Go to full page →

24 - பஸ்கா PPTam 332

ஆஸ்ரவேலர்களின் விடுதலைக்கான கோரிக்கை எகிப்தின் இராஜாவின் முன் முதலாவது வைக்கப்பட்ட போது மிகவும் பயங்கரமான வாதைகளைக்குறித்த எச்சரிப்பு கொடுக்கப்பட்டது. அப்பொழுது நீ பார்வோனோடே சொல்ல வேண்டியது என்னவென் றால் இஸ்ரவேல் என்னுடைய குமாரன், என் சேஷ்டபுத்திரன். எனக்கு ஆராதனை செய்யும்படி என் குமாரனை அனுப்பிவிடு என்று கட்டளையிடுகிறேன்; அவனைவிடமாட்டேன் என்பாயாகில் நான் உன்னுடைய குமாரனை, உன் சேஷ்டபுத்திரனைச் சங்கரிப் பேன் என்று கர்த்தர் சொன்னார் என்று சொல் (யாத் 422, 23) என்று பார்வோனிடம் சொல்லும்படி மோசே நடத்தப்பட்டான். எகிப்தியர் களால் அலட்சியப்படுத்தப்பட்டிருந்தபோதும் அவருடைய பிரமாணங்களை வைத்திருப்பவர்களாக பிரித்துக்காட்டப்பட்டிருந்ததினால் இஸ்ரவேலர்கள் தேவனால் கனம் பண்ணப்பட்டிருந் தார்கள். அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட விசேஷமான ஆசீர் வாதங்களினாலும் வாய்ப்புகளினாலும் சகோதரர் நடுவே முதற்பிறந்தவனைப் போல் தேசங்களின் நடுவே தலையாய இடத்தில் அவர்கள் இருந்தார்கள். PPTam 332.1

எகிப்து எந்த நியாயத்தீர்ப்பைக்குறித்து முதலாவது எச்சரிக்கப்பட்டிருந்ததோ, அதுதான் கடைசியாக அனுப்பப்படவிருந்தது. தேவன் நீண்ட பொறுமையும் தாராளமான கிருபையும் கொண்டிருக்கிறார். அவர் தமது சாயலில் உண்டாக்கப்பட்டவர்களிடம் உருக்கமான கவனத்தை கொண்டிருக்கிறார். அறுவடைகளுக்கும் மந்தைகளுக்கும் மாடுகளுக்கும் ஏற்பட்ட இழப்பு எகிப்தை மனந்திரும்ப கொண்டுவந்திருக்குமானால், குழந்தைகள் அடிக்கப்பட்டிருக்கமாட்டார்கள். ஆனால் தேசம் பிடிவாதமாக தெய்வீகக் கட்டளையை எதிர்த்திருந்தது. எனவே இப்போது கடைசி அடி விழவிருந்தது. PPTam 332.2

மீண்டும் பார்வோனின் சமூகத்தில் காணப்படுவதற்கு மரணத்தின் வேதனையில் மோசே தடை செய்யப்பட்டிருந்தான். ஆனால் கலகம் செய்த இராஜாவிற்கு தேவனிடமிருந்து வந்த கடைசி செய்தி கொடுக்கப்பட வேண்டும். மோசே அவன் முன்பு: கர்த்தர் நடுராத்திரியிலே நான் எகிப்தின் மத்தியில் புறப்பட்டுப் போவேன். அப்பொழுது சிங்காசனத்தின் மேல் வீற்றிருக்கும் பார்வோனுடைய தலைப்பிள்ளை முதல் ஏந்திரம் அரைக்கும் அடிமைப்பெண்ணுடைய தலைப்பிள்ளை வரைக்கும், எகிப்து தேசத்திலிருக்கிற முதற்போறனைத்தும் மிருகஜீவன்களின் தலை யீற்றனைத்தும் சாகும் என்று உரைக்கிறார் என்று சொன்னதுமன்றி, அதினால் எகிப்து தேசம் எங்கும் முன்னும் பின்னும் ஒருக்காலும் உண்டாகாத பெரிய கூக்குரல் உண்டாகும். ஆனாலும் கர்த்தர் எகிப்தியருக்கும் இஸ்ரவேலருக்கும் பண்ணுகிற வித்தியாசத்தை நீங்கள் அறியும்படிக்கு, இஸ்ரவேல் புத்திரர் அனைவருக்குள்ளும் மனிதர் முதல் மிருகஜீவன்கள் வரைக்கும் ஒரு நாயாகிலும் தன் நாவை அசைப்பதில்லை. அப்பொழுது உம்முடைய ஊழியக்கார ராகிய இவர்கள் எல்லாரும் என்னிடத்தில் வந்து, பணிந்து, நீயும் உன்னைப் பின்பற்றுகிறவர்கள் யாவரும் புறப்பட்டுப் போங்கள் என்று சொல்லுவார்கள்; அதின்பின் புறப்படுவேன் என்ற பயங்கரமான அறிவிப்போடு வந்தான். PPTam 333.1

இந்த தண்டனையை நடப்பிக்கும் முன்பாக எகிப்திலிருந்து இஸ்ரவேல் புத்திரர் புறப்படுவதைக் குறித்த அறிவிப்புகளையும் நடத்துதலையும் விசேஷமாக வரப்போகும் நியாயத்தீர்ப்பிலிருந்து அவர்கள் பாதுகாக்கப்படுவதற்கான நடத்துதலையும் தேவன் மோசேயின் வழியாக அவர்களுக்குக் கொடுத்திருந்தார். ஒவ் வொரு குடும்பமும் தனியாக அல்லது மற்றவர்களோடு இணைந்து பழுதில்லாத ஒரு ஆட்டை அல்லது ஒரு ஆட்டுக்குட்டியை கொல்ல வேண்டும். நடு இரவிலே வருகிற சங்கரிக்கும் தூதன் அவர்களுடைய வாசஸ்லாத்தில் பிரவேசிக்காதிருக்கும் படி ஈசோப் பினால் அதன் இரத்தத்தை வீட்டு வாசல் நிலைக்கால்கள் இரண்டிலும் நிலையின் மேற்சட்டத்திலும் தெளிக்க வேண்டும். உங்கள் அரைகளில் கச்சை கட்டிக்கொண்டும், உங்கள் கால்களில் பாதரட்சை தொடுத்துக்கொண்டும், உங்கள் கையில் தடி பிடித் துக்கொண்டும் அதைத் தீவிரமாய்ப் புசிக்கக்கடவீர்கள்; அது கர்த்தருடைய பஸ்கா என்று மோசே சொன்னதைப்போல அதன் மாம்சத்தைப் பொரித்து புளிப்பில்லாத அப்பத்தோடும் கசப்பான கீரைகளோடும் புசிக்கவேண்டும். PPTam 333.2

ஆண்டவர்: அந்த ராத்திரியிலே நான் எகிப்து தேசம் எங்கும் கடந்து போய், எகிப்து தேசத்திலுள்ள மனிதர் முதல் மிருகஜீவன்கள் மட்டும், முதற்பேறாயிருக்கிறவைகளையெல்லாம் அதம்பண்ணி, எகிப்து தேவர்களின் மேல் நீதியைச் செலுத்துவேன்; நானே கர்த்தர். நீங்கள் இருக்கும் வீடுகளில் அந்த இரத்தம் உங்களுக்காக அடையாளமாய் இருக்கும், அந்த இரத்தத்தை நான் கண்டு, உங்களைக் கடந்து போவேன், நான் எகிப்து தேசத்தை அழிக்கும் போது, அழிக்கும் வாதை உங்களுக்குள்ளே வராதிருக்கும் என்று அறிவித்தார். PPTam 334.1

இந்த மாபெரும் விடுதலையைக் கொண்டாடும் வண்ணமாக வரும் அனைத்து தலைமுறைகளிலும் வருஷாவருஷம் ஒரு பண்டிகை கடைபிடிக்கப்பட வேண்டும். அந்த நாள் உங்களுக்கு நினைவுகூருதலான நாளாய் இருக்கக்கடவது; அதைக்கர்த்தருக்குப் பண்டிகையாக ஆசரிப்பீர்களாக, அதை உங்கள் தலைமுறைதோறும் நித்திய நியமமாக ஆசரிக்கக்கடவீர்கள். வருகிற வருடங்களில் இந்த பண்டிகையை அவர்கள் ஆசரிக்கும் போது, இந்த மாபெரும் விடுதலையின் கதையை, இது கர்த்தருடைய பஸ்காவாகிய பலி, அவர் எகிப்தியரை அதம் பண்ணி, நம்முடைய வீடுகளைத் தப்பப்பண்ணின்போது, எகிப்திலிருந்த இஸ்ரவேல் புத்திரருடைய வீடுகளைக் கடந்து போனார் என்று நீங்கள் சொல்ல வேண்டும். என்று மோசே சொன்னதைப் போல் அவர்கள் தங்கள் பிள்ளைகளுக்குத் திரும்பக் கூற வேண்டும். PPTam 334.2

மேலும், எகிப்தின் முதற்பிறப்பு எல்லாம் அழிந்தபோது, அதே அழிவிற்கு உட்பட்டிருந்தும், பாவநிவிர்த்தி செய்த பலியினால் இஸ்ரவேலர்கள் கிருபையாக பாதுகாக்கப்பட்டார்கள் என்பதை ஒப்புக்கொள்ளும் விதமாக, மனிதனிலும் மிருகத்திலும் முதற்பிறந்தவையெல்லாம் ஆண்டவருடையதாக இருந்து, ஒரு மீட்பின் காணிக்கையால் மீண்டும் வாங்கப்பட வேண்டும். முதற்பேறானவையெல்லாம் என்னுடையவை; நான் எகிப்து தேசத்தில் முதற்பேறான யாவையும் சங்கரித்த நாளில், இஸ்ரவேலில் மனிதர் முதல் மிருகஜீவன் மட்டுமுள்ள முதற்பேறான யாவையும் எனக்கென்று பரிசுத்தப்படுத்தினதினாலே, அவைகள் என்னுடைய வைகளாயிருக்கும். (எண்.3:13) என்று ஆண்டவர் அறிவித்தார். ஆசரிப்புக் கூடார ஊழியத்தை ஏற்படுத்தினபின்பு, ஆசரிப்புகூடார வேலைக்காக ஜனத்தின் முதற்பிறப்பிற்கு பதிலாக லேவி கோத் திரத்தை ஆண்டவர் தமக்காக தெரிந்து கொண்டார். இஸ்ரவேல் புத்திரரிலிருந்து அவர்கள் எனக்கு முற்றிலும் கொடுக்கப்பட்டிருக்கிறார்கள் ...... சகல் முதற்பேறுக்கும் பதிலாக அவர்களை எனக்கு எடுத்துக்கொண்டேன் (எண். 8:16) என்று அவர் கூறினார். எனினும் தேவனுடைய கிருபையை ஒப்புக்கொள்ளும் வண்ணமாக முதல் மகனுக்காக அனைவரும் மீட்பின் காணிக்கையை செலுத்தும்படி இன்னும் கோரப்பட்டிருந்தனர். எண். 18:15, 16. PPTam 334.3

பஸ்கா, எகிப்திலிருந்து பெற்ற விடுதலையை பின்சுட்டிக் காட்டுவது மாத்திரமல்ல, பாவத்தின் கட்டிலிருந்து கிறிஸ்து தமது ஜனங்களை விடுவிக்கும் மாபெரும் விடுதலையை முன் சுட்டிக்காட்டுவதாகவும் அது நினைவு கூருதலாக மாத்திரமல்ல அடையாளமாகவும் இருக்க வேண்டியதிருந்தது. பலியான ஆட்டுக்குட்டி, நம்முடைய இரட்சிப்பின் ஒரே நம்பிக்கையான தேவ ஆட்டுக்குட்டியை எடுத்துக்காட்டியது. அப்போஸ்தலன் : நம்முடைய பஸ்காவாகிய கிறிஸ்து நமக்காகப் பலியிடப்பட்டிருக் கிறாரே. 1கொரி. 57 என்று சொல்லுகிறான். பஸ்கா ஆடு அடிக் கப்படுவது மாத்திரமல்ல PPTam 335.1

அதன் இரத்தம் நிலை கால்களில் தெளிக்கப்படவும் வேண்டும். அவ்வாறே கிறிஸ்துவின் இரத்தத்தின் நன்மைகள் ஆத்துமாவிற்கு பொருத்தப்பட வேண்டும். அவர் உலகத்திற்காக மரித்தார் என்று மாத்திரமல்ல, தனிப்பட்ட நமக்காக மரித்திருக்கிறார் என்றும் நாம் நம்பவேண்டும். மீட்பின் பலியின் நன்மையை நாம் உபயோகிக்க வேண்டும். PPTam 335.2

இரத்தத்தைத் தெளிப்பதற்காக உபயோகப்படுத்தப்பட்ட ஈசே பாப்பு தூய்மைப்படுத்துவதின் அடையாளமாக இருந்தது. இதேவிதமாகவே குஷ்டரோகியையும் மரித்தவனால் தீட்டுப்பட்ட வர்களையும் கழுவுவதற்கும் அது உபயோகப்படுத்தப்பட்டது. என்னை ஈசோப்பினால் சுத்திகரியும், அப்பொழுது நான் சுத்த மாவேன், என்னைக் கழுவியருளும், அப்பொழுது நான் உறைந்த மழையிலும் வெண்மையாவேன். (சங். 51:7) என்ற சங்கீதக்காரனின் ஜெபத்திலும் அதன் முக்கியத்துவத்தைக் காணலாம். PPTam 335.3

ஆடு அதனுடைய ஒரு எலும்பும் முறிக்கப்படாமல் முழுமை யாக ஆயத்தப்படுத்தப்பட வேண்டும். அவ்வாறே நமக்காக மரிக்க விருந்த தேவ ஆட்டுக்குட்டியின் ஒரு எலும்பும் முறிக்கப்படக் கூடாது. யோவான் 19:36. கிறிஸ்துவின் தியாக பலியின் முழுமை இந்த விதத்திலும் எடுத்துக்காட்டப்பட்டது. PPTam 336.1

மாமிசம் புசிக்கப்படவேண்டும். பாவ மன்னிப்பிற்காக நாம் கிறிஸ்துவை நம்புவது மாத்திரம் போதாது. அவரிடமிருந்து அவருடைய வார்த்தையின் வழியாக ஆவிக்குரிய பலத்தையும் சத்தையும் விசுவாசத்தினால் நிலையாக பெறவேண்டும். நீங்கள் மனுஷகுமாரனுடைய மாம்சத்தைப் புசியாமலும், அவருடைய இரத்தத்தைப் பானம் பண்ணாமலும் இருந்தால் உங்களுக்குள்ளே ஜீவனில்லை என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். என் மாம்சத்தைப் புசித்து, என் இரத்தத்தைப் பானம் பண்ணுகிறவனுக்கு நித்தியஜீவன் உண்டு. (யோவான் 6:53, 54) என்று கிறிஸ்து கூறினார். அதன் பொருளை விளக்கும்படி நான் உங்களுக்குச் சொல்லுகிற வசனங்கள் ஆவியாயும் ஜீவனாயும் இருக்கிறது (வசனம் 63) என்று அவர் கூறினார். இயேசு தமது பிதாவின் பிரமாணத்தை ஏற்றுக்கொண்டு, அதன் கொள்கைகளை தமது வாழ்க்கையில் செயல்படுத்தி, அதன் ஆவியை வெளிக்காட்டி, இருதயத்தில் அது உண்டாக்கும் நன்மையின் வல்லமையை காட்டினார். அந்த வார்த்தை மாம்சமாகி, கிருபையினாலும் சத்தியத் தினாலும் நிறைந்தவராய், நமக்குள்ளே வாசம்பண்ணினார், அவ ருடைய மகிமையைக் கண்டோம், அது பிதாவுக்கு ஒரேபேறான வருடைய மகிமைக்கு ஏற்ற மகிமையாகவே இருந்தது (யோவான் 1:14) என்று யோவான் கூறுகிறார். கிறிஸ்துவின் பின்னடியார்கள் அவருடைய அனுபவத்தில் பங்குகொள்ளுகிறவர்களாக இருக்கவேண்டும். தேவனுடைய வார்த்தை வாழ்க்கை மற்றும் செயலின் குறிக்கோளாக மாறுவதற்கு அதை அவர்கள் வாங்கி உட்கொள்ள வேண்டும். கிறிஸ்துவின் வல்லமையினால் அவருடைய சாயலுக்கு மாற்றப்பட்டு தெய்வீக குணங்களைப் பிரதிபலிக்க வேண்டும். தேவ குமாரனுடைய மாம்சத்தைப் புசித்து அவருடைய இரத்தத்தை பானம் பண்ணவேண்டும். இல்லாதபோது அவர்களில் ஜீவன் இருக்காது. கிறிஸ்துவின் ஆவியும் கிரியையும் அவருடைய சீடர்களின் ஆவியும் கிரியையுமாக மாறவேண்டும். PPTam 336.2

எகிப்தின் அடிமைத்தனத்தின் கசப்பை பின்காட்டுவதாக ஆட்டுக்குட்டி கசப்பான கீரைகளோடு சாப்பிடப்பட வேண்டும். எனவே கிறிஸ்துவை நாம் உட்கொள்ளும் போது நம்முடைய பாவங்களினிமித்தம் நொறுங்கின இருதயத்தோடு உட்கொள்ள வேண்டும். புளிப்பில்லாத அப்பத்தின் உபயோகமும் குறிப்பானதாயிருந்தது. அது பஸ்கா நியமனத்தில் வெளிப்படையாக சே ர்க்கப்பட்டிருந்து, இந்தப் பண்டிகையின் நாட்களில் அவர்களுடைய வீடுகளில் புளிப்பு காணப்படக்கூடாது என்பது யுதர்களுடைய பழக்கத்தில் கண்டிப்பாக கடைபிடிக்கப்பட்டிருந்தது. அதேபோன்று கிறிஸ்துவிடமிருந்து ஜீவனும் சத்தும் பெற்றுக்கொள்ள விரும்பும் அனைவரும் பாவத்தின் புளிப்பை அப்புறப்படுத்த வேண்டும். எனவே பவுல் கொரிந்து சபைக்கு . நீங்கள் புளிப்பில்லாதவர்களாயிருக்கிறபடியே, பழைய புளித்த மாவைப் புறம்பே கழித்துப் போடுங்கள். ஏனெனில் நம்முடைய பஸ்காவாகிய கிறிஸ்து நமக் காகப் பலியிடப்பட்டிருக்கிறாரே. ஆதலால் பழைய புளித்தமா வோடே அல்ல, துர்க்குணம் பொல்லாப்பு என்னும் புளித்தமா வோடும் அல்ல, துப்புரவு உண்மை என்னும் புளிப்பில்லாத அப்பத்தோடே பண்டிகையை ஆசரிக்கக்கடவோம். (1 கொரி. 57, 8) என்று எழுதுகிறார். PPTam 336.3

விடுதலை பெறுவதற்கு முன்பாக, நிறைவேற்றப்படப்போகிற மாபெரும் விடுதலையில் அடிமைகள் தங்கள் விசுவாசத்தைக் காண்பிக்க வேண்டும். இரத்தத்தின் அடையாளம் அவர்கள் வீடுகளில் போடப்படவேண்டும். அவர்கள் எகிப்தியர்களிட மிருந்து தங்களையும் தங்கள் குடும்பங்களையும் பிரித்து, தங்களுடைய சொந்த இல்லங்களுக்குள் கூட வேண்டும். கொடுக் கப்பட்ட அறிவுரைகளில் எந்தக் குறிப்பையாவது இஸ்ரவேலர்கள் கருத்தில் கொள்ளவில்லையெனில், எகிப்தியரிடமிருந்து தங்கள் குழந்தைகளை பிரிக்க அவர்கள் தவறியிருந்தால், ஆட்டுக்குட்டியை அடித்தும் அதன் இரத்தத்தை நிலைக்காலில் தெளிக்காதிருந்தால், அல்லது யாராகிலும் தங்கள் வீடுகளை விட்டு வெளியே சென்றிருந்தால், அவர்கள் பாதுகாப்பாக இருந்திருக்க மாட்டார்கள். தேவையான அனைத்தையும் தாங்கள் செய்துவிட்டதாக உண் மையாகவே அவர்கள் நம்பியிருக்கலாம். ஆனால் அவர்களுடைய உண்மை அவர்களைக் காப்பாற்றியிருக்காது. ஆண்டவருடைய நடத்துதல்களுக்கு செவிகொடுக்கத்தவறின் அனைவரும் சங்காரத் தூதனின் கைகளால் தங்கள் முதல் குமாரனை இழந்திருப்பார்கள். கீழ்ப்படிதலினால் ஜனங்கள் தங்கள் விசுவாசத்திற்கான சான்றை கொடுக்க வேண்டும். அவ்வாறே, கிறிஸ்துவின் இரத்தத்தின் நன்மையால் இரட்சிக்கப்படுவதை நம்பியிருக்கிற அனைவரும், தங்களுடைய இரட்சிப்பை காத்துக்கொள்ள தாங்களும் சிலவற்றைச் செய்யவேண்டும் என்பதை உணரவேண்டும். மீறுதலின் தண்டனையிலிருந்து கிறிஸ்து மாத்திரமே நம்மை காக்க முடியும் என்று இருக்கும் போதும், நாம் பாவத்திலிருந்து கீழ்ப்படிதலுக்குத் திரும்ப வேண்டும். மனிதன் கிரியையினாலல்ல, விசுவாசத்தினால் தான் இரட்சிக்கப்படுவான்; எனினும் அவனுடைய விசு வாசம் கிரியைகளினால் காண்பிக்கப்படவேண்டும், பாவத்தின் பரிகாரமாக மரிக்கும்படி தேவன் தமது குமாரனைக் கொடுத்தார். அவர் சத்திய வெளிச்சத்தை ஜீவனின் பாதையை வெளிப்படுத்தி, அவர் வசதிகளையும் நியமங்களையும் வாய்ப்புகளையும் கொடுத்திருக்கிறார். காப்பாற்றும் இந்த முகவர்களோடு மனிதன் இப்போது கண்டிப்பாக ஒத்துழைக்க வேண்டும். தேவன் உண்டாக்கியிருக்கிற இந்த உதவிகளைப் போற்றி உபயோகப்படுத்த வேண்டும் அனைத்து தெய்வீக கோரிக்கைகளையும் நம்பி கீழ்ப்படிய வேண்டும். அவர்களுடைய விடுதலைக்கான தேவ னுடைய ஏற்பாடுகளை மோசே இஸ்ரவேலர்களுக்கு திரும்பக் கூறின் போது, ஜனங்கள் தலைவணங்கிப் பணிந்து கொண்டார்கள். கிருபையாக தங்களை மீட்பவருக்கு காண்பித்த நன்றியில், விடுதலையைக் குறித்த மகிழ்ச்சியான நம்பிக்கையும் ஒடுக் கினவர்கள் மேல் வரக் காத்திருந்த நியாயத்தீர்ப்புகளைக் குறித்த பயங்கரமான அறிவும், துரிதமான வெளியேற்றத்திற்கான கவனமும் உழைப்புமான இவை அனைத்தும் கொஞ்ச நேரம் மறைந்திருந்தது. எகிப்தியரில் அநேகர், எபிரெயர்களின் தெய் வமே ஒரே மெய்யான தெய்வம் என்று ஒப்புக்கொள்ள நடத்தப்பட்டிருந்தனர். இவர்கள், சங்கரிக்கும் தூதன் தேசத்தின் வழியாகக் கடந்து போகும் போது இஸ்ரவேலர்களின் வீடுகளில் அடைக்கலம் பெற்றுக்கொள்ள அனுமதிக்காக மன்றாடினர். அவர்கள் சந்தோஷமாக வரவேற்றகப்பட்டனர். இது முதல் யாக்கோபின் தேவனை சேவிக்கவும், அவருடைய ஜனங்களோடு எகிப்தை விட்டு வெளியேறவும் அவர்கள் தங்களை ஒப்புக்கொடுத்தனர். PPTam 337.1

தேவன் கொடுத்த வழிமுறைகளுக்கு இஸ்ரவேலர் கீழ்ப் படிந்தனர். பிரிந்து செல்லுவதற்கான ஆயத்தங்களை துரிதமாகவும் இரகசியமாகவும் அவர்கள் செய்தனர். அவர்களுடைய குடும்பங்கள் கூட்டப்பட்டன ; பஸ்கா ஆடு பலியிடப்பட்டது; அதன் மாம்சம் அக்கினியில் பொரிக்கப்பட்டது; புளிப்பில்லாத அப்பமும் கசப்பான கீரைகளும் ஆயத்தப்படுத்தப்பட்டன. பஸ்கா வீட்டின் தகப்பனும் ஆசாரியனுமாயிருந்தவன் வாசல் நிலையில் அதன் இரத்தத்தை தெளித்து, வீட்டுக்குள் இருந்த தன் குடும்பத்தோடு சேர்ந்துகொண்டான். அவசரத்திலும் மௌனத்திலும் பஸ்கா ஆடு சாப்பிடப்பட்டது. விவரிக்கக்கூடாத பயத்தால் பலமான மனிதனிலிருந்து சிறிய குழந்தை வரை முதல் பிறந்தவனின் இருதயம் வேகமாக அடித்துக்கொண்டிருக்க பயபக்தியோடு ஜனங்கள் ஜெபித்து காத்திருந்தனர். அந்த இரவில் விழவிருந்த பயங்கரமான அடியை நினைத்தபோது, தகப்பன்மார்களும் தாய்மார்களும் தங்கள் கரங்களில் தங்களுடைய பிரியமான முதல் பிள்ளையை அணைத்துக்கொண்டனர். ஆனால் சங்காரத் தூதனால் இஸ்ரவேலின் எந்த வாசஸ்தலமும் சந்திக்கப்படவில்லை. இரத்தத்தின் அடையாளம் - இரட்சகரின் பாதுகாப்பைக் குறித்த அடையாளம் - அவர்களுடைய கதவுகளில் இருந்தது. சங்க ரிப்பவன் நுழையவில்லை . PPTam 338.1

நடுஇராவில் மகா கூக்குரல் எகிப்திலே உண்டாயிற்று; சாவில் லாத ஒரு வீடும் இருந்ததில்லை. சிங்காசனத்தின் மேல் வீற்றிருக்கும் பார்வோனுடைய தலைப்பிள்ளை முதல் காவல் கிடங்கிலிருக்கும் சிறைப்பட்டவனின் தலைப்பிள்ளை வரைக்கும். எகிப்து தேசத்தில் இருந்த முதற்பேறனைத்தும் மிருகஜீவன்களின் தலையீற்றனைத்தும் சங்கரிப்பவனால் அடிக்கப்பட்டன. எகிப்தின் எல்லை எங்கும் ஒவ்வொரு வீட்டின் அகந்தையும் கிழாக்கப்பட்டது. கதறுகிறவர் களின் கூக்குரலும் அலறுதலும் ஆகாயத்தை நிரப்பிற்று. இராஜாவும் அவையோர்களும் வெளிறிப்போன முகத்தோடு கால்கள் நடுநடுங்க, அனைத்தையும் மேற்கொள்ளும் பயங்கரத் தினால் திகைத்து நின்றார்கள். நான் இஸ்ரவேலைப் போகவிடக் கர்த்தரின் வார்த்தையைக் கேட்கிறதற்கு அவர் யார்? நான் கர்த்தரை அறியேன்; நான் இஸ்ரவேலைப் போகவிடுவதில்லை என்று தான் ஒருமுறை பேசியதை பார்வோன் நினைவுகூர்ந்தான். பரலோகத்தை எதிர்த்த அவனுடைய அகந்தை இப்போது தூளுக்குத் தாழ்த்தப்பட்டது. இராத்திரியிலே அவன் மோசேயையும் ஆரோனையும் அழைப்பித்து : நீங்களும் இஸ்ரவேல் புத்திரரும் எழுந்து, என் ஜனங்களைவிட்டுப் புறப்பட்டுப்போய், நீங்கள் சொன்னபடியே கர்த்தருக்கு ஆராதனை செய்யுங்கள். நீங்கள் சொன்னபடியே உங்கள் ஆடு மாடுகளையும் ஓட்டிக்கொண்டு போங்கள், என்னையும் ஆசீர்வதியுங்கள் என்றான். அரச அவையோர்களும் ஜனங்களும் நாங்கள் எல்லாரும் சாகிறோமே என்று சொல்லி தீவிர மாய் புறப்பட்டுச் செல்லும்படி இஸ்ரவேலர்களை மன்றாடினார்கள். PPTam 339.1