Go to full page →

தேவ வார்த்தையை உயர்த்திப்பிடியுங்கள் கச 67

கிளர்ச்சியூட்டும் ஒரு உணர்வை உண்டாக்கும் விதத்தில் நாம் வேலை செய்தால், நாம் விரும்பும் அனைத்தையும் பெறலாம். மேலும், கூடுமானவரை எப்படிச் சமாளிப்பது என்று நாம் அறிந்துருப்பதைக் காட்டிலும் அதிகமாக அறிந்துகொள்ளலாம். ஆனால், அதற்கு மாறாக, அமைதியாக — அதே நேரம் தெளிவாக, “திருவசனத்தைப் பிரசங்கம் பண்ணுங்கள்.” கிளர்ச்சியூட்டும் ஒரு உணர்வைத் தூண்டிவிடுவது நம் வேலை என்பதுபோல நாம் அதைக் கருதக்கூடாது. தேவ ஆவியானவர் மாத்திரமே, அப்படிப்பட்ட ஒரு ஆரோக்கியமான உற்சாகத்தை உண்டாக்க முடியும். தேவன் கிரியை செய்யட்டும், ஆனால் மனித ஏதுகரம் விழிப்போடும் ஜெபத்தோடும் காத்திருந்து, ஒவ்வொரு காணப்பொழுதும் இயேசுவையே நோக்கிப் பார்த்து, ஒளியாயும் ஜீவனாயும் இருக்கின்ற விலையுயர்ந்த அவரது ஆவியால் கட்டுப்படுத்தப்பட்டு வழிநடத்தப்படும்படி, அவர் முன்பாக தாழ்மையாய் நடந்து கொள்ளட்டும். — 2SM 16, 17 (1894). கச 67.3

தேவனுடைய திடமான வார்த்தையுடன் நாம் ஜனங்களிடத்தில் செல்லவேண்டும். அவர்கள் அந்த வார்த்தையை ஏற்றுக்கொள்ளும்பொழுது, பரிசுத்த ஆவியானவர் அவர்களிடத்தில் வருவார். நான் முன்கூறியிருக்கிற வண்ணமாக, ஜனங்களின் மனங்கள் மெச்சத்தகுந்த விதத்தில் அவர் எப்பொழுதும் வருவார். தேவனுடைய ஒவ்வொரு உண்மையான பிள்ளையையும் தூண்டக்கூடிய அமைதியையும், பெருந்தன்மையையும், தெய்வ பயத்தையும் நம்முடைய பேச்சிலும் நாம் பாடுகின்ற விதத்திலும் நமது அனைத்து ஆவிக்குரிய செயல்பாடுகளிலும் நாம் வெளிக்காட்டவேண்டும். — 2SM 43 (1908). கச 67.4

உணர்வுகளின் மூலமாக அல்ல, கிளர்ச்சியூட்டக்கூடிய காரியத்தின் மூலமாக அல்ல — வேத வசனத்தின் மூலமாகவே — மக்களை சத்தியத்திற்கு கீழ்ப்படியத்தக்கதான பாதிப்பை உண்டுபண்ண வேண்டும். தேவனுடைய வார்த்தை என்ற தளத்தின்மீது நாம் பாதுகாப்புடன் நிற்க முடியும். — 3SM 375 (1908). 1Testimonies for the Church, Vol. 6. Pp 349—368-ல், “The Observance of the Sabbath” என்ற தலைப்பின் கீழாக பார்க்கவும். கச 68.1

*****