Go to full page →

உலகளாவிய ஞாயிறு சட்டம் கச 98

வரலாறு மீண்டும் திரும்பும்; பொய்யான மார்க்கம் உயர்த்தப்படும். பொதுவான ஒரு வேலை நாளான, எந்த ஒரு பரிசுத்தத்தையும் பெற்றிராத வாரத்தின் முதலாம் நாள் பாபிலோனிலே நிறுத்தப்பட்ட சிலையைப்போல நிலைநிறுத்தப்படும். எல்லா நாடுகளும், எல்லா பாஷைக்காரரும், எல்லா ஜனக்கூட்டத்தாரும், இந்தப் போலியான ஓய்வுநாளை ஆராதிக்கும்படியாக கட்டளை கொடுக்கப்படுவர்… இந்த நாளை ஆராதிக்க வேண்டுமென்று வலியுறுத்தப்படும் சட்டம், உலகம் முழுவதற்கும் சென்றடைய இருக்கின்றது. — 7BC 976 (1897). கச 98.4

மத சுதந்திரத்தைப் பெற்றிருக்கும் நாடாகிய அமெரிக்கா, போப்பு மார்க்கத்தோடு இணைந்து பொய்யான ஓய்வுநாளை கனப்படுத்தும்படி மக்களைக் கட்டாயப்படுத்தி, அவர்கள் மனச்சாட்சியை வற்புறுத்தும் போது, இந்த பூமியின் மீதிருக்கின்ற ஒவ்வொரு தேசத்தின் மக்களும், இவளது முன்மாதிரியைப் பின்பற்றத்தக்கதாக வழிநடத்தப்படுவார்கள். — 6T 18 (1900). கச 98.5

உலகம் முழுவதும் பங்கு வகிக்கக்கூடிய இந்த மாபெரும் கடைசிப்போரட்டத்தில், ஓய்வுநாளைப் பற்றின சர்ச்சைக்குரிய ஒரு கேள்வி முக்கிய விஷயமாக இருக்கும். — 6T 352 (1900). கச 98.6

வெளிநாடுகளான மற்ற நாடுகள், அமெரிக்க ஐக்கிய நாட்டின் மாதிரியைப் பின்பற்றும். அமெரிக்கா முன்நின்று நடத்திச் சென்றாலும், உலகத்தின் எல்லாப் பகுதியிலும் இருக்கின்ற நமது மக்கள்மீது, மேலும் இதேபோன்ற இக்கட்டு வரும். — 6T 395 (1900). கச 98.7

உணண்மைக்குப் பதிலாகப் பொய்யை நிலைநாட்டுவதே நாடகத்தின் கடைசிக் காட்சியாக இருக்கும். உண்மைக்குப் பதிலாக நிலைநாட்படப்ட்ட பொய்யான இந்தச் செயல் உலகளாவியதாக மாறுமபோது, தேவன் தம்மை வெளிப்படுத்துவார். மனிதனுடைய சட்டதிட்டங்கள் தேவனுடைய பிரமாணங்களுக்கு மேலாக உயர்த்தப்படும்போதும், இந்த உலகத்தின் வல்லமைகள் வாரத்தின் முதல்நாளை கைக்கொள்ளவேண்டுமென்று மனிதர்களைக் கட்டாயப்படுத்த முயற்சிக்கும்போதும், தேவன் கிரியை செய்யவேண்டிய நேரம் வந்துவிட்டதென்று அறிந்து கொள்ளுங்கள். — 7BC 980 (1901). கச 98.8

தேவனுடைய பிரமாணத்திற்குப்பதிலாக மனிதனுடைய சட்டங்களையும், வேதாகம ஓய்வுநாளின் இடத்திலே ஞாயிற்றுக் கிழமையை, மானிட அதிகாரத்தின் மூலமாக மாத்திரம் உயர்த்திப் பிடித்தல் இந்த நாடகத்தின் கடைசி காட்சியாக இருக்கும், தேவனுடைய பிரமாணத்திற்குப் பதிலாக வைக்கப்பட்ட இந்தச் சட்டம் உலகளாவியதாகும் போது, தேவன் தம்மை வெளிப்படுத்துவார். பூமியைக் கடுடிமையாக அசைக்கும்படியாக, தேவன் தமது மாட்சிமையில் எழும்புவார். — 7T 141 (1902). கச 99.1