Go to full page →

எல்லாவிதமான உபத்திரவமும் கச 108

ரோமன் கத்தோலிக்க சபையால் புராட்டஸ்டண்ட் மார்க்கம் உபத்திரவப் படுத்தப்பட்டபோது, இயேசு கிறிஸ்துவின் மார்க்கம் ஏறக்குறைய முற்றிலும் நிர்மூலமாகிவிட்டது. புராட்டஸ்டண்ட் மார்க்கமும் போப்பு மார்க்கமும் இணைந்து செயல்படும்பொழுது, உபத்திரவங்கள் மேலும் கடுமையாக இருக்கும். — 3SM 387 (1889). கச 108.1

கற்பனைகளைக் கைக்கொள்ளுகின்ற உண்மையான தேவனுடைய ஜனங்களின் மனச்சாட்சியைக் கெடுப்பதற்கு அவர்களை வற்புறுத்தத்தக்கதாக, மறைவான ஆயுதப் படையை ஆயிரக்கணக்கில் அவர்கள்மீது பிரயோகப்படுத்துவதற்காக சாத்தான் வைத்திருக்கின்றான் — Letter 30a, 1892. கச 108.2

இப்பொழுது நடக்ககூடிய எதைக்குறித்தும் நாம் ஆச்சிரியப்படவேண்டிய அவசியமில்லை. பேரச்சமூட்டக்கூடிய எந்த வளர்ச்சிகளைக் குறித்தும் நாம் அதிசயிக்க வேண்டிய அவசியமுமில்லை. தேவனுடைய பிரமாணத்தை தங்களது அசுத்தமான கால்களுக்குக் கீழாக மிதித்துக்கொண்டிருப்பவர்கள். இயேசுகிரிஸ்துவை அவமானப்படுத்திகாட்டிக்கொடுத்த மனிதர்கள் பெற்றிருந்த அதே ஆவியையே பெற்றிருக்கின்றனர். தாங்கள் இப்படிச் செயகின்றோமே என்று எந்த ஒரு மனச்சாட்சியின் உறுத்துலும் இல்லாமல், தங்களது பிதாவாகிய பிசாசின் கிரியைகளையே அவர்கள் செய்வார்கள். — 3SM 416 (1897). கச 108.3

தங்கள் மனம் புதுப்பிக்கப்படவும் சத்தியத்திலே ஆலோசனை பெற்றுக்கொள்ளவும் விரும்புகிறவர்கள், பெந்தேகொஸ்தே நாளிலும் உடனடியாக அதற்கு பின்பாகவும் நிகழ்ந்த ஆதிகாலத் திருச்சபை சரித்திரத்தைப் படித்துப்பாருங்கள், பவுலின் அனுபவங்களையும், மற்ற அப்போஸ்தலரின் அனுபவங்களையும் அப்போஸ்தலருடைய புஸ்தகத்தில் கவனமாகப் படியுங்கள். ஏனெனில், நமது நாட்களில் உள்ள தேவனுடைய மக்களும் அதேபோன்ற அனுபவங்களுக்குள்ளாகக் கடந்து செல்லவேண்டும். — PC 118 (1907). கச 108.4