Go to full page →

54 - பணப்பறிப்புக்கு எதிரான கண்டிப்பு தீஇவ 646

எருசலேமின் மதில் இன்னமும் முழுமையாகக் கட்டிமுடிக்கப் படாமலிருந்தது. அப்போது, ஜனங்களில் மிகவும் ஏழையாயிருந்த வர்களின் வருத்தகரமான நிலைகுறித்து நெகேமியாவிற்குத் தெரிய வந்தது. தேசம் இன்னமும் நிலைபடாத நிலையில், விவசாயப் பணி முழு அளவில் நடைபெறாமல் இருந்தது. மேலும், யூதேயாவிற்குத் திரும்பிவந்த சிலரின் சுயநலப்போக்கின் நிமித்தம், தேவனுடைய ஆசீர்வாதம் அவர்களுடைய நிலத்தின்மேல் தங்கவில்லை; அங்கு தானிய தட்டுப்பாடு நிலவியது. தீஇவ 646.1

ஏழை மக்கள் தங்கள் குடும்பத்தினரைப் போஷிக்கும் படி கடன் வாங்கவும் அநியாய விலை கொடுக்கவும் ஆளானார்கள். பெர்சிய மன்னர்களால் அவர்கள்மேல் சுமத்தப்பட்டிருந்த அதிக வரியைச் செலுத்த, வட்டிக்குப் பணம் வாங்கும் நிர்ப்பந்தத்திற்கும் ஆளானார்கள். ஏழையரின் வேதனையை அதிகரிக்கும் வகை யில், யூதர்களின் மிகவும் செழிப்போடு இருந்தவர்கள், ஏழை மக்க ளின் தேவைகளைச் சாதமாக்கித் தங்களைப் பெருக்கினார்கள். தீஇவ 646.2

ஏழைகளின் நலனை முன்னிட்டு மூன்று வருடங்களுக்கு ஒரு முறை ஒரு தசமபாகம் சேகரிக்கப்படவேண்டுமென்று மோசேயின் மூலமாக இஸ்ரவேலுக்குத் தேவன் கட்டளையிட்டிருந்தார். மேலும், ஏழாம் வருஷத்தில் விதைப்புப்பணி செய்யாமல், வயல்களில் தானாக விளைந்ததை ஏழை எளியோருக்கு விட்டுவிட வேண்டும் மென்று இன்னொரு ஏற்பாடும் செய்யப்பட்டிருந்தது. ஏழைகளின் நலனுக்காகவும் பிற தரும காரியங்களுக்குப் பயன்படவும் இந்தக் காணிக்கைகளை உண்மையோடு ஏறெடுப்பதால், ‘சகலத்திற்கும் சொந்தக்காரர் தேவன்’ எனும் உண்மை எப்போதும் மக்கள் முன் பசுமையாக விளங்க அது ஏதுவாக இருந்தது. இஸ்ரவேலின் சுய நலம் அழிக்கப்பட்டு, அவர்கள் மேன்மையும் விஸ்தாரமுமான ஒரு குணலட்சணத்தைப் பெற்றுக்கொள்ள அவர்களைப் பயிற்றுவிக்க வேண்டியது தேவனுடைய நோக்கமாயிருந்தது. தீஇவ 646.3

’உங்களுக்குள் சிறுமைப்பட்டிருக்கிற என்ஜனங்களில் ஒருவ னுக்கு நீங்கள் பணம் கடனாகக் கொடுத்திருந்தால் வட்டி வாங்குகிற வர்கள்போல அவனிடத்தில் வட்டி வாங்கவேண்டாம்.’‘ ‘’கடனாகக் கொடுக்கிற பணத்துக்கும் ஆகாரத்துக்கும், கொடுக்கிற வேறே எந்தப் பொருளுக்கும், உன் சகோதரன் கையில் வட்டி வாங்கா யாக’ என்றும் மோசேயின் மூலமாக தேவன் அறிவுறுத்தியிருந்தார். யாத் 22:25; உபா 23:19. மேலும் அவர், ‘’உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுக்கும் தேசத்தின் எந்தவாசலிலும் உன் சகோதரரில் எளியவனான ஒருவன் இருந்தால், எளியவனாகிய உன் சகோதர னுக்கு உன் இருதயத்தை நீ கடினமாக்காமலும், உன் கையை மூடா மலும், அவனுக்கு உன் கையைத் தாராளமாய்த் திறந்து, அவனு டைய அவசரத்தினிமித்தம் அவனுக்குத் தேவையானதைக் கடன் கொடுப்பாயாக’‘ ‘தேசத்திலே எளியவர்கள் இல்லாதிருப்பதில்லை; ஆகையால் உன் தேசத்திலே சிறுமைப்பட்டவனும் எளியவனுமாகிய உன் சகோதரனுக்கு உன் கையைத் தாராயமாய்த் திறக்கவேண்டும் என்று நான் உனக்குக் கட்டளை யிடுகிறேன்” என்று சொன்னார். உபா 15:7, 8, 1. தீஇவ 647.1

சிறைப்பட்டுப் போனவர்கள் பாபிலோனிலிருந்து திரும்பிவந்த பிறகு, யூதரில் செல்வந்தவராய் இருந்தவர்கள் அவ்வப்போது இந்தக் கட்டளைகளுக்கு முற்றிலும் மாறாக நடந்துகொண்டார்கள். இராஜாவுக்கு வரி செலுத்த மக்கள் கடன் வாங்க வேண்டிய நிலைக் குள்ளானபோது, அந்தச் செல்வந்தர்கள் பணம் கடன் கொடுத்தார் கள்; ஆனால் அநியாய வட்டி வாங்கினார்கள். ஏழையரின் நிலங் களை அடமானமாக எடுத்துக்கொண்டு, அந்தத் துர்ப்பாக்கியசாலி களைக் கொஞ்சம் கொஞ்சமாக வறுமைக்குள் ஆழ்த்தினார்கள். அநே கர் தங்கள் குமாரரையும் குமாரத்திகளையும் அடிமைகளாக விற்க வேண்டிய நிலைக்குள்ளானார்கள். தங்களுடைய நிலை முன்னேறு வதற்கான எந்த நம்பிக்கையும், தங்களுடைய பிள்ளைகளையோ நிலங்களையோ மீட்பதற்கான எந்த வழியும் அவர்களுக்குத் தெரி யாதிருந்தது. அதாவது, ஓயாத தேவையாலும் அடிமைத்தனத்தாலும், அவர்களுக்கு வெற்றி வாய்ப்பு எதுவுமே கண்ணில்படவில்லை; எப் போதும் வேதனையே மிஞ்சியது. ஆனாலும், தங்கள் செல்வந்த சகோதரரைப்போல, அதே தேசத்தைச் சேர்ந்தவர்களாகவும் அதே உடன்படிக்கையின் புத்திரராகவுமே இவர்கள் இருந்தனர். தீஇவ 647.2

மக்கள் தங்களின் நிலை குறித்து வெகுநாட்களாக நெகேமியா விடம் சொல்லிவந்தார்கள். ‘’இதோ, நாங்கள் எங்கள் குமாரரை யும் எங்கள் குமாரத்திகளையும் அடிமைத்தனத்திற்கு உட்படுத்த வேண்டியதாயிருக்கிறது; அப்படியே எங்கள் குமாரத்திகளில் சிலர் அடிமைப்பட்டுமிருக்கிறார்கள்; அவர்களை மீட்க எங்களுக்கு நிர் வாகமில்லை; எங்கள் நிலங்களும் எங்கள் திராட்சத்தோட்டங்களும் வேறே மனிதர் கைவசமாயிற்று” என்று அவர்கள் சொன்னார்கள். தீஇவ 648.1

இந்தக் கொடிய அநீதி குறித்து நெகேமியா கேட்டபோது, அவ னுடைய உள்ளம் கோபத்தால் நிறைந்தது. அவர்கள் கூக்குரலை யும், இந்த வார்த்தைகளையும் நான் கேட்டபோது, மிகவும் கோபங் கொண்டேன்’‘ என்கிறான் அவன். அநியாயமாகப் பறிக்கும் அந்தப் பழக்கத்தை ஒழிக்க வேண்டுமானால், தான் நீதிக்காக உறுதியாக நிற்கவேண்டியதை அவன் கண்டான். அவனுக்கே உரிய வேகத் தோடும், உறுதியோடும், தன் சகோதரருக்கு விடுதலையைக் கொண்டு வரும் வேலையில் இறங்கினான். தீஇவ 648.2

உண்மை என்னவென்றால், அப்படிக் கொடுமைப்படுத்தினவர் கள் செல்வந்தர்கள்; நகரத்தை மீண்டும் கட்டும் பணியில் அவர் களின் உதவி பெரிதும் தேவையாயிருந்தது. ஆனால் அதற்கெல் லாம் நெகேமியா சிறிதேனும் அசரவில்லை . பிரபுக்களையும் அதி காரிகளையும் அவன் கடுமையாகக் கடிந்துகொண்டான். அவன் திரளான ஜனங்களை ஒன்று கூடி வரச் செய்து, அந்த வழக்கில் சம் பந்தப்பட்ட தேவநிபந்தனைகளை அவர்கள் முன் எடுத்துரைத்தான். தீஇவ 648.3

ஆகாஸ் ராஜாவின் காலத்தில் நிகழ்ந்த நிகழ்ச்சிகளை அவர் களின் கவனத்திற்குக் கொண்டுவந்தான். இஸ்ரவேலின் கொடுமை யையும் அநீதியையும் கண்டிக்கும்படி அச்சமயத்தில் தேவன் அனுப் பின் செய்தியை அவர்களுக்குத் திரும்பவும் சொன்னான். அதா வது, யூதாவின் புத்திரர் தங்கள் சிலைவழிபாட்டின் நிமித்தம், தங் களைவிட அதிக சிலைவழிபாட்டிலிருந்த தங்கள் சகோதரராகிய இஸ்ரவேல் புத்திரரின் கரங்களில் ஒப்புக்கொடுக்கப்பட்டனர். இவர் கள் அவர்களை அடிமைகளாக்கவும் அல்லது யூதரல்லாதோரிடம் அவர்களை அடிமைகளாக விற்கவும் நோக்கங்கெண்டு அநேகமா யிரம் ஆயிரம் யூதா மனுஷரை யுத்தத்தில் வெட்டிப்போட்டு, தங் கள் பகையைக் காட்டினார்கள். தீஇவ 648.4

யூதாவின் பாவங்களின் நிமித்தம், அந்த யுத்தத்தைத் தடுக்க தேவன் தலையிடவில்லை; அந்த வெற்றி வீரர்களின் கொடிய திட் டத்தைத் தீர்க்கதரிசியாகிய ஓதேதின் மூலம் அவர் கண்டித்தார். ‘இப்போதும் யூதாவின் புத்திரரையும் எருசலேமியரையும் நீங்கள் உங்களுக்கு வேலைக்காரராகவும் வேலைக்காரிகளாகவும் கீழ்ப் படுத்தவேண்டும் என்று நினைக்கிறீர்கள்; ஆனாலும் உங்கள் தேவ னாகிய கர்த்தருக்கு விரோதமான குற்றங்கள் உங்களிடத்திலும் இல்லையோ?’2நாளா 28:10. அவர்களுக்கு எதிராக தேவகோபம் மூண்டிருந்ததாகவும், அவர்களின் அநீதியும் கொடுமையுமான போக்கு, அவருடைய நியாயத்தீர்ப்புகளை அவர்கள் மேல் கொண்டு வருமென்றும் இஸ்ரவேல் மக்களை எச்சரித்தான் ஓதேது. இந்த வார்த்தைகளைக் கேட்டதும், படைவீரர்கள் தங்கள் சிறைக்கைதி களையும் கொள்ளைப் பொருட்களையும் பிரபுக்கள் மற்றும் சகல சபை யின் முன்னிலையில் விட்டுவிட்டார்கள். பிறகு, எப்பிராயீம் கோத்திரத் தலைவர்கள் சிலர், ‘சிறைப்பிடிக்கப்பட்டவர்களைச் சேர்த்துக்கொண்டு, அவர்களில் வஸ்திரமில்லாத சகலருக்கும் கொள்ளையில் எடுக்கப் பட்ட வஸ்திரங்களைக் கொடுத்து, உடுப்பையும் பாதரட்சைகளை யும் போடுவித்து, அவர்களுக்குச் சாப்பிடவும் குடிக்கவும் கொடுத்து, அவர்களுக்கு எண்ணெய் வார்த்து, அவர்களில் பலட்சயமானவர் களையெல்லாம் கழுதைகள்மேல் ஏற்றி, பேரீச்சை மரங்களின் பட் டணமாகிய எரிகோவிலே அவர்கள் சகோதரரிடத்துக்குக் கொண்டு வந்துவிட்டார்கள்’. 2 நாளா 28:15. தீஇவ 649.1

அவ்வாறு யூதரல்லாதோரிடம் விற்கப்பட்ட யூதர்கள் சிலரை நெகேமியாவும் மற்றும் வேறு சிலரும் பணயம் கொடுத்து மீட்டனர். இப்பொழுது இந்த நடவடிக்கையை, உலக ஆதாயத்திற்காக தங்கள் சகோதரரை அடிமைப்படுத்தினோரின் நடத்தையோடு ஒப்பிட்டு காண்பித்தான். ‘’நீங்கள் செய்கிற காரியம் நல்லதல்ல; நம்முடைய பகைஞராகிய புறஜாதியார் நிந்திக்கிறதினிமித்தம் நீங்கள் நம்மு டைய தேவனுக்குப் பயந்து நடக்கவேண்டாமோ?’‘ என்றான். தீஇவ 649.2

பெர்சியாராஜாவால் தனக்கு அதிகாரம் அளிக்கப்பட்டிருந்த தால், தன்னுடைய தனிப்பட்ட நலனுக்காக தான் அதிகளவில் மக்க ளிடமிருந்து படி வாங்கியிருக்கமுடியும் என்று அவர்களுக்கு எடுத்து ரைத்தான். ஆனால் நியாயப்படி தனக்குச் சேரவேண்டியதைக்கூட அவன் எடுத்துக்கொள்ளாமல், தேவையோடிருந்த ஏழைகளுக்கு உதவும்படி தாராளமாக அவர்களுக்குக் கொடுத்தான். அநியாய மாகப் பறிப்பதாகக் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த பிரபுக்களிடம், அந்த அக்கிரம் வேலையை விட்டுவிடுமாறும், ஏழைகளின் நிலங்களை மீண்டும் கொடுத்துவிடுமாறும், பணயப்பொருளோ, வட்டியோ கேளாமல் அவர்களுக்கு உதவுமாறும் அவன் வலியுறுத்தினான். தீஇவ 650.1

மொத்த சபைக்கு முன்பாக அவன் இவற்றைச் சொன்னான். அந்தப் பிரபுக்கள் தங்களை நியாயப்படுத்த விரும்பியிருந்தால் அதற்கும் வாய்ப்பிருந்தது. ஆனால் அவர்கள் சாக்குப்போக்கு எது வும் சொல்லவில்லை. அவர்கள், ‘’நாங்கள் அதைத் திரும்பக் கொடுத்து விட்டு, இனி அப்படி அவர்களிடத்தில் கேட்கமாட்டோம்’‘ என் றார்கள். அதன்படி, ஆசாரியர்களின் முன்னிலையில், ‘அவர்கள் இந்த வார்த்தையின் படி செய்ய அவர்களை ஆணையிடுவித்துக் கொண்டான். அதற்குச் சபையார் எல்லாரும் ஆமென் என்று சொல்லி. கர்த்தரைத் துதித்தார்கள்; பின்பு ஜனங்கள் இந்த வார்த்தையின்படியே செய்தார்கள்’. தீஇவ 650.2

இந்தச் சம்பவம் ஒரு முக்கியப் பாடத்தைப் போதிக்கிறது. ‘பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது’. 1தீமோ 6:10. இன் றைய தலைமுறையினர் ஆதாயத்தை நாடுவதில் தான் மூழ்கியுள் ளனர். ஏமாற்றியே பெரும்பாலும் பணம் சம்பாதிக்கிறார்கள். வறு மையில் போராடுவோரும், சிறிது கூலிக்காக அதிகம் உழைக்க வேண்டியோரும், வாழ்வின் சிறு தேவைகளைக்கூட பெற்றுக் கொள்ள முடியாதோரும் ஏராளமானோர் உண்டு. விடிவு காலத்திற் கான நம்பிக்கையே இல்லாமல், கடுமையாக உழைக்கவேண்டிய தும் வறுமையும் அவர்களுடைய வலுவைமேலும் பாரமாக்குகிறது. கொடுமைக்கும் வறுமைக்கும் மத்தியில் இவற்றிலிருந்து மீள விடை தெரியாமல் இருக்கின்றனர். செல்வந்தர்கள் தங்கள் ஆடம் பரத்தில் திளைக்கவும், மேலும் மேலும் பொருள் ஈட்டவும் நாடு வதே இதற்கெல்லாம் காரணமாயிருக்கிறது. தீஇவ 650.3

பண ஆசையும் ஆடம்பர நாட்டமும் இவ்வுலகத்தைக் கள்ளர் கள் மற்றும் கொள்ளையர்களின் குகையாக்கி உள்ளது. கிறிஸ்துவின் இரண்டாம் வருகைக்குச் சற்று முன்பு நிலவப்போகும் கொடுமை மற்றும் பேராசை குறித்து வேதாகமம் தெளிவாகச் சித்தரிக்கிறது. ‘ஐசுவரியவான்களே, கேளுங்கள், கடைசிநாளிலே பொக்கிஷத் தைச் சேர்த்தீர்கள். இதோ, உங்கள் வயல்களை அறுத்த வேலைக் காரருடைய கூலி உங்களால் அநியாயமாய்ப் பிடிக்கப்பட்டுக் கூக் குரலிடுகிறது; அறுத்தவர்களுடைய கூக்குரல் சேனைகளுடைய கர்த்தரின் செவிகளில் பட்டது. பூமியிலே நீங்கள் சம்பிரமமாய் வாழ்ந்து, சுகபோகத்தில் உழன்றீர்கள்; கொழுத்தவைகளை அடிக் கும் நாளில் நடக்கிறது போல உங்கள் இருதயங்களைப் போஷித்தீர் கள். நீதிமானை நீங்கள் ஆக்கினைக்குள்ளாகத் தீர்த்துக் கொலை செய்தீர்கள்; அவர் உங்களோடே எதிர்த்து நிற்கவில்லை என்கிறான் யாக்கோபு . யாக்கோபு 5:1, 3-6. தீஇவ 651.1

தேவ பயத்தோடு நடப்பதாகச் சொல்லிக்கொள்பவர்களில் சிலர் இஸ்ரவேலின் பிரபுக்கள் கடைப்பிடித்த போக்கையே இப்போ தும் கடைப்பிடித்து வருகின்றனர். அவ்வாறு செய்ய தாங்கள் திராணி யுள்ளவர்களாக இருப்பதால், நியாயமானதற்கும் அதிகமாகக் கோரு கிறார்கள்; கொடுமைக்காரர்களாக மாறுகிறார்கள். கிறிஸ்துவின் பெயரால் கிறிஸ்தவர்கள் என்று அழைக்கப்படுகிறவர்களின் பேராசை மற்றும் நயவஞ்சகத்தின் நிமித்தமும், அநியாயமாகப் பொருள் சேர்ப்போரின் பெயர்கள் சபை அங்கத்தினர்களின் பட்டி யலில் இடம்பெற்றிருப்பதின் நிமித்தமும் கிறிஸ்தவ மதம் வெறுப் புணர்வோடு நோக்கப்படுகிறது. ஊதாரித்தனம், வஞ்சகத்தால் ஏமாற்றுதல், அநியாயமாகப் பறித்தல் போன்றவை அநேகரின் விசுவாசத்தைக் கெடுத்து, அவர்களின் ஆவிக்குரிய நிலையைச் சீர்குலைக்கிறது. தன் அங்கத்தினர்களின் பாவங்களில் சபை பெரி தும் பொறுப்பு வகிக்கிறது. அதற்கு எதிராகக் குரலெழுப்பசபைதவறு மானால், அது தீமைக்கு ஆதரவளிப்பதாக இருக்கும். தீஇவ 651.2

இவ்வுலகின் பழக்கவழக்கங்கள் ஒரு கிறிஸ்தவனுக்கான அளவு கோல் அல்ல. அதன் கூரிய முறைகளையும் தந்திரப் போக் கையும் பலவந்தப்போக்கையும் அவன் முன்மாதிரியாகக் கொள் ளக்கூடாது. சகமனிதனுக்கு எதிரான ஒவ்வொரு அநியாயச் செய் லும் பொற்சட்டத்தை மீறுவதாயிருக்கிறது. தேவ பிள்ளைகளுக்கு இழைக்கப்படும் ஒவ்வொரு தீச்செயலும், கிறிஸ்துவின் பரிசுத்த வான்களுக்கு இழைக்கப்படுவதாயிருப்பதால், அது அவருக்கே இழைக்கப்படுவதாகும். பிறரின் அறியாமை, பெலவீனம் அல்லது கஷ்ட நிலையைச் சாதகமாக்க எடுக்கப்படும் ஒவ்வொரு முயற்சியும் வஞ்சகச் செயலாக பரலோகப் பதிவேட்டில் பதிவுசெய்யப்படுகிறது. தேவனுக்கு மெய்யாகவே பயப்படுகிறவன், திக்கற்றோரையும் விதவைகளையும் ஒடுக்கி, அல்லது அந்நியனை அவன் உரிமைக்கு விலக்கி, தங்கள் ஆதாய் நாட்டத்தில் ஈடுபடுவதைவிட, இரவும் பகலும் கடுமையாக உழைத்து, வறுமையின் அப்பத்தைப் புசிக்க லாம். தீஇவ 651.3

நன்னடத்தையிலிருந்து சிறிதளவு விலகுவது, கட்டுப்பாடு களை மீறி, பெரும் அநீதிசெய்ய இருதயத்தை ஆயத்தப் படுத்து கிறது. பிறருக்குப் பாதகத்தை உண்டு பண்ணி, தனக்கு ஆதாயம் தேடும் அளவிற்கு, அவனுடைய ஆத்துமா பரிசுத்த ஆவியானவரின் செல்வாக்கிற்கு உணர்வற்று போகிறது. அத்தகைய கிரயத்தால் கிடைக்கும் ஆதாயம், மிக மோசமான இழப்பாகவே இருக்கும். தீஇவ 652.1

நாம் அனைவருமே தேவ நீதிக்கு கடனாளிகளாயிருந்தோம். ஆனால் அந்தக் கடனைச் செலுத்த நம்மிடம் எதுவுமில்லை . பிறகு, நம்மேல் பரிவு கொண்ட தேவகுமாரன்தாமே நம் மீட்பிற்கான விலை யைச் செலுத்தினார். அவருடைய தரித்திரத்தால் நாம் ஐசுவாரிய வான்களாகும்படி, அவர் தரித்திரரானார். நமக்கு அருளப்பட்ட இரக்கத்திற்காக நாம் மெய் நன்றியோடு இருப்பதை, அவருடைய ஏழை மக்கள் மேல் நாம் தாராள குணத்துடன் நடந்துகொள்வதன் மூலம், விளங்கப்பண்ணலாம். ‘’ஆகையால் நமக்குக் கிடைக்கும் சமயத்திற்குத் தக்கதாக, யாவருக்கும், விஷேமாக விசுவாசக் குடும்பத் தார்களுக்கும், நன்மை செய்யக்கடவோம்” என்கிறான் பவுல். கலா 6:10. ‘தரித்திரர் எப்போதும் உங்களிடத்தில் இருக்கிறார்கள், உங்க ளுக்கு மனதுண்டாகும் போதெல்லாம் நீங்கள் அவர்களுக்கு நன்மை செய்யலாம்’ ஆதலால், மனுஷர் உங்களுக்கு எவைகளைச் செய்ய விரும்புகிறீர்களோ, அவைகளை நீங்களும் அவர்களுக்குச் செய் யுங்கள்; இதுவே நியாயப்பிரமாணமும் தீர்க்கதரிசனங்களுமாம்’ எனும் இரட்சகரின் வார்த்தைகளோடு அவை ஒத்துப்போகின்றன. மாற்கு 14:7; மத்தேயு 7:12. தீஇவ 652.2