Go to full page →

ஹண்ட்ஸ்வில், அலபாமா (Huntsville, Alabama) கச 74

கிரேஸ்வில்லிலும்1, ஹண்ட்ஸ்வில்லிலும் பள்ளி வேலைகளை பொறுப்பேற்றிருக்கின்றவர்கள், இந்த நிறுவனங்களைக்கொண்டு இப்படிப்பட்ட தொழிற்சாலைகளை நிறுவுவதற்கு என்ன செய்யப்படலாம் என்று யோசிக்க வேண்டும். ஏனெனில், நகரங்களைவிட்டுப் போய்விட வேண்டும் என்று விரும்புகின்ற நமது ஜனங்கள், அங்கு ஒரு அதிக செலவில்லாத எளிமையான வீடுகளை அமைத்துக்கொண்டு இப்பள்ளிகளில் வேலை வாய்ப்பைப் பெறலாம். — Letter 25, 1902. கச 74.5

ஹண்ட்ஸ்வில் பள்ளியோடு வயல் நிலத்தையும் சேர்த்து வாங்கியது தேவனுடைய வழிநடத்துதலே ஆகும். அது ஒரு நல்ல அமைப்பான இடமாகும். இதன் அருகில் அநேக பெரிய தோட்டங்களும் இருக்கின்றன. சில மாணவர்கள், ஹண்ட்ஸ்வில் பள்ளியில் தங்கள் கட்டணத்தைக் கட்டுவதற்கான பணத்தை சம்பாதிக்கும்படியாக, கோடை விடுமுறையில் இந்தத் தோட்டங்களுக்குச் சென்று வேலை செய்தனர். — Sp T-B (12) 11 (1904). கச 74.6

ஹண்ட்ஸ்வில் பள்ளியின் பண்ணை மிகவும் அழகான ஒரு இடமாகும். முந்நூறு ஏக்கருக்கும் அதிகமான நிலப்பரப்பைக் கொண்ட இடமாக விளங்குகின்ற அதன் வயல்நிலத்திலும், தொழிற்துறை சார்ந்த பயிற்சிப் பிரிவுகளிலும், பயிர்கள் வளர்க்கும் பிரிவுகளிலும், அநேகப் பணிகள் நிறைவேற்றப்பட வேண்டும். — SpT-B (12X) 13 (1904). கச 75.1

ஹண்ட்ஸ்வில் பள்ளிகூட நிலத்தை விற்றுவிட்டு, சிறிதான அளவிலே நிலத்தை வாங்கினால் நலமாக இருக்காதா? என்ற கேள்வி சமீபத்தில் என்னிடத்தில் கேடட்கப்பட்டது. இந்தத் தோட்டம் விற்கப்படக்கூடாது என்றும், பெற்றிருக்கக்கூடிய அதன் சூழ்நிலைகள் பல வண்ணங்களிலும் பிரகாசிக்கக்கூடிய ஒரு பள்ளியாக பல துறைகளிலூ முன்னேறிச் செல்வதற்கான அநேக நன்மைகளால் நிறைந்துள்ளது என்றும், அறிவுரையானது எனக்கு அளிக்கப்பட்டது. — SpM 359 (1904). கச 75.2