Go to full page →

ஞாயிறு ஆசரிப்புச் சட்டங்கள் ரோமாபுரியைக் கனப்படுத்தும் கச 95

அமெரிக்க ஐக்கிய நாட்டின் முன்னணியில் இருக்கின்ற சபைகள் தங்களால் பொதுவாக வைக்கப்பட்டிக்கும் ஒரே மாதிரியான உபதேசத்தினுடைய கருத்துகளின் அடிப்படையில் ஒன்றிணைந்து, தங்களது சட்டங்களை வலியுறுத்தும்படியாகவும், தங்களது நிறுவனங்களைத் தாங்கும்படியாகவும் நாட்டிலே செல்வாக்கை உண்டாக்கும். அப்போது புராட்ஸ்டண்ட் அமெரிக்கா, ரோம ஆட்சிமுறைக்கேதுவான ஒரு சொரூபத்தை உண்டுபண்ணியிருக்கும். அதற்கு இணங்காதவர்கள்மீது, கொண்டுவரப்படுகின்ற சமுகத் தண்டனைகள் தவிர்க்க இயலாத முடிவாக இருக்கும்… கச 95.6

புராட்டஸ்டண்ட் சபைகளின் சார்பாக ஞாயிறு ஆசரிப்பின் வலியுறுத்துதல், போப்புமார்க்க அதிகாரத்தின் ஆராதனையை வலியுறுத்துவதாகும்… கச 96.1

உலகப்பிரகாரமான வல்லமையினால், மத சம்பந்தமான ஒரு கடமையை செய்ய வலியுறுத்தும் செயல், சபைகள் தாங்களாகவே மிருகத்திற்கு ஒரு சொரூபத்தை உண்டுபண்ணுவதாகும். எனவே, ஞாயிறு ஆசரிப்பை அமெரிக்க ஐக்கிய நாட்டில் வலியுறுத்துவது, மிருகத்தையும் அதன் சொரூபத்தையும் வணங்கும்படி வலியுறுத்தும் ஒரு காரியமாகும். — GC 445, 448, 449 (1911). கச 96.2

புராட்டஸ்டண்ட் மார்க்கம் ரோம வல்லமையின் கரத்தைப் பற்றிப் பிடிக்கத்தக்கதாக பெரும் பிளவிற்கு அப்பாலும் தனது கரத்தை நீட்டும்; புராட்டஸ்டண்டுகள் ஆவிமார்க்கத்தின் கரங்களைப் பற்றிப்பிடிப்பதற்காக, அந்த படுகுழிக்கு அப்பாலும் கரங்களை நீட்டுவார்கள். இந்த முக்கூட்டு ஐக்கியத்தின் செல்வாக்கின்கீழ், புராட்டஸ்டண்ட் மற்றும் குடியரசு நாடான நமது நாடு (ஆமெரிக்கா) அதன் அரசியலமைப்பின் ஒவ்வொரு கொள்கையையும் மறுத்துப்போடும்பொழுதும், போப்பாதிக்கப் பொய் உபதேசங்களையும் வஞசகங்களையும் பரப்புவதற்காக எல்லா ஏற்பாடுகளையும் செய்யும்பொழுதும், சாத்தான் தனது அற்புதக்கிரியைகளை நடப்பிக்கும் நேரமும், உலகத்தின் முடிவும் சமீபித்து விட்டது என்பது நாம் அறிந்துகொள்ளலாம். — 5T 451 (1885). கச 96.3