Go to full page →

பட்டணங்களில் ஊக்கமான முயற்சிகள் அவசியம் கச 86

நம்முடைய கர்த்தரின் வருகைக்கு ஆயத்தப்படுவதில், மாபெரும் பட்டணங்களிலே நாம் ஒரு மாபெரும் வேலையை செய்தாக வேண்டும். இவ்வகையான மாபெரும் மையங்களிலே கொடுக்கவேண்டிய, பக்தி விநயமான ஒரு சாட்சி நம்மிடம் இருக்கின்றது. — Words of Encouragement to Self-supporting Workers (Ph 113) 5 (1909). கச 86.4

மாபெரும் வியாபார உலகத்திற்கு, இந்தக் காலத்திற்கான எச்சரிப்பின் தூது ஊக்கத்துடன் அளிக்கப்படாமல் இருக்கின்றது. ஒவ்வொரு நாளும் வர்த்தகம் மற்றும் பொருளாதார மையங்கள் ஆண்கள் மற்றும் பெண்கள் கூட்டத்தால் நிரம்பியிருக்கின்றன. இந்தக் காலத்திற்குரிய சத்தியம் அவர்களுக்குத் தேவையாக இருக்கின்றது. ஆனால் அதனுடைய உன்னதமான கொள்கைகளின் இரட்சிக்கின்ற அறிவை அவர்கள் பெற்றிருக்கவில்லை. ஏனென்றால், இப்படிப்பட்ட வகுப்பினர் எங்கு இருக்கின்றார்களோ, அங்கு அவர்களைச் சென்றடையத்தக்க விதத்தில் ஆர்வமிக்க மற்றும் ஊக்கத்துடன்கூடிய முயற்சிகள் எடுக்கப்படவில்லை. — CW 14 (1909). கச 86.5

மூன்றாம் தூதனின் தூது தற்போது அறிவிக்கப்படவேண்டும். வெகுதூரத்திலுள்ள இடங்களில் மாத்திரம் அல்ல, அருகிலுள்ள புறக்கணிக்கப்பட்ட இடங்களிலும், எச்சரிக்கப்படாமலும் இரட்சிக்கப்படாமலுமிருக்கின்ற திரளான கூட்டம் வசித்துக்கொண்டிருக்கின்ற இடங்களிலும் அறிவிக்கப்படவேண்டும். எங்குமுள்ள நம்முடைய பட்டணங்கள் தேவனுடைய ஊழியக்காரர்களை, ஊக்கமான மற்றும் முழு மனதோடுகூடிய ஊழியத்தை செய்யும்படியாக அழைக்கின்றன. — RH Nov. 17, 1910. கச 86.6