.5