எலியாவிற்குப்பின் பல நூற்றாண்டுகள் கடந்துவிட்டன. ஆனாலும், அவன் ஊழியப் பணியின் வரலாறு மறக்கப்பட வில்லை . வழிவிலகலின் மத்தியில் நீதியின் பக்கம் நிற்க அழைக் கப்படுவோருக்கு அது ஊக்கத்தையும் துணிவையும் கொடுத்து வருகிறது. ‘உலகத்தின் முடிவுகாலத்திலுள்ள நமக்கு அதன் அவ சியம் விசேஷமானது. 1கொரி 10:11. வரலாறு திரும்பத் திரும்ப நிகழ்கிறது. இன்றைய உலகிலும் ஆகாபுக்களும் யேசபேல்களும் இருக்கிறார்கள். எலியாவின் காலம் போலவே இன்றைய உலகமும் சிலை வழிபாட்டை நாடி வருகிறது. வெளிப்புறமாக அந்நியக் கோயில்களோ சொரூபங்களோ நம் கண்களில் தென்படாமலிருக் கலாம். ஆனால், ஐசுவரியமும் புகழும் சிற்றின்பமும் ஆர்வத்தைக் கிளறும் கட்டுக்கதைகளும் இவ்வுலகின் தெய்வங்களாய் இருக் கின்றன. தங்கள் இருதயத்தின் விருப்பங்களை மனிதன் பின் பற்றும்படி அவை ஏராளமானோரை வழிநடத்துகின்றன. தேவனைப் பற்றியும் அவர் குணங்களைப் பற்றியும் தவறான கருத்துடையோர் இருக்கிறார்கள். பொய்த்தெய்வத்தையே அவர்கள் வணங்கிவரு கிறார்கள். கிறிஸ்தவர்கள் என்று தங்களை அழைத்துக்கொள்ளும் அநேகர், தேவனுக்கும் அவர் சத்தியத்திற்கும் முற்றிலும் எதிரான செல்வாக்குகளோடு தங்களை இணைக்கிறார்கள். இப்படி, தேவ னைவிட்டு விலகி, மனிதரை மேன்மைப்படுத்தும்படி வழிநடத்தப் படுகிறார்கள். தீஇவ 177.1
இல்லைவாதமும் வழிவிலகலுமுள்ள ஆவியே இக்காலத்தில் மேலோங்கி வருகிறது. சத்தியத்தின் அறிவை ஏற்று, பிரகாசிப்பது போல இன்றைய மக்கள் காணப்பட்டாலும், உண்மையில் குருட் டுத் துணிகரம் உள்ளவர்களாய் இருக்கிறார்கள். தேவனுக்கும் அவர் பிரமாணத்திற்கும் கொடுக்கவேண்டிய இடத்தையும் மேன் மையையும் மனித கொள்கைகள் ஆக்கிரமித்துள்ளன. கீழ்ப்படி யாமை மூலம் தேவர்களைப் போலாகும் சுதந்தரத்தையும் விடு தலையையும் பெறலாம் என்கிற வாக்குறுதியோடு, ஆண் - பெண் களை சாத்தான் தூண்டிக்கொண்டே இருக்கிறான். தேவ வார்த் தைக்கு எதிரானதும், தேவவெளிப்பாட்டைவிட மனிதஞானத்தை உயர்த்துகிறதுமான மனநிலை காணப்படுகிறது. உலகின் பழக்க வழக்கங்களுக்கும் தாக்கங்களுக்கும் ஒத்துப்போய், தங்கள் சிந் தைகளைப் பலர் குழப்பிக்கொள்கின்றனர். அவர்கள் மனது அந்த காரப்பட்டுக் கிடக்கிறது. சத்தியத்திற்கும் பொய்க்கும், வெளிச்சத் திற்கும் இருளுக்கும் உள்ள வித்தியாசத்தைக் காணமுடியாமல் தங் கள் ஆற்றல் முழுவதையும் மனிதர் இழந்துவிட்டதாகத் தோன்று கிறது. வேத சத்தியத்தைவிட தத்துவ ஞானிகளின் கருத்துகளை நம்புகிறார்கள். அந்த அளவிற்கு நீதிப்பாதையிலிருந்து விலகி விட்டார்கள். தேவவார்த்தையின் வாக்குத்தத்தங்கள், அழைப்பு, கீழ்ப்படியாமைக்கும் சிலைவழிபாட்டிற்கும் எதிரான அதன் எச் சரிப்பு ஆகியவற்றாலும் கூட அவர்கள் இருதயங்களை இளகச் செய்ய முடியவில்லை. பவுல், பேதுரு, யோவான் போன்றோரின் விசுவாசம் ‘பழம்பாணியானது’ என்றும், ‘விசித்திரமானது’ என் றும், இன்றைய உலகச் சிந்தையாளர்களின் அறிவுக்கு அது ஈடா காதது’ என்றும் அவர்கள் கருதுகிறார்கள். தீஇவ 178.1
நித்திய ஜீவனையும் சந்தோஷத்தையும் பெற்றுக்கொள்வதற் கான ஏதுகரமாகவே ஆதியில் தேவன் தம் பிரமாணத்தை மனிதர் களுக்குக் கொடுத்தார். அந்தப் பிரமாணத்திற்குக் கீழ்ப்படியாதவர்கள் ஆண்களையும் - பெண்களையும் மாற்றுவதன் மூலம் தேவ நோக் கத்தைக் கெடுக்கப்பார்க்கிறான் சாத்தான். மேலும், அதன் போத கத்தைத் திரித்துக் கூறி, அதன் முக்கியத்துவத்தை அற்பமாகக் காண் பிப்பதே அவனின் ஓயாத முயற்சியாகும். பிரமாணங்களைக்கைக் கொள்வதாகச் சொல்லிக்கொண்டே அதன் போதனைகளை மீறு வதற்காக, பிரமாணத்தை மாற்றப்பார்த்ததே அவனுடைய பிரதான முயற்சி. தீஇவ 178.2
இரண்டு சாலைகள் சந்திக்கும் சந்திப்பில் இருக்கும் வழிகாட் டிக் கம்பத்தைத் தவறான திசை நோக்கித் திருப்பிவைக்கும் ஒரு கெட்ட பழக்கம் முற்காலத்தில் காணப்பட்டது. தேவபிரமாணத்தை மாற்றும் முயற்சிக்கு இதனை ஒப்பிடுகிறார் ஒரு எழுத்தாளர். ஏனெ னில், அந்தத் தீச்செயலால் ஏற்படும் குழப்பமும் கஷ்டமும் மிக அதிகம். தீஇவ 179.1
இந்த உலகத்தின் வழியே பயணம் செய்வோருக்கு, தேவன் வழிகாட்டிக் கம்பம் ஒன்றை நிறுத்தியிருக்கிறார். சிருஷ்டிகருக்குக் கீழ்ப்படிய விருப்பங்கொள்வதற்கு அடையாளமாக அக்கம்பத் தின் ஒரு கரம் இருக்கிறது. அது ஜீவனுக்கும் பேரின்பத்திற்கும் போகும் வழி. இன்னொரு கரம் கீழ்ப்படியாமையைச் சுட்டிக்காட்டு கிறது. அது மரணத்திற்கும் துன்பத்திற்கும் போகும் வழி. யூதச்சட் டம் அனுமதித்த அடைக்கலப் பட்டணத்திற்குச் செல்லும் வழியைப் போன்றே, பேரின்பத்திற்குச் செல்லும் வழியும் தெளிவாகச் சொல் லப்பட்டுள்ளது. ஆனால், சகல நன்மைகளுக்கும் எதிரி ஒருவன் இருக்கிறான். அவன் மனித இனத்தின் மோசமான காலக்கட்டத்தில், வழிகாட்டிக்கம்பத்தை வேறுபக்கமாகத் திருப்பி வைத்துவிட்டான். அதனால், தவறான வழியில் செல்வோர் ஏராளம். தீஇவ 179.2
கர்த்தர் மோசேயின் மூலமாக இஸ்ரவேலருக்கு அறிவுரை தந் தார்: ‘’நீங்கள் என் ஒய்வு நாட்களை ஆசரிக்க வேண்டும்; உங் களைப் பரிசுத்தப் படுத்துகிற கர்த்தர் நான் என்பதை நீங்கள் அறி யும்படி, இது உங்கள் தலைமுறைதோறும் எனக்கும் உங்களுக்கும் அடையாளமாய் இருக்கும். ஆகையால், ஓய்வுநாளை ஆசரிப்பீர் களாக; அது உங்களுக்குப் பரிசுத்தமானது; அதைப் பரிசுத்தக் குலைச்சலாக்குகிறவன் கொலையுண்ணக்கடவன்; ஓய்வுநாளில் வேலை செய்கிறவன் எவனும் கொலை செய்யப்பட வேண்டும். ஆகையால், இஸ்ரவேல் புத்திரர் தங்கள் தலைமுறைதோறும் ஓய்வு நாளை நித்திய உடன் படிக்கையாக ஆசரிக்கும்படி, அதைக் கைக் கொள்ளக்கடவர்கள். அது என்றைக்கும் எனக்கும் இஸ்ரவேல் புத் திரருக்கும் அடையாளமாயிருக்கும்; ஆறுநாளைக்குள்ளே கர்த்தர் வானத்தையும் பூமியையும் உண்டாக்கி, ஏழாம் நாளிலே ஓய்ந்திருந்து பூரித்தார்” என்றார். யாத்திராகமம் 31:13-17. தீஇவ 179.3
’கீழ்ப்படிதலே, தேவ நகரத்திற்குச் செல்வதற்கான வழி’ என்று கர்த்தரின் இந்த வார்த்தைகள் தெளிவாக விளக்குகின்றன. ஆனால், பாவ மனிதனோ வழிகாட்டிக் கம்பத்தைத் தவறான திசை நோக்கித் திருப்பிவைத்துவிட்டான் ; பொய்யான ஒரு ஓய்வுநாளை ஏற்படுத்தி, அதில் ஓய்ந்திருப்பது சிருஷ்டிகரின் கட்டளைக்குக் கீழ்ப்படிவதென அனைவரையும் நம்பச் செய்துவிட்டான். தீஇவ 180.1
’ஏழாம் நாள் கர்த்தருடைய ஓய்வு நாள்’ என்று தேவன் அறிவித் திருக்கிறார். வானமும் பூமியும் உண்டாக்கப்பட்டுத் தீர்ந்த பிறகு, தம் சிருஷ்டிப்புப் பணியின் ஒரு நினைவுச்சின்னமாக அந்நாளை மேன்மைப்படுத்தினார். ‘தாம் உண்டாக்கின தம்முடைய கிரியை களையெல்லாம் முடித்தபின் ஏழாம் நாளிலே ஓய்ந்திருந்து, ஏழாம் நாளை ஆசீர்வதித்து, அதைப் பரிசுத்தமாக்கினார். ‘ஆதி 2:1-3. தீஇவ 180.2
எகிப்திலிருந்து இஸ்ரவேலர் புறப்பட்ட சமயத்தில், அந்தத் தேவ மக்களிடையே ஓய்வுநாள் ஏற்பாடு மிகவும் முக்கியப்படுத் தப்பட்டது. அவர்கள் அடிமைகளாயிருந்த காலக்கட்டங்களில், ஓய்வுநாட்களிலும் வேலை செய்ய அவர்களைக் கட்டாயப்படுத்து வதற்காக, அவர்கள் செய்யவேண்டியிருந்த வேலைச் சுமையை ஒவ்வொரு வாரமும் அதிகரித்தார்கள். வேலையின் தன்மையும் வேலைச்சூழலும் மீண்டும் மீண்டும் கடினமாக்கப்பட்டன. ஆனால், இஸ்ரவேலரோ அடிமைத்தனத்திலிருந்து விடுவிக்கப்பட்டார்கள்; யேகோவாவின் சகல கற்பனைகளையும் கைக்கொள்வதற்கு ஏற்ற இடத்திற்குக் கொண்டுவரப்பட்டார்கள். சீனாய்மலையில் பிர மாணம் கொடுக்கப் பட்டது; தேவனுடைய விரலினால் இரண்டு கற்பலகைகளில் அது எழுதப்பட்டு, மோசேயிடம் ஒப்படைக் கப்பட்டது. யாத் 31:18. கிட்டத்தட்ட நாற்பது வருட வனாந்தர அனு பவம் முழுவதிலும், தேவன் நியமித்த ஓய்வுநாள் பற்றி இஸ்ர வேலருக்குத் தொடர்ந்து நினைவூட்டப்பட்டு வந்தது. ஒவ்வொரு ஏழாம் நாளிலும் மன்னாபொழியவில்லை. ஆனால், ஆயத்தநாளில் மன்னா இரு மடங்கு பொழிந்தது; அன்று அது கெட்டுப்போக வில்லை ; அதிசயவிதமாகக் காக்கப்பட்டது. தீஇவ 180.3
வாக்குத்தத்தத் தேசத்திற்குள் இஸ்ரவேலர் செல்வதற்கு முன் பாக ” ‘நீங்கள் ஓய்வுநாளைப் பரிசுத்தமாய் ஆசரிக்கவேண்டும்” என்று அவர்களிடம் அறிவுரை சொன்னான் மோசே. உபாகமம் 5:12. தங்களைச் சிருஷ்டித்தவரும் மீட்பவருமான தேவனுக்குரிய கடமைகளை நினைகூருவதற்காக ஓய்வு நாள் கட்டளையை உண் மையாய்க் கைக்கொள்ள வேண்டியிருந்தது; அதற்காகவே ஓய்வு நாளை ஏற்படுத்தினார் தேவன். சரியான நோக்கத்துடன் அவர்கள் ஓய்வுநாளைக் கைக்கொண்டால், அவர்களுக்குள்ளே சிலைவழி பாடு நுழைய வழியில்லை . அதற்கு மாறாக, ‘பத்துக் கற்பனைகள் ளுக்குக் கட்டுப்படத் தேவையில்லை’ என்று சொல்லி, பத்துக் கற் பனையின் உரிமைகளை நிராகரித்தால், சிருஷ்டிகரை மறக்க நேரிடும்; மனிதர் வேறே தேவர்களை வணங்க நேரிடும். ‘’நான் தங்களைப் பரிசுத்தம்பண்ணுகிற கர்த்தர் என்று அவர்கள் அறியும் படிக்கு, எனக்கும் அவர்களுக்கும் அடையாளமாய் இருப்பதற்கான என் ஓய்வுநாட்களையும் அவர்களுக்குக் கட்டளையிட்டேன்’‘ என்கிறார் தேவன். ‘’ஆனாலும், இஸ்ரவேல் வம்சத்தார் வனாந் தரத்தில் எனக்கு விரோதமாய் இரண்டகம் பண்ணினார்கள்’‘ என் கிறார். தம்மிடம் திரும்புமாறு அவர்களை அழைத்த அழைப்பிலும், ஓய்வுநாளைப் பரிசுத்தமாய் ஆசரிக்க வேண்டியதின் முக்கியத் துவத்தை அவர்கள் கவனத்திற்கு மீண்டும் கொண்டுவந்தார். ‘’உங் கள் தேவனாகிய கர்த்தர் நானே; நீங்கள் என் கட்டளைகளில் நடந்து, என் நியாயங்களைக் கைக்கொண்டு, அவைகளின்படியே செய்து, என் ஓய்வுநாட்களைப் பரிசுத்தமாக்குங்கள்; ‘நான் உங் கள் தேவனாகிய கர்த்தர்’ என்று நீங்கள் அறியும்படிக்கு அவைகள் எனக்கும் உங்களுக்கும் அடையாளமாயிருக்கும்’‘ என்கிறார். எசேக்கியேல் 20:12, 13, 19, 20. தீஇவ 182.1
யூதாவைப் பாபிலோனியச் சிறையிருப்புக்கு அனுப்பின பாவங்கள் பற்றி அவர்களிடம் சொல்லும்போது, ‘நீ என் ஓய்வுநாட் களைப் பரிசுத்தக்குலைச்சலாக்கினாய். ஆகையால், நான் அவர் கள்மேல் என் கோபத்தை ஊற்றி, என் மூர்க்கத்தின் அக்கினியால் அவர் களை நிர்மூலமாக்கி, அவர்களது வழியின் பலனை அவர்கள் தலை யின்மேல் சுமரப்பண்ணுவேன்’‘ என்றார் தேவன். எசே 22:8, 31. தீஇவ 182.2
நெகேமியாவின் நாட்களில், எருசலேம் திரும்ப எடுப்பித்துக் கட்டப்பட்டபோது, ‘உங்கள் பிதாக்கள் இப்படிச் செய்ததினா லல்லவா, நமது தேவன் நம்மேலும் இந்த நகரத்தின் மேலும் இந்தத் தீங்கையெல்லாம் வரப்பண்ணினார்; நீங்களோவென்றால் ஓய்வு நாளைப் பரிசுத்தக் குலைச்சலாக்குகிறதினால், இஸ்ரவேலின் மேலிருக்கிற உக்கிரத்தை அதிகரிக்கப்பண்ணுகிறீர்கள்” என்று ஓய்வு நாள் மீறுதல் குறித்துக் கண்டித்துச் சொல்லப்பட்டது. நெகே 13:18. தீஇவ 182.3
ஓய்வு நாள் சத்தியத்திற்கு நாம் கீழ்ப்படிய வேண்டியதின் அவசியத்தை கிறிஸ்து தம் பூலோக ஊழியத்தின்போது, முக்கியப் படுத்தினார். தாம் கொடுத்த அந்த ஏற்பாட்டைத் தமது போதனை கள் அனைத்திலும் அவர் மேன்மைப்படுத்தினார். அவருடைய நாட்களில் ஓய்வுநாளைத் தவறான முறையில் கடைப்பிடித்து வந் தார்கள். அதை அவர்கள் கைக்கொண்ட விதத்தில், அவர்கள் சுய நலமும் எதேச்சைத்தன்மையும் வெளிப்பட்டதே தவிர, தேவனுடைய நற்குணம் வெளிப்படவில்லை. தேவனை அறிந்திருப்பதாகச் சொல் லிக்கொண்டு, அவரைத் திரித்துக்காட்டினவர்களின் பொய்ப் போதகங்களை ஒதுக்கினார் கிறிஸ்து. யூதர்கள் பகைமையோடு அவரைப் பின்தொடர்ந்த போதிலும், அவர்களின் நிபந்தனை களுக்குத் தாம் ஒத்துப்போவதாகப் பாவனைகூடக் காட்டவில்லை. மாறாக, தேவபிரமாணத்தின்படியே ஓய்வுநாளைக்கைக் கொண்டு, நீதியாய் நடந்தார். தீஇவ 183.1
யேகோவாவின் பிரமாணத்தின் மேல் தமக்கிருந்த பிரியம் பற்றி, ‘’நியாயப்பிரமாணத்தையானாலும் தீர்க்கதரிசனங்களையா னாலும் அழிக்கிறதற்கு வந்தேன் என்று எண்ணிக்கொள்ளாதேயுங் கள்; அழிக்கிறதற்கு அல்ல, நிறைவேற்றுகிறதற்கே வந்தேன். வானமும் பூமியும் ஒழிந்துபோனாலும், நியாயப்பிரமாணத்திலுள்ள தெல்லாம் நிறைவேறுமளவும், அதில் ஒரு சிறு எழுத்தாகிலும், ஒரு எழுத்தின் உறுப்பாகிலும் ஒழிந்து போகாது என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். ஆகையால், இந்தக் கற்பனைகள் எல்லாவற்றிலும் சிறிதானதொன்றையாகிலும் மீறி, அவ்விதமாய் மனுஷருக்குப் போதிக்கிறவன் பரலோகராஜ்யத்தில் எல்லாரிலும் சிறியவன் என்னப்படுவான்; இவைகளைக் கைக்கொண்டு போதிக் கிறவனோ, பரலோகராஜ்யத்தில் பெரியவன் என்னப்படுவான்’‘ என்று தெள்ளத் தெளிவாகச் சொல்கிறார். மத்தேயு 5:17-19 தீஇவ 183.2
மனிதரின் சந்தோஷத்திற்கு மிகப்பெரிய எதிரி சாத்தான். கிறிஸ்தவயுகத்தில் நான்காம் கற்பனையின் ஓய்வுநாளை அதிகம் தாக்குகிறான். சாத்தான் சொல்வது இதுதான்: ‘’தேவ நோக்கங் களுக்கு எதிராகச் செயல்படுவேன். தேவனுடைய நினைவுச்சின் னமான ஏழாம் நாள் ஓய்வுநாளைப் புறம்பாக்கும் படி நான் என் சீடர்களைப் பெலப்படுத்துவேன். தேவனால் பரிசுத்தமாக்கப்பட்டு, ஆசீர்வதிக்கப்பட்ட நாள் பின்னர் மாற்றப்பட்டதாக உலகத்தாருக் குக் காண்பிப்பேன். மனிதர் மனதில் அந்நாளின் எண்ணமே ஏற் படப் போவதில்லை. அந்நாள்பற்றின் நினைவையே துடைத்துப் போடுவேன். அந்த நாளுக்குப் பதிலாக, தேவனால் அங்கீகரிக்கப் படாத ஒருநாளை நியமிப்பேன். அது தேவனுக்கும் அவர் பிள்ளை களுக்கும் இடையே அடையாளமாக உள்ள நாள் அல்ல. ஏழாம் நா ளுக்கு அவர் நியமித்த பரிசுத்தத்தை இந்த நாளுக்கு மாற்றும்படி யாக, இந்த நாளை ஏற்றுக் கொண்டவர்களை நான் வழி நடத்து வேன். தீஇவ 183.3
’’என் பிரதிநிதிகள் மூலமாக நான் என்னை உயர்த்திக்கொள் வேன். வாரத்தின் முதலாம் நாள் மேன்மைப்படும். போலியான இந்த நாளை மெய்யான ஓய்வுநாளாக புரொட்டஸ்டண்ட் உலகம் ஏற்றுக்கொள்ளும். தேவனால் ஏற்படுத்தப்பட்ட ஓய்வுநாளை மனி தர் கைக்கொள்ளமாட்டார்கள்; அதன்மூலம் அவருடைய பிரமாணம் இகழ்ச்சியாக எண்ணப்படும். ‘உங்கள் தலைமுறைதோறும் எனக் கும் உங்களுக்கும் அடையாளமாயிருக்கும்’ என்கிற வார்த்தைகள் நான் ஏற்படுத்தின ஓய்வுநாளைக் குறிக்கும்படி செய்வேன். தீஇவ 184.1
’’இப்படி உலகம் என்னுடையதாகும். நானே உலகத்தின் அதி பதியும் ராஜாவுமாவேன். என் வல்லமையால் மனிதரின் சிந்தை களை ஆட்கொண்டு, அவர்கள் தேவனுடைய ஓய்வுநாளை இகழ்ச்சி யாக எண்ணும்படி செய்வேன். அது ஒர் அடையாளமோ? ஏழாம் நாள் ஓய்வு ஆசரிப்பானது தங்களுக்குக் காட்டப்படுகிற அவ மதிப்பிற்கு அடையாளம் என்று பூமியின் அதிகாரிகளை நினைக்க வைப்பேன். ஏழாம் நாள் ஆசரிப்பை எவரும் கைக்கொள்ளத் துணி யாதபடிக்கு மனிதரின் சட்டங்களைக் கடுமையாக்குவேன். உண வுக்காகவும் உடைக்காகவும் அஞ்சி, உலகத்தாரோடு சேர்ந்து, அவர் கள் தேவபிரமாணத்தை மீறுவார்கள். பூமி முற்றிலும் என்னுடைய கட்டுப்பாட்டிற்குள் வந்துவிடும்’‘ என்கிறான் சாத்தான். தீஇவ 184.2
பொய்யான ஓர் ஓய்வுநாளை ஏற்படுத்தி, காலத்தையும் பிர மாணத்தையும் மாற்ற நினைக்கிறான் சத்துரு. ஆனால், தேவ பிர மாணத்தை மாற்றுவதில் அவன் மெய்யாகவே வெற்றி பெற்றுள் ளானா? யாத்திராகமம் முப்பத்தோராம் அதிகாரத்திலுள்ள வார்த் தைகள்தாம் அதற்கான பதிலாகும். நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறவர் ஏழாம் நாள் ஓய்வுநாளைப்பற்றி இப்படிச் சொல்கிறார்: ‘இது உங்கள் தலைமுறைதோறும் எனக்கும் உங் களுக்கும் அடையாளமாயிருக்கும்.’ ‘அது என்றென்றைக்கும் அடையாளமாயிருக்கும். ‘யாத்31:13, 17. திசைதிருப்பப்பட்ட வழி காட்டிக்கம்பம் தவறான பாதையைச் சுட்டிக்காட்டலாம். ஆனால், தேவன் மாறாதவர். இன்றும் இஸ்ரவேலின் மகத்துவதேவனாகவே அவர் இருக்கிறார். ‘இதோ, ஜாதிகள் ஏற்றச்சாலில் தொங்கும் துளிபோலவும், தராசிலே படியும் தூசிபோலவும் எண்ணப்படு கிறார்கள்; இதோ, தீவுகளை ஒரு அணுவைப்போல் தூக்குகிறார். லீபனோன் எரிக்கும் விறகுக்குப் போதாது, அதிலுள்ள மிருகஜீவன் கள் தகனபலிக்கும் போதாது. சகல ஜாதிகளும் அவருக்கு முன்பாக ஒன்றுமில்லை. அவர்கள் சூனியத்தில் சூனியமாகவும், மாயையாக வும் எண்ணப்படுகிறார்கள். ‘ஏசா 40:15-17. ஆகாப் - எலியாவின் நாட்கள் போலவே அவர் இன்றும் தம் பிரமாணத்தில் வைராக்கிய முள்ளவராய் இருக்கிறார். தீஇவ 184.3
ஆனால், பிரமாணம் எவ்வளவுக்குப் புறக்கணிக்கப்பட்டுள் ளது! தேவனுக்கு விரோதமாக உலகத்தார் வெளிப்படையாகக் கலகம் செய்கின்றனர். உண்மையில், கீழ்ப்படிய மறுக்கும் இந்தச் சந்ததியிடம் நன்றியின்மை , சடங்காச்சாரம், வஞ்சகம், அகந்தை, வழிவிலகல் முதலானவை நிறைந்துள்ளன. வேதாகமத்தைப் புறக் கணிக்கின்றனர்; சத்தியத்தை வெறுக்கின்றனர். தம் பிரமாணம் புறக்கணிக்கப்பட்டதையும் தம் அன்பு தள்ளப்பட்டதையும் தம் ஊழியர்கள் அற்பமாக நடத்தப்படுவதையும் இயேசு பார்க்கிறார். அவர் தம் இரக்கங்களால் பேசினார். ஆனால், அவற்றைக் கண்டு கொள்வார் இல்லை. அவர் எச்சரிப்போடு பேசினார். ஆனால், அவற்றிற்குச் செவிகொடுப்பார் இல்லை. மனித ஆத்துமா எனும் ஆலயம் பரிசுத்த மற்ற நடத்தையின் இடமாக மாறிவிட்டது. சுய நலம், பொறாமை, பெருமை, பகை போன்ற யாவும் அங்கு வளர்க் கப்படுகின்றன. தீஇவ 185.1
தேவ வார்த்தையை இழிவாகப் பேச அநேகர் தயங்குவதே இல்லை. தேவவார்த்தை சொல்வதை அப்படியே நம்புகிறவர்களை மற்றவர்கள் பரியாசம் பண்ணுகின்றனர். சட்டதிட்டங்களை அவ மதிக்கிற மனப்பான்மை பெருகிவருகிறது. அப்படியே யேகோவா வின் தெளிவான கட்டளைகளை மீறுவதிலும் அது வெளிப்படுகிறது. கீழ்ப்படிதலின் பாதையை விட்டு விலகுவதால், வன்முறையும் குற்றங்களும் நடக்கின்றன. சிலைவழிபாட்டு ஸ்தலங்களுக்குச் சென்று, தொழுது கொண்டு, விருதாவாகச் சந்தோஷத்தையும் சமாதானத்தையும் நாடுகிற ஏராளமானோரின் நிலையானது துய ரமும் இடுக்கணும் நிறைந்துள்ளதாயிருக்கிறது. தீஇவ 185.2
கிட்டத்தட்ட உலகம் அனைத்தும் ஓய்வுநாள் கட்டளையைப் புறக்கணிக்கும் நிலையைக் கவனியுங்கள். வாரத்தின் முதலாம் நாளுக்குக் கற்பிக்கப்பட்ட புனிதத்தன்மையைப் பாதுகாக்கச் சட்டங் களை இயற்றுகிறவர்கள், அதே சமயத்தில் மதுபான வியாபாரத்தைச் சட்டரீதியாக்கச் சட்டங்கள் இயற்றும் பக்தியற்ற துணிவையும் கவ னியுங்கள். தேவசாயலில் படைக்கப்பட்டவர்களை மிருகத்தன முள்ளவர்களாக்கி அழிக்கும் தீமையாக அது இருக்கிறது. அத்த கைய காரியங்களுக்கு அனுமதியளிப்பது மனிதரின் மனச்சாட்சிகளை முடக்கும் செயலாகும். தேவனுடைய வார்த்தைக்கு மேலான ஞானி களாகத் தங்களை நினைத்துக் கொள்கிறார்கள். அத்தகைய சட்டம் இயற்றுபவர்களுக்கு சாத்தான்தாமே ஊக்கச் சக்தியாய் இருக் கிறான். தேவனுக்கும் மேலாக மனித சட்டங்களைப் போற்றுகிற வர்கள்மேல் தேவ சாபம் தங்கும் என்பதை அவன் நன்கு அறிான். மேலும், அழிவிற்குக் கொண்டு செல்கிற அகலமான பாதையில் மனிதரை வழிநடத்த, தன் வல்லமைக்கு உட்பட்ட அனைத்தையும் அவன் செய்துவருகிறான். தீஇவ 186.1
மனித கருத்துகளையும் மனித ஏற்பாடுகளையும் வெகுகால மாக மனிதர் பின்பற்றி வருவதால், உலகம் முழுவதுமே சிலைவழி பாட்டில் ஈடுபட்டு வருகிறது. பிரமாணத்தை மாற்ற, பெருமுயற்சி எடுத்துக்கொள்கிறான் அவன்; தேவனுக்கு எதிராகவும், நீதிமான் களைச் சுட்டிக்காட்டுகிற அந்த அடையாளத்திற்கு எதிராகவும் ஆண்களும் பெண்களும் அணி வகுத்து நிற்க வேண்டுமென்று நினைக்கிறான். அதற்காக, அவன் ஒவ்வொரு மந்திர தந்திரத்தை யும் பயன்படுத்துகிறான். ஆனால், தம்முடைய பிரமாணம் மாற்றப் படுவதையும், தீய சிந்தையோடு அது புறக்கணிக்கப் படுவதையும் தேவன் எப்பொழுதும் சகித்துக்கொள்ளமாட்டார். ‘நரரின் மேட்டி மையான கண்கள் தாழ்த்தப்படும், மனுஷரின் வீறாப்பு தணியும்’ காலம் வருகிறது. ஏசா 2:11. தேவ பிரமாணத்தை அவ நம்பிக்கை கேலிசெய்யலாம்; பரிகசிக்கலாம்; புறக்கணிக்கலாம். உலகப் பற் றின் ஆவி அநேகரைக்களங்கப்படுத்தி, சிலரைக்கட்டுப்படுத்தலாம்; கடும் பிரயாசத்தாலும், தொடர்ச்சியான தியாகத்தாலும் மாத்திரமே தேவ நோக்கம் நிலைகொள்ள முடியும். ஆனாலும், இறுதியில் சத் தியமே மகத்தான வெற்றிபெறும். தீஇவ 186.2
தேவ பணி பூமியில் இறுதிக்கட்டத்தை அடையும்போது, அவ ருடைய பிரமாணம் எனும் கொடி மீண்டும் உயர்த்தப்படும். பொய் மார்க்கம் மேலோங்கலாம்; அக்கிரமம் பெருகலாம்; அநேகரின் அன்பு தணியலாம்; கல்வாரிச் சிலுவை மறக்கப்படலாம்; மரணத் தின் கசப்பைப்போல, அந்தகாரம் இவ்வுலகெங்கும் பரவலாம்; பொது மக்களின் எண்ணங்கள் சத்தியத்திற்கு எதிராக முழு வீச்சில் திரும்பலாம், தேவ மக்களைக் கவிழ்த்துப்போட சதிமேல் சதி தீட் டப்படலாம். ஆனாலும், மிகவும் இக்கட்டான காலத்தில், மனித கருவிகளை எழச்செய்து, எவராலும் எதிர்பேச முடியாத செய்தியை எலியாவின் தேவன் அறிவிப்பார். மனித சஞ்சாரமிகுந்த நகரங்கள், உன்னதமானவருக்கு விரோதமாகப் பேச மனிதர் அளவுக்கு மிஞ் சிப்போகும் இடங்கள் அனைத்திலும் கண்டிப்பின் சத்தம் கேட்கும். உலகத்தோடு கூட்டுச் சேரும் சபையைக் கண்டிப்பார்கள்; தேவ னால் நியமிக்கப்பட்ட மனிதர்கள் அதைச் செய்வார்கள். மனித னால் ஏற்படுத்தப்பட்ட ஒன்றை விட்டுவிட்டு, மெய்யான ஓய்வு நாளைக் கைக்கொள்ளுமாறு ஆண்களையும் பெண்களையும் ஊக் கத்தோடு அவர்கள் அழைப்பார்கள். ‘தேவனுக்குப் பயந்து, அவரை மகிமைப்படுத்துங்கள்; அவர் நியாயத்தீர்ப்புக் கொடுக்கும் வேளை வந்தது; வானத்தையும் பூமியையும் சமுத்திரத்தையும் நீரூற்றுகளையும் உண்டாக்கினவரையே தொழுது கொள்ளுங்கள்; மிருகத்தையும் அதின் சொரூபத்தையும் வணங்கித் தன் நெற்றி யிலாவது தன்கையிலாவது அதின்முத்திரையைத் தரித்துக்கொள்ளு கிறவனெவனோ அவன் தேவனுடைய கோபாக்கினையாகிய பாத் திரத்திலே கலப்பில்லாமல் வார்க்கப்பட்ட அவருடைய உக்கிரமா கிய மதுவைக் குடிப்பான்’ என்பதைச் சகல ஜாதியாருக்கும் அறி விப்பார்கள். வெளி 14:7-10. தீஇவ 186.3
தேவன் தம்முடைய உடன்படிக்கையை முறித்துப்போடுவது மில்லை ; தம்முடைய உதடுகளிலிருந்து புறப்பட்ட காரியத்தை மாற்றுவதுமில்லை. அவருடைய சிங்காசனம் போலவே அவரு டைய வார்த்தையும் என்றென்றும் நிலைநிற்கும். தேவனுடைய விரலால் தெளிவாக எழுதப்பட்ட இந்த உடன்படிக்கையை அடிப் படையாக வைத்தே நியாயத்தீர்ப்பு கொடுக்கப்படும்; உலகத்தார் நியாயத்தீர்ப்படையும் படி மாந்தியின் சிங்காசனத்திற்கு முன்பாகக் கொண்டுவரப்படுவார்கள். தீஇவ 187.1
எலியாவின் நாட்களைப் போலவே இன்றும், தேவனுடைய கற்பனைகளைக் கைக்கொள்ளும் மக்களையும் பொய்த் தெய்வங் களை வணங்குவோரையும் வேறுபடுத்திக் காட்டும் ஒரு கோடு தெளிவாக வகுக்கப்பட்டிருக்கிறது. ‘’நீங்கள் எந்த மட்டும் இரண்டு நினைவுகளால் குந்திக்குந்தி நடப்பீர்கள்; கர்த்தர் தெய்வமானால் அவரைப் பின்பற்றுங்கள் ; பாகால் தெய்வமானால் அவனைப் பின் பற்றுங்கள்” என்று கேட்டான் எலியா. 1இராஜா 18:21. ‘மகா பாபிலோன் விழுந்தது! விழுந்தது! என் ஜனங்களே, நீங்கள் அவ ளுடைய பாவங்களுக்கு உடன்பாடமலும், அவளுக்கு நேரிடும் வாதைகளில் அகப்படாமலும் இருக்கும்படிக்கு அவளை விட்டு வெளியே வாருங்கள். அவளுடைய பாவம் வானபரியந்தம் எட்டி னது, அவளுடைய அநியாயங்களைத் தேவன் நினைவுகூர்ந்தார்’ என்பதே இன்றைய செய்தியாயிருக்கிறது. வெளி 18:2,4,5. தீஇவ 187.2
ஒவ்வோர் ஆத்துமாவுக்கும் சோதனை ஏற்படுவதற்கான காலம் வெகுதூரத்தில் இல்லை. பொய்யான ஓய்வுநாளைக் கைக் கொள்ளும்படி நம்மை வற்புறுத்துவார்கள். தேவனுடைய கற்ப னைகளுக்கும் மனிதரின் கட்டளைகளுக்கும் இடையேதான் போட்டி நிலவும். கொஞ்சம் கொஞ்சமாக உலகத்தாரின் கோரிக் கைகளுக்கு இணங்கி, உலகப் பழக்கவழக்கங்களுக்குப் பலர் ஒத்துப்போவார்கள். பரியாசத்திற்கும் நிந்தைக்கும் கடுஞ்சொல் லுக்கும் சிறையிருப்புக்கும் மரணத்திற்கும் தங்களைக் கீழ்ப்படுத் தப் பயந்து, வேறு வல்லமைகளுக்குத் தங்களை ஒப்புக் கொடுப்பார் கள். அச்சமயத்தில், பொன்னானது களிம்பிலிருந்து பிரித்தெடுக் கப்படும். மெய்யான தேவபக்தியானது பொய்யும் பாசாங்குமான திலிருந்து தெளிவாக வேறுபட்டுக் காணப்படும். நம்மை ஆச்சரியப் படச் செய்த பிரகாசமான நட்சத்திரங்கள் பல அந்நாளில் இருண்டு போகும். ஆசரிப்புக் கூடார ஆபரணங்களைத் தரித்திருக்கிற அநே கர் கிறிஸ்துவின் நீதி என்னும் வஸ்திரத்தைத் தரித்திராதவர்களாய் இருப்பதால், அவர்கள் தங்கள் சுயநிர்வாணத்தால் வெட்கிப்போய்க் காணப்படுவார்கள். தீஇவ 188.1
சகல தேசங்களிலும் சிதறுண்டு கிடக்கும் பூமியின் குடிகளில், பாகாலுக்கு முழங்காலிடாதவர்களும் இருப்பார்கள். இரவில் மாத்திரமே புலப்படும் வானத்து நட்சத்திரங்கள் போல, பூமியை இருள் மூடும் போதும், மக்களை அந்தகாரம் சூழும்போதும் இந்த மெய் விசுவாசிகள் ஜொலிப்பார்கள். அஞ்ஞான ஆப்ரிக்காவிலும், ஐரோப்பாவிலுள்ள கத்தோலிக்கத் தேசங்களிலும் தென் அமெரிக் காவிலும் சீனாவிலும் இந்தியாவிலும் கடற்தீவுகளிலும் பூமியின் சகல அந்தகாரப் பகுதிகளிலும் தம்மால் தெரிந்து கொள்ளப்பட் டோரை தேவன் தமக்காக வைத்துள்ளார். இருளிலும் ஜொலித்து, தேவபிரமாணத்திற்குக் கீழ்ப்படிவதால் கிடைக்கிற சீர்திருத்தவல்ல மையை வான்வெள்ளிகளைப்போல அவர்கள் அஞ்ஞான உல கிற்குத் தெளிவாக வெளிப்படுத்துவார்கள். ஒவ்வொரு தேசத்தி லும், சகல மக்களுக்கும் பாஷைக்காரருக்கும் மத்தியில் இப் பொழுதும் கூட அவர்கள் இருக்கிறார்கள். ஆனால், வழிவிலகல் மிதமிஞ்சும் வேளையில், சிறியோர், பெரியோர், ஐசுவரியவான் கள், தரித்திரர், சுயாதீனர், அடிமைகள் யாவரும் பொய்யான ஓய்வு நாளைத் தொழாவிட்டால் மரணதண்டனை பெறும்படியான ஓர் அடையாளத்தைக் கொடுக்க சாத்தான் முழு மூச்சில் முயலும்போது, ‘குற்றமற்றவர்களும் கபடற்றவர்களும் தேவனுடைய மாசற்ற பிள்ளைகளுமான’ இவர்கள், ‘உலகத்திலே சுடர்களைப்போலப் பிரகாசிப்பார்கள். வெளி 13:16; பிலி 2:14, 15. அந்தகாரம் அதி கரிக்க அதிகரிக்க, இவர்களும் அதிகமதிகமாக ஜொலிப்பார்கள். தீஇவ 188.2
சீர்கெட்ட ஜனங்கள் மேல் தேவனுடைய நியாயத்தீர்ப்புகள் சம்பவித்துக் கொண்டிருந்தபோது, எலியா போட்ட கணக்கு எத்தனை விந்தையாக இருந்தது! ஒரே ஒருவன் தான் கர்த்தருடைய பக்கத்தில் இருப்பதாக அவன் கணக்கிட்டான். ஆனால், ‘நான் ஒருவன் மாத்திரம் மீதியாயிருக்கிறேன்; என் பிராணனையும் வாங் கத் தேடுகிறார்கள்’‘ என்று அவன் சொன்னபோது, ‘’பாகாலுக்கு முடங்காதிருக்கிற முழங்கால்களையும், அவனை முத்தஞ் செய் யாதிருக்கிற ஏழாயிரம் பேரை இஸ்ரவேலிலே மீதியாக வைத்தி ருக்கிறேன்’‘ என்று சொல்லி, ஆச்சரியமூட்டினார் தேவன். 1 இரா ஜா 19:14, 18. தீஇவ 189.1
ஆகவே, இன்றும் இஸ்ரவேலைக் கணக்கிட எவரும் முயல வேண்டாம். மாறாக, ஒவ்வொருவரும் சதையான இருதயத்தையும் கனிவான இரக்கமுடைய இருதயத்தையும், கிறிஸ்துவின் பரிவிரக் கம்கொண்ட விழுந்துபோன ஓர் உலகத்தாரின் இரட்சிப்பிற்காக ஏங்கும் இருதயத்தையும் பெற்றிருக்கக்கடவோம். தீஇவ 189.2