இங்கொன்றும் அங்கொன்றுமாக தனி ஒரு மனிதனைத் தெரிந்துகொண்டு, தமது சத்தியத்தை நம்பி ஒப்படைப்பதற்கு தகுதியுள்ளவர்கள் அவர்கள் மாத்திரமே என்பதுபோல, தேவன் தம்முடைய மக்களைக் கடந்து சென்றுவிடவில்லை. சபை அமைப்பின் நிலைநிறுத்தப்பட்ட நம்பிக்கைக்கு எதிரான புதிய வெளிச்சத்தை அவர் தனிப்பட்ட ஒரு மனிதனுக்கு கொடுப்பது இல்லை. ஒவ்வொரு சீர்திருத்தத்திலும், இப்படிப்பட்ட உரிமையை எடுத்துக்கொள்ளும் மனிதர்கள் எழும்பியிருக்கிறார்கள்… தங்களது சகோதரருக்கும் மேலாக, தேவன் தங்களுக்கு விசேஷமான வெளிச்சம் கொடுத்திருப்பதாக ஒருவரும் தன்னம்பிக்கையுடன் இருக்கவேண்டாம்… கச 65.6
சத்தியத்திற்கு மாறாகத் தோன்றாத, சில புதிய அடிப்படையான கருத்க்களை சிலர் ஏற்றுக்கொளகின்றனர். அழகானதாகவும் முக்கியமானதாகவும் ஆடையணிவிக்கப்பட்டிருப்பதாக அவனுக்கு அக்கருத்து தோன்றுமளவும் அதில் கருததூன்றியிருக்கின்றான். ஏனெனில், இது போன்ற பொய்யான தோற்றத்தை அளிப்பதற்கு சாத்தானுக்கு வல்லைமை இருக்கின்றது. இறுதியிலே அது அனைத்தையும் கவருகின்ற தலைமைக் கருத்தாகவும், அனைத்திற்கும் மையமாக விளங்கும் மாபெரும் ஒரு காரியமாகவும் உருவாகிவிடும். அதனால், சத்தியம் இருதயத்திலிருந்து வேரோடு பிடுங்கப்பட்டுவிடுகின்றது. கச 66.1
சத்தியத்திலிருந்து மனதைத் திசைத்திருப்பும் தன்மையுள்ள இந்த முக்கிய காரியங்களைக் குறித்து, நீங்கள் ஜாக்கிரதையாயிருக்க வேண்டுமென்று நான் உங்களை எச்சரிக்கின்றேன். தவறுகள் ஒருபோதும் கேடுவிளைவிக்காமல் இருக்காது. அது ஒருபோதும் பரிசுத்தப்படுத்துவதில்லை. மாறாக, குழப்பத்தையும் பிரிவினையையுமே கொண்டுவரும். — 5T 291, 292 (1885). கச 66.2