Go to full page →

இசை ஒரு கண்ணியாக ஆக்கப்படும் கச 115

இந்தியாவில் 1இந்தக் குறிப்புகள் 1890-ம் ஆண்டு, இந்தியானா முகாம் கூட்டத்தில் பரிசுத்த மாமிசம் என்ற இயக்கத்துடன் தொடர்புபடுத்திக் கொடுக்கப்பட்டன. மேலும் விவரங்களுக்கு பார்க்கவும்: 2SM 31-39. நட்ப்பதாக நீங்கள் விவரித்த காரியங்களெல்லாம் தவணையின் காலம் முடிவதற்கு சற்று முன்னதாக நடந்தேறும் என்று கர்த்தர் எனக்குக் காண்பித்திருக்கின்றார். ஒவ்வொரு அருவருப்பான காரியமும், செயல்முறையில் தெளிவாக எடுத்துக்காட்டப்படும். நடனம், இசை, மத்தளங்களுடனான உரத்த கூச்சலிடுதல் அங்கு இருக்கும். சரியான தீர்மானங்களை எடுப்பதற்கு, அவர்கள் நம்பத்தகுந்தவர்களாய் இருக்க முடியாது என்ற விதத்தில், பகுத்தறிவுள்ள மனிதர்களின் புலன்கள் மிகவும் குழம்பினதாய் மாறிவிடும்... கச 115.5

ஒரு பைத்தியக்கார விடுதியின் கூச்சலைப்போன்ற இசை, புலன்களை அதிர்ச்சியடையச் செய்கிறது. நல்ல முறையில் நடத்தப் பட்டால் ஒரு ஆசீர்வாதமாக அமையவேண்டியதைத் தாறுமாறாக்கிப் போடுகின்றது. இத்தகைய சத்தத்தோடும் கூச்சலோடும் சாத்தானிய கூட்டங்களின் வல்லமைகள் ஒரு கொண்டாட்டத்தை உண்டாக்கிச் சேர்ந்துகொள்ளுகின்றன. இது பரிசுத்த ஆவியானவரின் கிரியை என்ற பெயரால் அழைக்கப்படுகின்றது... கடந்த காலத்தில் எவையெல்லாம் இருந்ததோ, அவையெல்லாம் எதிர்காலத்திலும் இருக்கும். இசை, நடத்தப்படுகின்ற விதத்தின்மூலமாக சாத்தான் அதை ஒரு கண்ணியாக உருவாக்குவான். — 2 SM 36, 38 (1900). கச 116.1

பரிசுத்த ஆவியானவரின் ஆழமான அசைவுகளிலிருந்து, உண்மையாகவே நம் மனதை விலக்கக்கூடிய விநோதமான பயிற்சிகளுக்கு நாம் இடங்கொடாதிருப்போமாக. தேவனுடைய கிரியை எப்பொழுதும் அமைதலும் கனத்துக்குரியதுமான முறையில் நிறைவேறுவது குறிப்பிடத்தக்கது. 2SM 42 (1908). கச 116.2