Go to full page →

தீமையின் பிறப்பிடங்களான பட்டணங்கள் கச 81

இன்பமளிக்கின்ற பொழுதுபோக்கு மற்றும் கேளிக்கை மையங்கள் பட்டணங்களில் உள்ளன. தங்களது பிள்ளைகளுக்கு அதிக லாபரகரமான சந்தர்ப்பங்களை அளிப்பதாக நினைத்துக்கொண்டு. அவர்களுக்காக பட்டணத்திலுள்ள ஒரு இல்லத்தைத் தெரிந்துகொள்ளும் அநேக பெற்றோர்கள், ஏமாற்றத்தைச் சந்தித்து, மிகவும் தாமதமாக தங்களது பயங்கரமான தவறுக்காக மனம் வருந்துவார்கள். இன்றைய பட்டணங்கள் விரைவாக சோதோம் கொமோராவைப்போல மாறிக்கொண்டிருக்கின்றன. ஏராளமான விடுமுறை நாட்கள், மக்களை சோம்பலுக்கு ஊக்கமூட்டுகின்றன. கிளர்ச்சியூட்டும் விளையாட்டுகளான — திரை அரங்குகள், குதிரைப் பந்தயங்கள், சூதாட்டம், மது அருந்துதல், கேளிக்கையில் பெரிதும் ஈடுபடுதல் ஆகியவை — தீவிரமான செயலைச் செய்வதற்கு ஒவ்வொரு தீவிர காம உணர்ச்சிகளையும் தூண்டிவிடுகின்றன. இப்படிப்பட்ட மலிவான மனப்பாங்கினால் வாலிபர்கள் அடித்துச்செல்லப்படுகின்றனர். — COL54 (1900). கச 81.1

பட்டணங்கள் குழப்பங்களாலும் கொடுமைகளாலும் குற்றங்களாலும் நிறைந்திருக்கும் என்றும், உலக வரலாற்றின் முடிவு மட்டும் இவைகள் அதிகரிக்கும் என்ற வெளிச்சம் எனக்குக் கொடுக்கப்பட்டது. — 7T 84 (1902). கச 81.2

உலகம் முழுவதிலும் பட்டணங்கள் தீய செயல்களின் பிறப்பிடங்களாக மாறிக்கொண்டு வருகின்றன. எப்பக்கமும் தீமையின் கோரக்காட்சிகளும், சத்தங்களுமே நிறைந்து இருக்கின்றன. ஒழுக்கங்கெட்ட வாழ்க்கையையும் காமவெறியையும், கவர்ச்சியூட்டி இழுக்கக்கூடிய மிகுதியான காரியங்கள் எங்கும் நிறைந்திருக்கின்றன. — MH 363 (1905). கச 81.3