ஆகாபின் நாட்களில் யோர்தானுக்குக் கிழக்கே கீலேயாத்தின் மலைகளில் விசுவாசமும் ஜெபமும் நிறைந்த மனிதன் ஒருவன் வாழ்ந்தான். துணிவுமிக்க அவனுடைய ஊழியம் இஸ்ரவேலில் வேகமாகப் பரவிவந்த வழிவிலகலைத் தடுத்து நிறுத்த இருந்தது. திஸ்பியனாகிய எலியா புகழ்மிக்க ஒரு நகரத்தைச் சேர்ந்தவனோ, வாழ்வில் உயர்ந்த அந்தஸ்தைப் பெற்றவனோ கிடையாது. இருந்தாலும், தேவநோக்கத்தில் நம்பிக்கைவைத்து, அவனுக்கு வழியை ஆயத்தப்படுத்தவும், பரிபூரண வெற்றியைப் பெற்றுத் தரவும் தன் ஊழியத்தைத் தொடங்கினான். அவனுடைய உதடு கள் விசுவாசமும் வல்லமையுமான வார்த்தைகளைப் பேசின. தன் வாழ்க்கையைச் சீர்திருத்தப் பணிக்கே முழுவதும் அர்ப்பணித் திருந்தான். பாவத்தைக் கண்டித்து, தீமையின் போக்கைத் தடுத்து நிறுத்த வனாந்தரத்தில் கூப்பிடும் சத்தமாக இருந்தான். பாவத்தால் வியாதிப்பட்ட தங்கள் ஆத்துமா குணப்படுவதையாரெல்லாம் விரும் பினார்களோ, அவர்களுக்கு அவன் செய்தி கீலேயாத்தின் பிசின் தைலமாக இருந்தது. தீஇவ 119.1
சிலைவழிபாட்டில் இஸ்ரவேல் வெகுவாக மூழ்கிக்கொண் டிருந்ததை எலியா கண்டபோது அவனுடைய ஆத்துமா துக்கித்தது; அவனுக்குக் கோபம் எழுந்தது. தேவன் தம்முடைய மக்களுக்கு மகத்தான காரியங்களைச் செய்திருந்தார். அவன் அவர்களை அடிமைத்தனத்திலிருந்து விடுவித்து, தமது கட்டளைகளைக் காத்து நடக்கும்படிக்கும், தமது நியாயப்பிரமாணங்களைக் கைக்கொள் ளும் படிக்கும், அவர்களுக்குப் புறஜாதிகளுடைய தேசங்களைக் கொடுத்தார். சங் 105:44, 45. ஆனால், யேகோவாவின் நலமான திட்டங்களைக் கிட்டத்தட்ட மறந்துவிட்டார்கள். தெரிந்துகொள்ளப் பட்ட தேசத்தை அவர்களுடைய பெலனின் ஆதாரமானவரிட மிருந்து அவநம்பிக்கை வேகமாகப் பிரித்தது. மலையிலிருந்த தன் வீட்டிலிருந்து இந்த வழிவிலகலைக் கண்ட எலியா துக்கத்தால் நிறைந்தான். முன்னர் தேவ தயவுக்குப் பாத்திரமாயிருந்த ஜனங் களின் தீய வழியைத் தடுத்து நிறுத்துமாறும், தேவைப்பட்டால் அவர்களை நியாயம் விசாரிக்குமாறும், பரலோகத்திலிருந்து தாங் கள் விலகியுள்ளதை அதன் மெய் வெளிச்சத்தில் கண்டுகொள்ள அவர்களை வழிநடத்துமாறும் ஆத்மவியாகுலத்தோடு தேவனிடம் மன்றாடினான். அவர்கள் தொடர்ந்து பாவம் செய்வதால், கர்த் தருடைய கோபம் தூண்டப்பட்டு, அவர்கள் முற்றிலும் அழிக்கப் படுவதற்கு முன்னரே அவர்கள் மனந்திரும்புதலுக்குள்ளாக வழி நடத்தப்படுவதைக் காண அவன் ஏங்கினான். தீஇவ 119.2
எலியாவின் ஜெபத்திற்குப் பதில் கிடைத்தது. இஸ்ரவேல் மனந்திரும்புவதற்காக திரும்பத்திரும்பக் கொடுக்கப் பட்ட வேண்டுகோள்களும் கண்டனங்களும் எச்சரிப்புகளும் பயனற்றுப் போயின. நியாயத் தீர்ப்புகளின் மூலமாக தேவன் அவர்களோடு பேசவேண்டிய நேரம் வந்தது. ‘பனித்துளி, மழை போன்ற பர லோகப் பொக்கிஷங்கள் யேகோவாவிடமிருந்து வரவில்லை என் றும், இயற்கையை ஆளும் சக்திகளாலும் சூரியனின் உற்பத்தித் திற னாலுமே பூமிவளமடைந்து பரிபூரண விளைச்சலைத் தருகிறது’ என் றும் பாகாலைத் தொழுதவர்கள் கூறினார்கள். ஆனபடியால், தீட்டுக் குள்ளான அத்தேசத்தின் மேல் தேவ சாபம் வெகுவாகத் தங்க இருந் தது. பாகாலின் வல்லமையால் இம்மைக்குரிய நன்மைகள் கிடைப் பதாக நினைத்த மூடத்தனத்தை இஸ்ரவேலின் கோத்திரத்தாருக்கு வெளிப்படுத்த வேண்டியிருந்தது. தேவனை மறந்த அவர்கள் மனம்மாறி, தேவனிடம் திரும்பி, சகல ஆசீர்வாதங்களுக்கும் கார ணராக அவரை ஏற்றுக்கொள்ளும்வரை தேசத்திலே மழையோ பனியோ பெய்யாத சூழ்நிலை ஏற்பட இருந்தது. தீஇவ 120.1
பரலோகத்தின் நியாயத்தீர்ப்புச் செய்தியை ஆகாபுக்குத் தெரி விக்கும் வேலையை எலியாவிடம் தேவன் ஒப்படைத்தார். கர்த்தருக் காகத் தூது போக அவன் தாமாக முயலவில்லை என்றாலும் கர்த்த ருடைய வார்த்தை அவனுக்கு உண்டாயிற்று. தேவகட்டளைக்குக் கீழ்ப்படிவது, துன்மார்க்க ராஜாவின் கரத்திலிருந்து உடனடி அழிவைத் தேடிக்கொள்வது போலத் தோன்றினபோதிலும், தேவனுக்கான நோக்கத்தில் அக்கறை கொண்டவனாய், தேவ கட்ட ளைக்குக் கீழ்ப்படிய அவன் தயங்கவில்லை. வைராக்கியத்தோடு உடனே புறப்பட்ட தீர்க்கதரிசி இரவும் பகலுமாக நடந்து சென்று, சமாரியாவை அடைந்தான். அரண்மனைக்குச் சென்றதும், உள்ளே செல்ல அனுமதி வேண்டவில்லை; தன் வருகை பற்றி அறிவிக்க அவர் காத்திருக்கவும் இல்லை . அக்காலத் தீர்க்கதரிசிகளைப் போல நளினமற்ற ஆடை உடுத்தியிருந்த அவன் யார் கண்ணிலும் படாமல் காவலர்களைத் தாண்டிச் சென்றான். திடீரென்று தனக்கு முன் வந்து நின்ற எலியாவைப் பார்த்து, ராஜா திகைத்துப்போனான். தீஇவ 121.1
எலியா திடுதிப்பென சென்றபோதிலும், அதற்காக வருத்தம் தெரிவிக்கவில்லை. இஸ்ரவேலின் மன்னனைவிட மேலான ஒருவர் அவனுக்குக் கட்டளை கொடுத்திருந்தார்; எனவே, அவன் பேசினான். பரலோகிற்கு நேராக தன் கையை உயர்த்தி, உன்ன தமானவரின் நியாயத்தீர்ப்புகள் இஸ்ரவேல் மேல் வர இருந்ததாக ஜீவனுள்ள தேவன்பேரில் உறுதிபடக் கூறினான். ‘’என் வாக்கின் படியே அன்றி இந்த வருஷங்களிலே பனியும் மழையும் பெய்யாதி ருக்கும் என்று இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு முன்பாக நிற்கிற நான் அவருடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன்’‘ என்றான். தீஇவ 121.2
தேவ வார்த்தையின் மாறாத வல்லமையின் மீதான விசுவாசத் தால் மாத்திரமே அச்செய்தியை எலியாவால் அறிவிக்க முடிந்தது. தான் யாரைச் சேவித்தானோ அவர்மீது அவன் பூரண விசுவாசம் வைத்திராவிடில், அவனால் ஆகாபிற்கு முன்பாகச் சென்றிருக் கவே முடியாது. வற்றாமல் ஓடிக்கொண்டிருக்கும் நதிகளையும் பசுமை நிறைந்த மலைகளையும் வறட்சியின் வாசமே அறியாத காடுகளையும் கடந்துதான் சமாரியாவுக்கு வந்தான் எலியா. அவன் கண்கள் கண்ட அனைத்தும் செழுமையாகத் தெரிந்தன. ‘இந்த மலைகளும் பள்ளத்தாக்குகளும் வறண்டு, வதங்கக்கூடுமோ?, ஓயாமல் ஓடிக்கொண்டிருக்கும் இந்நதிகள் வற்றக்கூடுமோ?’ என்று தீர்க்கதரிசி யோசித்திருக்கலாம். ஆனால், அவன் அவிசு வாசத்திற்கு இடமே தரவில்லை. தம்மை மறந்த இஸ்ரவேலை தேவன் தாழ்ச்சிப்படுத்துவார் என்றும் நியாயத்தீர்ப்புகள் மூலம் அவர்களை மனந்திரும்புதலுக்குள்ளாகக் கொண்டுவருவார் என்றும் அவன் முற்றிலும் நம்பினான். பரலோகக் கட்டளை அவ னுக்கு முன் சென்றது; அந்தத் தேவ வார்த்தை நிறைவேறியே ஆக வேண்டும். எனவே, தன் உயிரையும் பணயம் வைத்து, பயமின்றி , தன் பணியை நிறைவேற்றினான் எலியா. தெளிவான வானத்தில் ஏற்பட்ட இடிமுழக்கம்போல், உடனே சம்பவிக்கவிருந்த நியாயத் தீர்ப்பின் செய்தியானது துன்மார்க்கனான ராஜாவின் காதுகளில் ஒலித்தது. ஆனால், ஆகாப் தனது திகைப்பிலிருந்து மீளுவதற்கு முன்னரே, அதாவது, அதற்கு அவர் பதிலளிக்கும் முன்னரே எலியா அங்கிருந்து சென்றுவிட்டான். தன் செய்தியால் ஏற்படும் விளைவைக்காணக்காத்திராமல், வந்தது போலவே திடுதிப்பெனத் திரும்பியும் சென்றான். கர்த்தர் அவனுக்கு முன்பாகச் சென்று, வழி காட்டினார். ‘நீ இவ்விடத்தைவிட்டுக் கீழ்த்திசையை நோக்கிப் போய், யோர்தானுக்கு நேராயிருக்கிற கேரீத் ஆற்றண்டையில் ஒளித்துக் கொண்டிரு. அந்த ஆற்றின் தண்ணீரைக் குடிப்பாய்; அங்கே உன்னைப் போஷிக்க, காகங்களுக்குக் கட்டளையிடு வேன்’ என்று தீர்க்கதரிசியிடம் சொல்லப்பட்டது. தீஇவ 121.3
தீர்க்கதரிசி எங்கே இருக்கிறாரென்று ஆகாப் ராஜா தீவிரமாக விசாரித்தபோதிலும் அவனைக் கண்டுபிடிக்க ராஜாவால் முடிய வில்லை. வானத்தின் பொக்கிஷங்களை அடைத்துப்போட்ட அந்தச் செய்தியால் யேசபேல் ராணி கோபமடைந்தாள். உடன் டியாகப் பாகால் தீர்க்கதரிசிகளோடு யேசபேல் கலந்தாலோசித் தாள். பாகால் தீர்க்கதரிசிகளும் அவளோடு இணைந்து எலியா தீர்க்கதரிசியைச் சபித்தார்கள். தேவ கோபத்திற்குச் சவால் விட் டார்கள். பஞ்சம் வருமென்ற சாபத்தின் வார்த்தைகளை அறிவித்த வரைக் கண்டுபிடிக்க முயன்றபோதிலும், அதைச் செய்யமுடியாமல் ஏமாற்றமே அடைந்தனர். அங்கு நிலவிய வழிவிலகலின் நிமித்தம் சொல்லப்பட்ட நியாயத்தீர்ப்பைப் பிறர் அறியாதவாறு அவர்கள் ளால் மறைக்கவும் முடியவில்லை. இஸ்ரவேலின் பாவம் குறித்து எலியா கண்டித்தான். சீக்கிரத்தில் சம்பவிக்கவிருந்த நியாயத் தீர்ப்புகள் குறித்துத் தீர்க்கதரிசனம் உரைத்தான். அவனுடைய செய்தியின் வார்த்தைகள் தேசம் முழுவதும் வேகமாகப் பரவின. அந்த வார்த்தைகளைக் கேள்விப்பட்ட சிலருக்குப் பயம் ஏற் பட்டது. ஆனால், பெரும்பாலும் பரலோகத்தின் அந்தச் செய்தி யைப் பலர் பரியாசத்தோடும் ஏளனத்தோடுமே கவனித்தார்கள். தீஇவ 123.1
தீர்க்கதரிசியின் வார்த்தைகள் உடனடி விளைவை ஏற்படுத் தின. அந்த அழிவுகுறித்து முதலில் ஏளனமாக எண்ணினவர்கள் சீக்கிரத்திலேயே அதன் கடுமையைக் கண்டார்கள். ஏனெனில், மழையும் பனியும் பெய்யாததால் சில மாதங்களிலேயே பூமி வறண்டது; விவசாயம் பாழ்ப்பட்டது. நாட்கள் செல்லச் செல்ல, வறட்சி கண்டிரா நதிகளும் நீரோடைகளும் வற்றி, வறண்டு போக ஆரம்பித்தன. ஆனாலும், பாகாலின் வல்லமையில் நம்பிக்கை வைக்குமாறு மக்களிடம் தலைவர்கள் கேட்டுக்கொண்டனர். பாகா லின் வல்லமையால்தான் மழை பெய்யுமென இன்னமும் வற் புறுத்தி வந்தார்கள் அந்தப் பூசாரிகள். எலியாவின் தேவனுக்குப் பயப்படவோ அவர் வார்த்தையைக் கேட்டு நடுங்கவோ வேண்டாம்; ஏற்ற காலத்தில் அறுவடையைத் தந்து, மனிதனையும் மிருகத்தையும் போஷிப்பது பாகால்தான்” என்று அவர்கள் கூறி னார்கள். தீஇவ 123.2
பாகாலையும் அஸ்தரோத்தையும் தொழுது கொண்டவர்களும் யேசபேலும் அவளுடைய பூஜாசாரிகளும் தங்கள் தெய்வங்களின் வல்லமையைச் சோதிக்கவும், கூடுமானால் எலியாவின் வார்த்தை பொய்யென்று நிரூபிக்கவும் ஒரு தருணம் கிடைத்தது. ஆகாபிடம் தெரிவிக்கப்பட்ட தேவவார்த்தையே அந்தத் தருணத்தைத் தந்தது. பாகாலின் நூற்றுக்கணக்கான பூஜாசாரிகளின் வாக்குறுதிகளுக்கு எதிராக எலியாவின் தீர்க்கதரிசனம் தனித்து நின்றது. தீர்க்கதரிசியின் அறிவிப்புக்குப்பிறகும் பாகாலால் மழையும் பனியும் தந்து, ஆறு களில் தண்ணீர் ஓடச் செய்து, தாவரங்களைத் தழைக்க வைக்கக் கூடுமானால், பாகாலை இஸ்ரவேலின் ராஜா வணங்கலாம்; ஜனங் கள் அவனைக் கடவுளென்று சொல்லலாம். தீஇவ 124.1
ஜனங் களை ஏமாற்றுவதற்காக, பாகாலின் தீர்க்கதரிசிகள் தொடர்ந்து தங்கள் தெய்வங்களுக்குப் பலிசெலுத்தி, பூமியைக் குளிரச் செய்யுமாறு இரவும் பகலும் அவற்றை நோக்கிக் கூப்பிட் டார்கள். விலையுயர்ந்த பலிகளைச் செலுத்தி, தங்கள் தெய்வங் களின் கோபத்தைத் தணிக்க முயன்றனர் பூஜாசாரிகள். மேலான காரியங்களுக்குக் காட்டவேண்டிய ஆர்வத்தோடும் விடாமுயற்சி யோடும் அவர்கள் தங்கள் அஞ்ஞான தேவர்களின் பலிபீடங் களைச் சுற்றி நின்றுகொண்டு, மழைக்காக ஊக்கத்தோடு வேண்டி னார்கள். சபிக்கப்பட்ட அத்தேசத்தில் அவர்களுடைய கூக்குரல் களும் வேண்டுதல்களும் இரவுதோறும் எழுந்தவண்ணம் இருந் தன். ஆனால், பகலில் சூரியனின் சுட்டெரிக்கும் கதிர்களை மறைக் கும்படி வானத்தில் மேகமேதும் தோன்றவில்லை. வறண்டுபோன பூமியைக் குளிர்விக்க மழையோ பனியோ பெய்யவில்லை. பாகா லின் பூஜாசாரிகள் தங்களால் கூடிய அனைத்தையும் செய்தபோதி லும், யேகோவாவின் வார்த்தை மாறாமல் நின்றது. தீஇவ 124.2
ஒரு வருடம் கடந்தது; மழை பெய்யவில்லை . பூமியானது தீயால் கருகினதுபோலக் காணப்பட்டது. சூரியனின் சுட்டெரிக்கும் வெப்பத்தால் மிச்சமிருந்த பயிர்களும் கருகின. நதிகள் காய்ந்தன. ஆடு, மாடு முதலான மந்தைகள் கத்திக்கொண்டு தண்ணீரின்றி அங்குமிங்கும் அலைந்தன. ஒரு சமயத்தில் செழிப்பாயிருந்த வயல் வெளிகள் பாலைவன மணல் போல பாழாகிப்போய்க் கிடந்தன. விக்கிரகத் தோப்புகள் இலைகளற்றிருந்தன. காடுகளில் மரங்கள் இலைகளற்றுப்போய் நிழல் தர மறுத்தன. ஈரமற்ற காற்று மூச்சைத் திணறச் செய்தது. புழுதிநிறைந்த புயல்கள் கண்களைக் குருடாக்கி, மூச்சை நிறுத்தி விடுவது போல் வீசின. ஒரு சமயத்தில் செழிப்பாக விளங்கிய பட்டணங்களும் கிராமங்களும் அழுகையின் இடங் களாக மாறின. பசியும் தாகமும் அங்கு மனிதர்களிடமும் மிருகங் களிடமும் மரண பயத்தை ஏற்படுத்தின. பஞ்சத்தின் சகலவித கொடிய விளைவுகளும் தீவிரமாகிக் கொண்டிருந்தன. தீஇவ 124.3
தேவ வல்லமையின் இத்தகைய ஆதாரங்கள் மத்தியிலும், இஸ்ரவேல் மனந்திரும்பவில்லை; அவர்கள் அறிய வேண்டுமென தேவன் விரும்பிய பாடங்களை அவர்கள் அறியவும் இல்லை. ‘இயற்கையைச் சிருஷ்டித்தவர் அதன் விதிகளைக் கட்டுப் படுத்து கிறார்’ என்பதையும், அவைகளை ஆசீர்வாதத்தின் அல்லது அழி வின் கருவிகளாக அவரால் மாற்றமுடியும்’ என்பதையும் அவர் களால் கண்டுகொள்ள முடியவில்லை. தங்கள் பொய்த் தொழுகை யில் மதிமயங்கி, அகந்தை கொண்டிருந்ததால், தேவனின் மகத்துவ கரத்தின்கீழ் தங்களைத் தாழ்த்த விரும்பவில்லை. தங்களுக்கு வந்த வேதனைகளுக்கு வேறே காரணங்களைக் கற்பித்தார்கள். தீஇவ 125.1
’யேகோவாவின் நியாயத்தீர்ப்பினால்தான் பஞ்சம் உண்டா னது’ என்பதை முற்றிலும் உணரமறுத்தாள் யேசபேல். பரலோகத் தின் தேவனை எதிர்க்கும் தன் தீர்மானத்தில் அவள் உறுதியாக இருந்தாள். எனவே, அவளும் கொஞ்சங்குறைய இஸ்ரவேலர் அனைவரும் சேர்ந்து, தங்களுடைய எல்லாத் துன்பங்களுக்கும் காரணம் எலியாவே என்று குற்றஞ்சாட்டினார்கள். அவர்கள் தொழுகை முறைகளுக்கு எதிராக அவன் சாட்சி சொன்னான் அல்லவா? எனவே, அவனைத் தங்கள் வழியிலிருந்து விலக்கி னால் மாத்திரமே தங்கள் தேவர்களின் கோபத்தைத் தவிர்க்கமுடியும்’ என்றும், தங்கள் துன்பங்களுக்கு முடிவு உண்டாகும்’ என்றும் அவள் கூறினாள். தீஇவ 126.1
ராணியால் தூண்டப்பட்டு, தீர்க்கதரிசியின் மறைவிடத்தைத் தேடும் பணியைத் தீவிரப்படுத்தினான் ஆகாப். எலியாவின் மேல் வெறுப்பும் பயமும் கொண்டிருந்தாலும், அவனைத் தேடுவதற்காக, பக்கத்திலும் தொலைவிலுமாக சுற்றிலுமிருந்த தேசங்களுக்குத் தூதுவர்களை அனுப்பினான். தேடுதல் பணியில் தவறு நடக்கா திருக்க விரும்பினான். எனவே, தீர்க்கதரிசியின் இருப்பிடம் பற்றி தங்களுக்கு எதுவும் தெரியாதென அத்தேசங்களிடமும் ராஜ்யங் களிடமும் இருந்து உறுதிமொழி வேண்டினான். ஆனால், அவ்வாறு தேடியும் பயனில்லை. யாருடைய பாவங்களால் தேவனுடைய தண்டனைகள் தேசத்தின்மேல் வந்ததோ, அந்த அரசனின் குரோ தத்திலிருந்து தப்புவிக்கப்பட்டு, பாதுகாப்பாக இருந்தான் எலியா. தீஇவ 126.2
எலியாவுக்கு எதிரான தன் முயற்சிகளில் தோல்விகண்டதால், இஸ்ரவேலிலிருந்த யேகோவாவின் தீர்க்கதரிசிகள் அனைவரை யும் கொன்று, பழிவாங்கத் தீர்மானித்தாள் யேசபேல். ஒருவரை யும் உயிரோடு விடக்கூடாதென நினைத்தாள். வெறிகொண்ட வ ளாய் தேவ ஊழியர்கள் அநேகரைக் கொன்றாள். இருந்தாலும், அனைவரையும் அழிக்கமுடியவில்லை. ஆகாபின் அரமனை விசாரிப்புக்காரனாகிய ஒபதியா, தன் உயிரையும் பணயம் வைத்து, ‘நூறு தீர்க்கதரிசிகளைச் சேர்த்து, அவர்களைக் கெபிக்கு ஐம்பது ஐம்பது பேராக ஒளித்து வைத்து, அவர்களுக்கு அப்பமும் தண்ணீ ரும் கொடுத்து, அவர்களைப் பராமரித்து வந்தான். ‘1 இராஜா 18:4. தீஇவ 126.3
text missing. One line of this para.in pdf it is there on page 126 லும், மழைக்கான எவ்வித அறிகுறியும் வானத்தில் தென்பட வில்லை. பஞ்சத்தாலும் வறட்சியாலும் ஏற்பட்ட அழிவு ராஜ்யம் முழுவதிலும் தொடர்ந்தது. தாய் தகப்பன்மார் தங்கள் பிள்ளை களின் வேதனைகளைத் தணிக்கத் திறனற்றவர்களாய், அவர்கள் சாவதைக் காண வேண்டிய நிலை ஏற்பட்டது. ஆனாலும், தேவனை மறந்த இஸ்ரவேலர் அவருக்கு முன் தங்கள் இருதயங்களைத் தாழ்த்த மறுத்தனர்; யாருடைய வார்த்தையால் அந்தக் கொடிய நியாயத்தீர்ப்புகள் தேசத்தின்மேல் சம்பவித்ததோ, அவருக்கு எதி ராகத் தொடர்ந்து முறுமுறுத்தார்கள். தங்கள் வேதனையிலும் துன் பத்திலும் மனந்திரும்புதலுக்கான அழைப்பு இருந்ததையும், பாவ மன்னிப்பிற்கான பரலோக எல்லைக்கோட்டைத் தாண்டி அழிவுக் குள் செல்லாதபடி தங்களைப் பாதுகாக்க தேவ தலையீடு இருந்த தையும் பகுத்தறியக் கூடாதவர்களாக அவர்கள் காணப்பட்டார் கள். தீஇவ 127.1
பஞ்சத்தால் ஏற்பட்ட சகல பயங்கரங்களையும் விட இஸ்ர வேலர் தேவனைவிட்டு விலகிய பாவம்தான் மிகக் கொடியதாக இருந்தது. ஜனங்களை அவர்களுடைய வீணான நம்பிக்கை யிலி ருந்து விடுவிக்கவும், அவர்களுக்கு ஜீவன் உட்பட சகலத்தையும் கொடுத்தவருக்குத் தாங்கள் செய்யவேண்டிய கடமையை உணர்த் தவும் தேவன் முயன்றார். அவர்கள் இழந்த விசுவாசத்தை மீண் டும் பெறும்படி அவர்களுக்கு உதவ முயன்றார். அதனால் தான், அப்பெரும் உபத்திரவத்தை அவர்கள்மேல் கொண்டுவரவேண்டி யதாயிற்று. தீஇவ 127.2
’துன்மார்க்கன் சாகிறது எனக்கு எவ்வளவேனும் பிரியமோ? அவன் தன் வழிகளைவிட்டுத் திரும்பிப் பிழைப்பது அல்லவோ எனக்குப் பிரியம் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.’ ‘நீங்கள் துரோகம் பண்ணின உங்களுடைய எல்லாத் துரோகங் களையும் உங்கள் மேல் இராதபடிக்கு விலக்கி, உங்களுக்குப் புது இருதயத்தையும் புது ஆவியையும் உண்டுபண்ணிக்கொள்ளுங்கள்; இஸ்ரவேல் வம்சத்தாரே, நீங்கள் ஏன் சாகவேண்டும்? மனந்திரும் புங்கள், அப் பொழுது பிழைப்பீர்கள்; சாகிறவனுடைய சாவை நான் விரும்புகிறதில்லை என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லு கிறார்.’‘ இஸ்ரவேல் வம்சத்தாரே, உங்கள் பொல்லாத வழிகளை விட்டுத் திரும்புங்கள், நீங்கள் ஏன் சாகவேண்டும்.’ எசேக்கியேல் 18:23, 31, 32; 33:11. தீஇவ 127.3
இஸ்ரவேல் மீண்டும் தங்கள் மெய்ப்பற்றிற்குத் திரும்புமாறு தம் ஊழியக்காரரை அனுப்பி வேண்டுகோள் விடுத்தார் தேவன். அவர்கள் அந்த வேண்டுகோள்களுக்குச் செவிசாய்த்து, பாகாலிட மிருந்து ஜீவனுள்ள தேவனிடம் திரும்பியிருந்தால், அத்தகைய நியாயத்தீர்ப்பு எலியாமூலம் கொடுக்கப்பட்டிருக்காது. ஆனால், ஜீவனுக்கேதுவான ஜீவ வாசனையாக இருந்திருக்க வேண்டிய எச்சரிப்புகள் மரணத்திற்கேதுவான மரணவாசனையாக அவர்க ளுக்கு அமைந்தன. அவர்களின் அகந்தை புண்பட்டதால், தேவ ஊழியர்களுக்கு எதிராக அவர்களின் கோபம் எழுந்தது. இப்போ ழுது, எலியா தீர்க்கதரிசியை மிகவும் வெறுப்புடன் நோக்கினார்கள். அவரைப் பேசவிடாமல் செய்தால், அவரால் சொல்லப்பட்ட வார்த் தைகளை நிறைவேறவிடாமல் செய்துவிடலாம் என்று நினைத் தார்கள். அவன் மட்டும் அவர்களுடைய கரங்களில் சிக்கியிருந்தால், சந்தோஷமாக அவனை யேசபேலிடம் ஒப்படைத்திருப்பார்கள். அழிவின் மத்தியிலும் சிலைவழிபாட்டில் உறுதியாக நின்றனர். அப்படியாக, தேசத்தின்மேல் பரலோக நியாயத்தீர்ப்புகளைக் கொண்டு வந்த பாவங்களை இன்னமும் அதிகரித்தார்கள். தீஇவ 128.1
பஞ்சத்தால் பீடிக்கப்பட்ட இஸ்ரவேலருக்கு ஒரே ஒரு தீர்வு தான் இருந்தது. சர்வவல்லவரின் சிட்சைக்கரம் அவர்கள்மேல் நீட்டப்பட்டிருந்தது. செய்த பாவங்களிலிருந்து மனந்திரும்பி, முழு மனதோடு கர்த்தரிடத்திற்குத் திரும்புவதுதான் அந்தத் தீர்வு. ‘நான் மழையில்லாதபடிக்கு வானத்தை அடைத்து, அல்லது தேசத்தை அழிக்கவெட்டுக்கிளிகளுக்குக் கட்டளையிட்டு, அல்லது என் ஜனத் திற்குள் கொள்ளைநோயை அனுப்பும்போது, என் நாமம் தரிக்கப் பட்ட என் ஜனங்கள் தங்களைத் தாழ்த்தி, ஜெபம் பண்ணி, என் முகத்தைத் தேடி, தங்கள் பொல்லாத வழிகளை விட்டுத் திரும்பி னால், அப்பொழுது பரலோகத்திலிருக்கிற நான் கேட்டு, அவர்கள் பாவத்தை மன்னித்து, அவர்கள் தேசத்துக்கு ஷேமத்தைக் கொடுப் பேன்’ என்ற வாக்குறுதி அவர்களுக்குக் கொடுக்கப்பட்டிருந்தது. 2நாளா 7:13,14. அந்த ஆசீர்வாதமான முடிவைக் கொண்டுவரும்படி, நிலையான சீர்திருத்தம் ஏற்படும் வரை, தேவன் மழையையும் பனி யையும் நிறுத்தி வைத்திருந்தார். தீஇவ 128.2