Go to full page →

37 - அடிக்கப்பட்ட கன்மலை PPTam 525

ஒரேபிலே அடிக்கப்பட்ட கன்மலையிலிருந்து வனாந்தரத்தில் இஸ்ரவேலருக்கு புத்துணர்வளிக்கும்படியாக முதலில் ஒரு நீரோடை ஓடிவந்தது. அவர்களுடைய அலைச்சல்களில் எப்போதெல்லாம் தேவை ஏற்பட்டதோ, அப்போதெல்லாம் தேவனுடைய கிருபையின் அற்புதத்தினால் அவர்களுக்குத் தண்ணீர் கொடுக்கப்பட்டது. ஓரேபிலிருந்து தொடர்ச்சியாக தண்ணீர் ஓடிவரவில்லை . அவர்களுடைய பிரயாணங்களில் எங்கெங்கெல்லாம் தண்ணீர் தேவைப்பட்டதோ, அங்கே மலையின் சிகரங்களிலிருந்து அவர்களுடைய பாளயத்தையடுத்து தண்ணீர் ஓடி வந்தது. PPTam 525.1

கிறிஸ்துதாமே தமது வார்த்தையின் வல்லமையினால் புத்துணர்ச்சி அளிக்கும் ஓடையை இஸ்ரவேலருக்காக ஓடிவரச் செய்தார். அவர்களோடேகூடச் சென்ற ஞானக்கன்மலையின் தண்ணீரைக் குடித்தார்கள். அந்தக் கன்மலை கிறிஸ்துவே -1 கொரி. 10:4. அவரே தற்காலிக ஆசீர்வாதங்களுக்கும் ஆவிக்குரிய ஆசீர்வாதங்களுக்கும் ஊற்றாக இருந்தார். மெய்யான கன்மலை யாகிய கிறிஸ்து அவர்களுடைய அலைச்சல்களிலெல்லாம் அவர்களோடு இருந்தார். அவர் அவர்களை வனாந்தரங்களில் நடத்தும் போது அவர்களுக்குத் தாகவிடாயிருந்ததில்லை. கன்மலையிலிருந்து தண்ணீரை அவர்களுக்குச் சுரக்கப்பண்ணினார். கன்மலையைப் பிளந்தார். தண்ணீர் ஓடி வந்தது. தண்ணீர்கள் புறப்பட்டு, வறண்ட வெளிகளில் ஆறாய் ஓடிற்று ஏசா. 4821; சங். 105:41. PPTam 525.2

அடிக்கப்பட்ட கன்மலை கிறிஸ்துவிற்கு அடையாளமாயிருந்தது. இந்த அடையாளத்தின் வழியாக மிக விலையுயர்ந்த ஆவிக்குரிய சாத்தியங்கள் போதிக்கப்பட்டன. அடிக்கப்பட்ட கன் மலையிலிருந்து ஜீவனைத்தரும் தண்ணீர்கள் பாய்ந்தோடினதைப் போல, தேவனால் அடிக்கப்பட்ட நம்முடைய மீறுதல்களினிமித்தம் காயப்பட்ட நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் நொறுக்கப்பட்ட (ஏசாயா 53. 45) கிறிஸ்துவிடமிருந்து அழிந்து போன ......... இனத்திற்கு இரட்சிப்பின் ஓடைகள் பாய்கின்றன. அந்த கன்மலை ஒரு முறை அடிக்கப்பட்டதைப்போல், கிறிஸ்துவும் அநேகருடைய பாவங்களைச் சுமந்து தீர்க்கும் படிக்கு ஒரேதரம் பலியிடப்பட்டார் (எபி. 928). நம்முடைய இரட்சகர் இரண்டாவது முறையாக பலிகொடுக்கப்படக் கூடாது. அவருடைய கிருபையின் ஆசீர்வாதங்களைத் தேடுகிறவர்கள், தவறுகளினிமித்தம் மனம் வருந்துகிறஜெபத்தோடு இருதயத்தின் வாஞ்சைகளைகிறிஸ்துவின் நாமத்தில் கேட்பதே ஒரே தேவை . அப்படிப்பட்ட ஜெபம் சேனைகளின் ஆண்டவர் முன்பாக கிறிஸ்துவின் காயங்களைக் கொண்டு வர, இஸ்ரவேலுக்காக ஓடிவந்த ஜீவனுள்ள தண்ணீர்களால் அடையாளப்படுத்தப்பட்டஜீவனைக் கொடுக்கும் இரத்தம் பின்னர் அங்கேயிருந்து புதிதாக பாய்ந்து ஓடிவரும். PPTam 526.1

கானானில் ஸ்தாபிக்கப்பட்ட பின்னர் மிகவும் களிகூருதலான விளக்கங்களோடு, வனாந்தரத்தில் கன்மலையிலிருந்து தண்ணீர் ஓடிவந்த சம்பவம் இஸ்ரவேலர்களால் கொண்டாடப்பட்டது. கிறிஸ்துவின் காலத்தில் இந்தக் கொண்டாட்டம் மிகவும் மனதில் பதியக்கூடிய சடங்காக இருந்தது கூடாரப்பண்டிகையின் சமயத்தில் ஜனங்கள் அனைத்து தேசங்களிலிருந்தும் எருசலேமில் கூடியிருந்தபோது இது நடந்தது. பண்டிகையின் ஏழு நாட்களிலும் சீலோவாம் ஊற்றுகளிலிருந்து பொற்கிண்ணங்களில் தண்ணீர் எடுத்து வரும் படியாக, இசையோடும் லேவியரின் பாடல் குழு வோடும் ஆசாரியர்கள் சென்றனர், அவர்களைப் பின்தொடர்ந்து ஆராதிக்கிற திரள் கூட்டம் சென்று, இரட்சிப்பின் ஊற்றுகளிலிருந்து மகிழ்ச்சியோடே தண்ணீர் மொண்டு கொள்வீர்கள் (ஏசாயா 123) என்கிற பாடல் தொனி வெற்றியின் கீதங்களில் எழும்ப, ஓடையின் அருகே எவ்வளவு பேர் செல்ல முடியுமோ அவ்வளவு பேரும் அதிலிருந்து பருகினார்கள். பின்னர் எக்காளம் மற்றும் பவித்திரமாக எருசலேமே, உன் வாசல்களில் எங்கள் கால்கள் நிற்கலாயிற்று (சங். 122:2) என்று சொல்லப்பட்ட சத்தங்களுக்கு நடுவே ஆசாரியர்களால் எடுக்கப்பட்ட தண்ணீர் ஆலயத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது. துதியின் பாடல்கள் எழுந்தபோது தண்ணீர் பலிபீடத்தின் மேல் ஊற்றப்பட இசைக் கருவிகள் மற்றும் ஆழ்ந்த ஓசையுடைய எக்காளத்தின் வெற்றி கீதங்களோடு திரானவர்கள் சேர்ந்துகொண்டனர். PPTam 526.2

அவர்களுக்குக் கொடுக்கும்படி தாம் கொண்டுவந்த ஆசீர் வாதங்களுக்கு மக்களின் மனங்களை திருப்பும் படியாக இரட்சகர் இந்த அடையாளமாக ஆராதனையை உபயோகித்தார். பண்டிகையின் கடைசி நாளாகிய பிரதான நாளிலே. ஆலயப் பிராகாரங்களில் ஒலித்த குரல்களில் அவருடைய சத்தம் கேட்கப்பட்டது. ஒருவன் தாகமாயிருந்தால் என்னிடத்தில் வந்து, பானம் பண்ணக்கடவன். வேதவாக்கியம் சொல்லுகிறபடி என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் எவனோ, அவன் உள்ளத்திலிருந்து ஜீவத்தண்ணீருள்ள நதிகள் ஓடும் என்றார். தம்மை விசுவாசிக்கிறவர்கள் அடையப்போகிற ஆவியைக் குறித்து இப்படிச் சொன்னார் (யோவான் 7:37-39) என்று யோவான் கூறினான். புத்துணர்ச்சியளித்து, வனாந்தர வெடிப்புகளில் ஊறி வருகிற, வனாந்தரத்தை செழிப்பாக்கி அழிந்துகொண்டிருக்கிற வைகளுக்கு ஜீவனை அளிக்கிற தண்ணீர், ஆத்துமாவை சுத்தி கரித்து அதற்கு புத்துணர்வூட்டி அதை உயிர்ப்பிக்கிற ஜீவனுள்ள நீரைப்போன்ற கிறிஸ்துமாத்திரமே அளிக்கக்கூடிய தெய்வீகக் கிருபையின் சின்னமாயிருக்கிறது. கிறிஸ்து எவரில் தங்கியிருக் கிறாரோ, அவன் தன்னுள் வற்றாத கிருபை மற்றும் பெலத்தின் ஊற்றைக் கொண்டிருக்கிறான். இயேசு மெய்யாகவே தம்மைத் தேடுகிற அனைவருடைய வாழ்க்கையையும் மகிழ்ச்சியாக்கி பாதையை பிரகாசிப்பிக்கிறார். இருதயத்தில் ஏற்றுக்கொள்ளப்படும் அவருடைய அன்பு நித்திய ஜீவனுக்கேதுவாக நற்கிரியைகளின் ஊற்றாக இருக்கும். அது தன் ஊற்றினால் ஆத்துமாவை ஆசீர்வதிப்பது மாத்திரமல்ல, வார்த்தையிலும் நீதியின் செய்கையிலும் அவனைச் சுற்றி தாகத்தோடிருக்கிறவனை புதுப்பிக்க அந்த உயிருள்ள நீரோடை பாய்ந்தோடும். PPTam 527.1

அதே உருவகத்தை யாக்கோபின் கிணற்றருகே சமாரியப் பெண்ணோடு பேசிக்கொண்டிருந்தபோது கிறிஸ்து உபயோகித்தார். நான் கொடுக்கும் தண்ணீரைக் குடிக்கிறவனுக்கோ ஒருக்காலும் தாக முண்டாகாது; நான் அவனுக்குக் கொடுக்கும் தண்ணீர் அவனுக்குள்ளே நித்திய ஜீவகாலமாய் ஊறுகிற நீரூற்றாயிருக்கும் (யோவான் 4:14) என்று கூறினார். கிறிஸ்து இந்த இரண்டு அடையாளங்களையும் இணைக்கிறார். அவர்தான் கன்மலை ; அவரே ஜீவத்தண்ணீர். PPTam 527.2

அதே அழகான விளக்க அடையாளங்கள் வேதாகமம் முழுவதிலும் இருக்கிறது. கிறிஸ்து வருவதற்கு நூறாண்டுகளுக்கு முன்பு இஸ்ரவேலின் இரட்சிப்பின் கன்மலையாக மோசே அவரை சுட்டிக்காட்டினான். (உபா. 32.15), சங்கீதக்காரன் அவரைக் குறித்து : என் மீட்பர் பெலனான என் கன்மலை உயரமான கன்மலை என் இருதயத்தின் கன்மலை நான் நம்பியிருக்கிற கன்மலை என்று பாடினான். தாவீதின் பாடலில் அவருடைய கிருபை பரலோக மேய்ப்பன் தமது மந்தையை நடத்துகிற புல்லுள்ள இடங்களுக்கு நடுவே இருக்கிற அமர்ந்த குளிர்ந்த தண்ணீராக காட்டப்பட்டுள்ளது. உமது பேரின்ப நதியினால் அவர்கள் தாகத்தைத் தீர்க்கிறீர். ஜீவ ஊற்று உம்மிடத்தில் இருக்கிறது சங். 19.14; 627; 61:2,71:3; 73:26, 2:22, 23:2,368.9. ஞானி : ஞானத்தின் ஊற்று பாய்கிற ஆற்றைப் போலிருக்கும் (நீதி. 18:4) என்று அறிவிக்கிறான். எரேமியாவிற்கு கிறிஸ்து: ஜீவத்தண்ணீர் ஊற்று. சகரியாவிற்கு : பாவத்தையும் அழுக்கையும் நீக்க அது திறக்கப்பட்ட ஒரு ஊற்று எரே. 2:13; சகரியா 13:1. PPTam 528.1

ஏசாயா அவரை : நித்திய கன்மலை எனவும், விடாய்த்த பூமிக்குப் பெருங்கன்மலையின் நிழலாகவும் (ஏசா. 26:4; 32:2) விவரிக்கிறான். இஸ்ரவேலுக்காக பாய்ந்த ஜீவனுள்ள ஓடையை தெளிவாக மனதிற்குக் கொண்டு வந்து விலையேறப்பெற்ற வாக்குத்தத்தத்தை பதிவு செய்கிறான். சிறுமையும் எளிமையுமானவர்கள் தண்ணீரைத் தேடி. அது கிடையாமல், அவர்கள் நாவு தாகத்தால் வறளும் போது, கர்த்தராகிய நான் அவர்களுக்குச் செவிகொடுத்து, இஸ்ரவேலின் தேவனாகிய நான் அவர்களைக்கைவிடாதிருப்பேன். தாகமுள்ளவன்மேல் தண்ணீரையும், வறண்ட நிலத்தின் மேல் ஆறுகளையும் ஊற்றுவேன், வனாந்தரத்திலே தண்ணீர்களும், கடுவெளியிலே ஆறுகளும் பாய்ந்தோடும். ஓ ., தாகமாயிருக் கிறவர்களே, நீங்கள் எல்லாரும் தண்ணீர்கள்ண்டைக்கு வாருங்கள் என்ற அழைப்பு கொடுக்கப்படுகிறது. (ஏசாயா 41:17, 443,356, 551). பரிசுத்த எழுத்துக்களின் முடிவு பக்கங்களில் இந்த அழைப்பு எதிரொலிக்கிறது. பளிங்கைப்போல் தெளிவான ஜீவதண்ணீருள்ள நதி தேவனும் ஆட்டுக்குட்டியானவருமுடைய சிங்காசனத்திலிருந்து பாய், விருப்பமுள்ளவன் ஜீவத்தண்ணீரை இலவசமாய் வாங்கிக்கொள்ளக்கடவன் (வெளி. 22:17) என்கிற கிருபையின் அழைப்பு காலங்கள் நெடுகிலும் ஒலித்துக்கொண்டிருக்கிறது. PPTam 528.2

எபிரெய சேனை காதசை அடையும் சற்று முன்பாக பாளயத் திற்கு அருகே அநேக வருடங்களாக பாய்ந்து கொண்டிருந்த ஜீவ நீரோடை நின்று போனது. தமது ஜனங்களை மீண்டும் சோதிப்பது ஆண்டவருடைய நோக்கமாயிருந்தது. அவர்கள் அவருடைய ஏற்பாடுகளை நம்புவார்களா அல்லது அவர்களுடைய பிதாக்களைப்போல அவிசுவாசத்தை காண்பிப்பார்களா என்று அவர் அவர்களை சோதிப்பார். PPTam 529.1

அவர்கள் இப்போது கானானின் குன்றுகளைப் பார்க்கும் தூரத்தில் இருந்தனர். சில நாட்கள் பிரயாணம் அவர்களை வாக்குத்தத்த தேசத்தின் எல்லைகளில் கொண்டுவந்துவிடும். அவர்கள் ஏசாவின் சந்ததிக்குச் சொந்தமான, கானானிற்குள் செல்ல நியமிக்கப்பட்டிருந்த பாதையைக் கொண்டிருந்த ஏதோமிலிருந்து சற்று தொலைவிலேயே இருந்தார்கள். வடக்கே திரும்புங்கள். ஜனங்களுக்கு நீ கட்டளையிடவேண்டியது என்னவென்றால் : சேயீரிலே குடியிருக்கிற ஏசாவின் புத்திரரான உங்கள் சகோதரரின் எல்லையைக் கடக்கப்போகிறீர்கள்; அவர்கள் உங்களுக்குப் பயப்படுவார்கள்; ... போஜனபதார்த்தங்களை அவர்கள் கையிலே பணத்திற்கு வாங்கிப் புசித்து, தண்ணீரையும் அவர்கள் கையிலே பணத்திற்கு வாங்கிக் குடியுங்கள் (உபா. 23- 6) என்ற நடத்துதல் மோசேக்குக் கொடுக்கப்பட்டது. அவர்களுக்குக் கொடுக்கப்பட்டிருந்த தண்ணீர் ஏன் நின்று போயிற்று என்ற விளக்கத்திற்கு இந்த நடத்துதல்கள் போதுமானதாக இருந்திருக்கும். அவர்கள் கானான் தேசத்திற்கான நேர்பாதையில் நன்கு தண்ணீர் பாய்ந்திருந்த செழிப்பான தேசத்தின் வழியாக செல்லவிருக்கிறார்கள். ஏதோமின் வழியாக தீமையில்லாத பாதையையும், உணவையும் சேனைக்குப் போதுமான தண்ணீரையும் விலை கொடுத்து வாங்கக்கூடிய சந்தர்ப்பத்தையும் கொடுக்க தேவன் அவர்களுக்கு வாக்குக் கொடுத்திருந்தார். எனவே அதிசயமாகப் பாய்ந்து வந்த தண்ணீர் நின்று போனது களிகூருவதற்கான காரணமாகவும் வனாந்தர அலைச்சல் முடிந்து போனது என்பதற்கான அடையாளமாகவும் இருந்திருக்க வேண்டும். அவர்கள் தங்கள் அவிசுவாசத்தினால் குருடாகாது இருந்திருந்தால், இதை புரிந்திருப்பார்கள். தேவனுடைய வாக்குத்தத்தத்தின் நிறைவேறுதலுக்கான சான்று சந்தேகப்படுவதற்கும் முறுமுறுப்பதற்குமான சமயமாயிற்று. கானானை சுதந்தரிக்க தேவன் அவர்களைக் கொண்டு வருவார் என்ற அனைத்து நம்பிக்கையையும் இழந்தவர்கள் போல மக்கள் காணப்பட்டு, வனாந்தரத்தின் ஆசீர்வாதங்களுக்காக கிளர்ச்சியடைந்தனர். PPTam 529.2

கானானிற்குள் நுழையும்படி தேவன் அவர்களை அனுமதிக் கும் முன்பாக அவருடைய வாக்குத்தத்தத்தை நம்புவதை அவர்கள் காண்பிக்க வேண்டும். ஏதோமை அடையுமுன்பாக தண்ணீர் நின்று போயிற்று. இங்கே பார்த்து நடவாமல் விசுவாசித்து நடக்கும் படியான சந்தர்ப்பம் கொஞ்ச நேரம் அவர்களுக்கு இருந்தது. ஆனால் முதல் சோதனை அவர்கள் பிதாக்களில் வெளிக்காட்டப்பட்ட அதே கொந்தளிப்பை நன்றியில்லாத ஆவியை உண்டாக்கியது. பாளயத்தில் தண்ணீருக்கான அழுகை கேட்கப்பட்டவுடனே அவர்களுடைய தேவைகளை இத்தனை வருடங்களாக கொடுத்து வந்த கரத்தை அவர்கள் மறந்தனர். தேவனிடம் உதவிக்காகச் செல்வதற்குப் பதிலாக, எங்கள் சகோதரர் கர்த்தருடைய சந்நிதியில் மாண்டபோது நாங்களும் மாண்டு போயிருந்தால் நலமாயிருக்கும் (எண். 20:1-13) என்று, அதாவது கோராகினுடைய கலகத்தில் மரித்தவர்களுடைய எண்ணிக்கையில் இருந்திருக்கலாமே என்று தங்கள் விரக்தியில் சத்தமிட்டு அவருக்கு எதிராக முறுமுறுத்தார்கள். PPTam 530.1

அவர்களுடைய அழுகை மோசேக்கும் ஆரோனுக்கும் எதிராக திருப்பப்பட்டது. நாங்களும் எங்கள் மிருகங்களும் இங்கே சாகும்படி, நீங்கள் கர்த்தரின் சபையை இந்தவனாந்தரத்திலே கொண்டுவந்தது என்ன, விதைப்பும், அத்திமரமும், திராட்சச்செ டியும், மாதளஞ்செடியும், குடிக்கத் தண்ணீரும் இல்லாத இந்த மோசமான இடத்தில் எங்களைக் கொண்டு வரும்படி, நீங்கள் எங்களை எகிப்திலிருந்து புறப்படப் பண்ணினது என்ன என் றார்கள். PPTam 530.2

அந்தத் தலைவர்கள் கூடாரத்தின் கதவிற்குச் சென்று முகங்குப் புற விழுந்தார்கள். கர்த்தருடைய மகிமை அவர்களுக்குக் காணப்பட்டது. நீ கோலை எடுத்துக்கொண்டு, நீயும் உன் சகோதரனாகிய ஆரோனும் சபையாரைக் கூடிவரச்செய்து, அவர்கள் கண்களுக்கு முன்னே கன்மலையைப் பார்த்துப் பேசுங்கள்; அப்பொழுது அது தன்னிடத்திலுள்ள தண்ணீரைக் கொடுக்கும், இப்படி நீ அவர் களுக்குக் கன்மலையிலிருந்து தண்ணீர் புறப்படப்பண்ணுவாய் என்று மோசே கட்டளை பெற்றான். PPTam 530.3

மோசேதன் கையில் தேவனுடைய கோலை எடுத்துக்கொள்ள, இரண்டு சகோதரர்களும் திரள்கூட்டத்தின் முன் சென்றனர். அவர்கள் இப்போது வயதான மனிதர்களாக இருந்தார்கள். இஸ்ரவேலின் கலகத்தையும் பிடிவாதத்தையும் அவர்கள் அதிக காலம் தாங்கியிருக்கிறார்கள். ஆனால் இப்போது கடைசியாக மோசேயின் பொறுமை கூட அசைந்தது. கலகக்காரரே, கேளுங்கள், உங்களுக்கு இந்தக் கன்மலையிலிருந்து நாங்கள் தண்ணீர் புறப்படப்பண்ணுவோமோ? என்றான். தேவன் கட்டளையிட்ட தைப்போல கன்மலையோடு பேசுவதற்குப் பதிலாக அவன் கோலால் அதை இரண்டு முறை அடித்தான். PPTam 531.1

சேனையை திருப்திப்படுத்த தண்ணீர் ஏராளமாக பாய்ந் தோடியது. ஆனால் மாபெரும் தவறு செய்யப்பட்டிருந்தது. மோசே எரிச்சலோடு பேசியிருந்தான். அவனுடைய வார்த்தைகள் தேவன் கனவீனப்படுத்தப்பட்டிருந்ததால் உண்டான பரிசுத்த உக்கிரத்தினி மித்தம் வராமல், மனித உணர்ச்சிகளின் வெளிக்காட்டலாக இருந்தன . கலகக்காரரே, கேளுங்கள் என்றான். இந்த குற்றச்சாட்டு உண்மைதான். ஆனாலும் உண்மை கூட உணர்ச்சியிலும் பொறுமையின்மையிலும் பேசப்படக் கூடாது, இஸ்ரவேலின் மீறுதலை அவர்கள் மேல் சாட்டும்படி தேவன் மோசேயை அழைத்தபோது, அந்த வார்த்தைகள் அவனுக்கு வேதனையானவைகளாக இருந்தன. ஜனங்களுக்கும் அவைகள் தாங்கக்கூடாதவைகளாக இருந்தன. ஆனால் செய்தியைக் கொடுக்கும்படி தேவன் அவனைத் தாங்கியிருந்தார். ஆனால் அவர்களைக் குற்றப்படுத்தும் வேலையை அவன் தன்மீது எடுத்துக்கொண்ட போது, தேவனுடைய ஆவியானவரை வருத்தப்படுத்தி ஜனங்களுக்குத் தீமையையே செய்தான். அவனுடைய பொறுமையின்மையும் சுயகட்டுப்பாடின்மையும் வெளிப்படையாக இருந்தது. இவ்வாறாக, அவனுடைய கடந்தகால வழி முறைகள் தேவனுடைய நடத்துதலின் கீழ் இருந்ததோ என்று கேள்வி கேட்கவும், தங்களுடைய பாவங்களுக்கு சாக்குப்போக்கு சொல்லவும் ஜனங்களுக்கு ஒரு சந்தர்ப்பம் இருந்தது . மோசேயும் ஜனங்களும் தேவனைக் காயப்படுத்தியிருந்தனர், ஆதியிலிருந்தேவிமர்சனம் செய்வதற்கும் கண்டிப்பதற்கும் அவனுடைய வார்த்தைகள் வெளிப்படை யாயிருந்தது என்று அவர்கள் கூறினார்கள். இப்போது தமது ஊழியக்காரன் வழியாக தேவன் அவர்களுக்கு அனுப்பின் அனைத்துக் கண்டனங்களையும் நிராகரிக்கவேண்டும் என்று அவர்கள் விரும்பியிருந்ததற்கு ஒரு காரணத்தைக் கண்டனர். PPTam 531.2

மோசே தேவன்மேல் அவிசுவாசத்தை வெளிக்காட்டினான். ஆண்டவர் தாம் வாக்குப்பண்ணினதை நடப்பிக்க மாட்டார் என்பதைப்போல் நாங்கள் தண்ணீர் புறப்படப்பண்ணுவோமோ? என்று கேள்வி கேட்டான். நீங்கள் என்னை விசுவாசியாமற்போனபடியினால் என்று ஆண்டவர் இரண்டு சகோதரர்களுக்கும் அறிவித்தார். தண்ணீர் வற்றிப்போன சமயத்தில் ஜனங்களுடைய மீறுதலினாலும் முறுமுறுப்பினாலும் தேவனுடைய வாக்குத் தத்தங்களின் நிறைவேறுதலின் மேலிருந்த அவர்களுடைய சொந்த விசுவாசமும் அசைக்கப்பட்டிருந்தது. முதலாவது தலைமுறை வனாந்தரத்தில் அவர்களுடைய அவிசுவாசத்தினிமித்தமாக அழிந்து போகும்படியாக ஆக்கினைக்குட்பட்டிருந்தது. எனினும் பிள்ளைகளிடத்திலும் அதே ஆவி காணப்பட்டது. இவர்களும் வாக்குத்தத்தத்தைப் பெற்றுக்கொள்ளாது போவார்களோ? இளைப்படைந்து மனம் சோர்ந்தவர்களாக மோசேயும் ஆரோனும், பிரபலமான உணர்வின் ஓட்டத்தை கட்டுப்படுத்த எந்த முயற்சியும் எடுக்கவில்லை. அவர்கள் தேவனிடம் அசையாத விசுவாசத்தை வெளிக்காட்டியிருந்திருப்பார்களானால், இந்த சோதனையைத் தாங்கும் படி ஜனங்களை தகுதிப்படுத்தியிருக்கக்கூடிய அப்படிப்பட்ட வெளிச்சத்தில் இந்தக் காரியத்தை வைத்திருப் பார்கள். முறையான நியாயாதிபதிகளென்று அவர்கள் மேல் வைத்திருந்த தீர்மானமான அதிகாரத்தினால் முறுமுறுப்பை அவர்கள் அடக்கியிருக்கலாம். தேவனிடம் தங்களுக்காக கிரியை செய்யும்படி கேட்பதற்கு முன்பாக ஒரு மேலான ஒரு நிலையைக் கொண்டு வரும்படி தங்களுடைய வல்லமையில் இருக்கும் ஒவ்வொரு முயற்சியையும் செயல்படுத்துவது அவர்களுடைய கடமையாயிருந்தது. காதேசில் உண்டான முறுமுறுப்பு முறையாகத் தடுக்கப்பட்டிருக்குமானால் எப்படிப்பட்ட தொடர்ச்சியான தீமைகள் தடுக்கப்பட்டிருக்கும். PPTam 532.1

தன்னுடைய கோபமான அவசரமான செயலின் வழியாக தேவன் போதிக்க வேண்டுமென்றிருந்த பாடத்தின் வேகத்தை மோசே அகற்றினான். கிறிஸ்துவின் அடையாளமாயிருந்த கன்மலை - கிறிஸ்து ஒரு முறை பலியாக வேண்டியிருப்பதைப் போன்று ஒரு முறை அடிக்கப்பட்டது. இயேசுவின் நாமத்தினால் ஆசீர்வாதங்களுக்காக நாம் கேட்க மாத்திரம் செய்ய வேண்டும் என்பதைப்போல் இரண்டாவது முறை கன்மலையிடம் பேசுவது மாத்திரமே அவசியப்பட்டிருந்தது. இரண்டாவது முறை கன்மலையை அடித்ததினால் கிறிஸ்துவைக்குறித்த இந்த அழகான உருவகத்தின் குறிப்பு அழிக்கப்பட்டது. PPTam 532.2

அதற்கும் மேலாக தேவனுக்கு மாத்திரமே சொந்தமான வல்லமை தங்களுக்கு இருப்பதாக மோசேயும் ஆரோனும் யூகித்திருந்தனர். தெய்வீக தலையீட்டின் அவசியம் இந்தச் சம்பவத்தை மிகவும் பவித்திரமான ஒன்றாக்கியிருந்தது. தேவனுக்கு பயபக்தி காண்பிக்கும் படி மக்களை உணர்த்தவும், அவருடைய வல்லமையிலும் நன்மையிலும் விசுவாசத்தைக் காண்பிக்கவும் இஸ்ரவேலின் தலைவர்கள் இதை உபயோகித்திருக்க வேண்டும். கோபத்தோடு : உங்களுக்கு இந்தக் கன்மலையிலிருந்து நாங்கள் தண்ணீர் புறப்படப்பண்ணுவோமோ என்று அவர்கள் கத்தின் போது, மனித பெலவீனங்களைக் கொண்டிருக்கிற மனிதர்களான தங்களிடம் வல்லமை இருப்பதைப்போல், தங்களை தேவனுடைய இடத்தில் வைத்தனர். தொடர்ச்சியான முறுமுறுப்பினாலும் ஜனங்களுடைய கலகத்தினாலும் இளைப்படைந்து, மோசே சர்வவல்லமையுள்ள உதவியாளரை மறந்தான். தெய்வீக பலம் இல்லாது, மனித பெலவீனத்தை வெளிக்காட்டினதினால் தன்னுடைய ஆவணத்தை கறைப்படுத்த விடப்பட்டான். தூய்மையாக உறுதியாக கடைசி வரையிலும் சுயநலமின்றி இருந்திருக்கக்கூடிய அந்த மனிதன், கடைசியாக வெற்றி கொள்ளப்பட்டான். உயர்த்தப்பட்டு, மகிமைப்படுத்தப்பட்டிருக்க வேண்டிய தேவன் இஸ்ரவேலின் ச பைக்கு முன்பாக கனவீனப்படுத்தப்பட்டார். PPTam 533.1

இந்த சமயத்தில் மோசேயையும் ஆரோனையும் தூண்டின் அந்த துன்மார்க்க மனிதர்மேல் தேவன் நியாயத்தீர்ப்புகளை அறிவிக்கவில்லை . தேவனுடைய பிரதிநிதிகளாக நின்றிருந்தவர்கள் அவரைகனப்படுத்தவில்லை . ஜனங்களுடைய முறுமுறுப்புகள் தங்களுக்கு எதிராக அல்ல, தேவனுக்கு எதிராக இருக்கிறது என்ற பார்வையை இழந்தவர்களாக மோசேயும் ஆரோனும் துயரத்தோடு நின்றனர். தங்களைப் பார்த்ததினாலே, தங்களுடைய பரிதாபங்களுக்கு முறையிட்டதினாலே, உணர்விழந்தவர்களாக அவர்கள் பாவத்தில் விழுந்து, தேவனுக்கு எதிராக இருந்த ஜனங்களின் பெரிய குற்றத்தை அவர்கள் முன் காண்பிப்பதில் தோற்றனர். PPTam 533.2

கர்த்தர் மோசேயையும் ஆரோனையும் நோக்கி: இஸ்ரவேல் புத்திரரின் கண்களுக்கு முன்பாக என்னைப்பரிசுத்தம் பண்ணும்படி, நீங்கள் என்னை விசுவாசியாமற்போனபடியினால், இந்தச் சபையாருக்கு நான் கொடுத்த தேசத்துக்குள் நீங்கள் அவர்களைக் கொண்டு போவதில்லை என்றார். உடனடியாக அறிவிக்கப்பட்ட நியாயத்தீர்ப்பு கசப்பானதும் மிகக் கீழாக தாழ்மைப்படுத்துகிறது மாயிருந்தது. கலகங்கொண்ட இஸ்ரவேலரோடு அவர்களும் யோர்தானைக் கடக்கு முன்பாக சாக வேண்டும். சுயமதிப்பை மோசேயும் ஆரோனும் நேசித்திருந்திருப்பார்களானால், தெய்வீக எச்சரிப்பிற்கும் கடிந்து கொள்ளுதலுக்கும் முன்பாக உணர்ச்சியடைந்த ஆவியில் திளைத்திருப்பார்களானால், அவர்களுடைய குற்றம் மகாபெரியதாக இருந்திருக்கும். ஆனாலும் அவர்கள் வேண்டுமென்றே துணிகரமாகச் செய்த பாவத்திற்கு உட்படவில்லை. அவர்கள் சடிதியான சோதனையினால் மேற்கொள்ளப்பட்டனர். அவர்களுடைய இருதய நொறுங்குதல் உடனடியானதும் இருதயத்திலிருந்து வந்ததுமாயிருந்தது. ஆண்டவர் அவர்களுடைய மனவருத்தத்தை ஏற்றுக் கொண்ட போதிலும் ஜனங்களுக்குள்ளே அவர்களுடைய பாவம் ஏற்படுத்தின் பாதிப்பினால் அந்தத் தண்டனையை அவர் திரும்ப எடுக்கக்கூடாது போயிற்று. PPTam 533.3

மோசே தன்னுடைய தண்டனையை மறைக்கவில்லை. மாறாக, தேவனுக்கு மகிமையைச் செலுத்தத் தவறினதினால் வாக்குத்தத்த தேசத்திற்குள் அவர்களை அவனால் கொண்டு செல்ல முடியாது என்று ஜனங்களிடம் அறிவித்தான். அவன் மேல் கொடுக்கப்பட்ட கடுமையான தண்டனையை குறிக்கும்படியாக அவர்களை அழைத்து, தங்களுடைய பாவத்தினால் தங்கள் மீது வருவித்துக்கொண்ட நியாயத்தீர்ப்புகளை சாதாரண மனிதன்மேல் வைத்ததினால் உண்டான அவர்களுடைய முறுமுறுப்புகளை தேவன் எவ்விதம் பார்ப்பார் என்பதை சிந்திக்கச் சொன்னான். தன்னுடைய தண்டனையைத் திரும்ப எடுக்கும்படியாக எவ்வாறு அவன் தேவனிடம் மன்றாடினான் என்பதையும் எவ்விதம் அது மறுக்கப்பட்டது என்பதையும் அவர்களுக்குக் கூறினான். கர்த்தரோ உங்கள் நிமித்தம் என்மேல் கோபங்கொண்டு, எனக்குச் செவிகொடாமல் (உபா. 3:26) என்றான். PPTam 534.1

ஒவ்வொரு கடினமான சோதனையான சந்தர்ப்பத்திலும் எகிப்திலிருந்து தங்களை அழைத்து வந்ததற்காக, ஏதோ இந்தக் காரியத்தில் தேவனுக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்பதைப்போல மோசேயைக்குற்றப்படுத்த இஸ்ரவேலர்கள் ஆயத்தமாயிருந்தனர். பிரயாணங்கள் முழுவதிலும் வழியின் கஷ்டங்களினிமித்தம் குறை சொல்லி, தலைவர்களுக்கு எதிராக முறுமுறுத்தபோது உங்கள் முறுமுறுப்புகள் தேவனுக்கு எதிராக இருக்கிறது. நானல்ல, தேவனே உங்களை விடுவித்திருக்கிறார் என்று மோசே அவர்களுக்குச் சொல்லியிருந்தான். ஆனால் கன்மலையின் முன் நாங்கள் தண்ணீர் புறப்படப்பண்ணுவோமோ என்று கூறிய அவச ரமான வார்த்தைகள் அவர்களுடைய குற்றச்சாட்டுகளை மெய்யாக ஒப்புக்கொண்டதைப்போல இருந்து, இவ்வாறு அவர்களுடைய முறுமுறுப்புகளை நியாயப்படுத்தி, அவர்களுடைய அவிசுவாசத்தை உறுதிப்படுத்தியது. மோசேயை வாக்குத்தத்த தேசத்திற்குள் நுழைய தடுப்பதன் வழியாக அவர்கள் மனங்களிலிருந்து இந்த எண்ணப்பதிப்பை எந்நாளுமாக ஆண்டவர் அகற்றுவார். இங்கே அவர்களுடைய தலைவன் மோசே அல்ல, வழியில் உன்னைக் காக்கிறதற்கும், நான் ஆயத்தம் பண்ணின் ஸ்தானத்துக்கு உன்னைக் கொண்டுபோய்ச் சேர்க்கிறதற்கும், இதோ, நான் ஒரு தூதனை உனக்கு முன்னே அனுப்புகிறேன். அவர் சமுகத்தில் எச்சரிக்கையாயிருந்து, அவர் வாக்குக்குச் செவிகொடு,... என் நாமம் அவர் உள்ளத்தில் இருக்கிறது (யாத். 20, 21) என்று ஆண்டவர் குறிப்பிட்ட வல்லமையான தூதனே என்பதற்கான தவறுகாணக்கூடாத சான்று இருக்கிறது. PPTam 534.2

கர்த்தரோ உங்கள் நிமித்தம் என்மேல் கோபங்கொண்டு என்று மோசே கூறினான். இஸ்ரவேலர் அனைவரின் பார்வையும் மோசேயின் மேல் இருந்தது. அவனுடைய பாவம் தமது ஜனத்தின் மேல் தலைவாயிருக்கும் படி அவனைத் தெரிந்து கொண்ட தேவன்மேல் பிரதிபலிப்பை உண்டாக்கியது. அந்த மீறுதல் அனைத்து சபையாருக்கும் தெரியவந்தது. ஒருவேளை அது இலகுவாக எடுத்துக் கொள்ளப்பட்டிருக்குமானால், பொறுப்பான பதவிகளில் இருக்கிறவர்கள் மாபெரும் தூண்டுதல்களில் அவிசுவாசத்தையும் பொறுமையின்மையையும் காண்பிப்பதற்கு சாக்குப்போக்கு கொடுக்க முடியும் என்கிற ஒரு பதிப்பை அவர்களிடம் உண்டாக்கியிருந்திருக்கும். ஆனால் அந்த ஒரு பாவத்தினால் மோசேயும் ஆரோனும் கானானுக்குள் பிரவேசிக்கக் கூடாது என்று அறிவிக்கப்பட்ட போது, தேவன் பட்சபாதமுள்ளவரல்ல என்றும் மீறுகிறவனை நிச்சயமாக தண்டிப்பார் என்றும் ஜனங்கள் அறிந்தனர். PPTam 535.1

வரவிருக்கும் தலைமுறைகளுக்கு போதனையாகவும் எச்சரிப்பாகவும் இருக்கும் படி இஸ்ரவேலின் சரித்திரம் ஆவணங்களில் பதிக்கப்பட வேண்டும். பரலோகத்தின் தேவன் பட்சபாதமற்ற அதிபதி என்றும், என்ன காரணத்திலும் பாவத்தை நியாயப்படுத்தமாட்டார் என்றும் எதிர்காலத்தின் அனைத்து மனிதர்களும் காணவேண்டும். ஆனாலும் பாவத்தின் மாபெரும் பாவத்தன்மையை சிலரே உணருகிறார்கள். பாவியை தண்டிக் கக்கூடாதபடி தேவன் மிகவும் நல்லவர் என்று மனிதர் தங்களை வஞ்சித்துக் கொள்ளுகிறார்கள். ஆனால் பிரபஞ்சத்தின் சமாதானத்திற்கும் மகிழ்ச்சிக்கும் ஆபத்தை ஏற்படுத்துகிற தீமை யென்று அதை நடத்தும்படி தேவனுடைய நன்மையும் அன்பும் செயல்படுகிறது என்பதற்கு வேதாகம சரித்திரம் சான்றாக இருக் கிறது. PPTam 535.2

மோசேயின் உண்மையும் விசுவாசமுங்கூட அவனுடைய குற்றத்திற்கான தண்டனையை திருப்பக்கூடாதிருந்தது. தேவன் ஜனங்களுக்கு மாபெரும் மீறுதல்களை மன்னித்திருந்தார். ஆனால் நடத்தப்பட்டவர்களிடம் நடந்து கொண்டதைப் போல் தலைவர்களின் பாவங்களோடு அவர் நடந்துகொள்ள முடியாது. பூமியிலிருந்த மற்ற ஒவ்வொரு மனிதனையும் விட அவர் மோசே யை கனம் பண்ணியிருந்தார். அவனுக்கு அவர் தமது மகிமையை வெளிப்படுத்தியிருந்தார். அவன்வழியாக இஸ்ரவேலுக்கு அவர் தமது நியமங்களை அறிவித்திருந்தார். அவன் மிகப் பெரிய வெளிச்சத்தையும் அறிவையும் அனுபவித்திருந்தான் என்கிற உண்மை அவனுடைய பாவத்தை மிகவும் வருத்தமுள்ளதாக்கியது. கடந்தகால் உண்மை ஒரு தவறான செய்கையை மீட்காது. மனிதனுக்குக் கொடுக்கப்பட்ட வெளிச்சமும் சந்தர்ப்பங்களும் பெரிதாக இருக்கும் போது, அவனுடைய பொறுப்புகளும் பெரிதாயிருந்து, அவனுடைய தோல்விகள் மிகவும் அதிகக் கேடானதும் அவன் தண்டனைகள் மிகப் பாரமானதுமாக இருக்கும். PPTam 536.1

மனிதர்கள் பார்ப்பதைப்போல மோசே மாபெரும் குற்றத்தோடு இருக்கவில்லை . அவனுடைய பாவம் சாதாரணமாக நிகழுகிற ஒன்றாக இருந்தது. தன் உதடுகளினால் பதறிப் பேசி னான் - சங். 10633. மனிதனுடைய நிதானத்திற்கு இது இலகுவான காரியமாகத் தோன்றலாம். ஆனால் இந்தப் பாவத்தினிமித்தம் தமது மிக உண்மையான கனமுள்ள ஊழியக்காரனிடம் தேவன் மிகக் கடுமையாக நடந்துகொள்வாரானால், இதை மற்றவர்களிடமும் அவர் அனுமதிக்கமாட்டார். சுயத்தை உணர்த்தும் ஆவி நம்முடைய சகோதரரைக் கண்டிக்கும் மனப்பாங்கு தேவனுக்குப் பிரியமற்றது. இந்த தீமைகளில் திளைக்கிறவர்கள் தேவனுடைய ஊழியத்தின் மேல் சந்தேகத்தை வீசி, தேவனை நம்பாதவர்களுக்கு அவர்களுடைய அவநம்பிக்கைக்கு ஒரு காரணத்தைக் கொடுக்கிறார்கள். ஒருவனுடைய தகுதி எவ்வளவு அதிக முக்கியமானதாக இருக் கிறதோ, அவனுடைய செல்வாக்கு எவ்வளவு பெரியதாக இருக் கிறதோ, அவ்வளவு அவசியமாக அவன் பொறுமையையும் தாழ்மையையும் வளர்க்கவேண்டியதிருக்கிறது. PPTam 536.2

தேவனுடைய பிள்ளைகள் விசேஷமாக பொறுப்பான பதவிகளில் இருக்கிறவர்கள் தேவனுக்குக் கொடுக்க வேண்டிய மகிமையை தங்களுக்கு எடுத்துக்கொள்ள நடத்தப்படலாம். சாத் தான் பேருவகை அடைகிறான். அவன் ஒரு வெற்றியை அடைந் திருக்கிறான். இவ்வாறாகத்தான் அவன் விழுந்தான். இவ்வாறா கவே மற்றவர்களை அழிவிற்குள் சோதிப்பதிலும் அவன் மிகவும் வெற்றியடைகிறான். அவனுடைய உபாயங்களுக்கு எதிராக நம்மை காவலில் வைக்கும் படியாகவே சுயத்தை உயர்த்தும் ஆபத்தை போதிக்கும் பாடங்களை தேவன் தமது வார்த்தையில் கொடுத்திருக்கிறார். நம்முடைய இயல்பின் ஒவ்வொரு துடிப்பும், மனதின் திறமையும், இருதயத்தின் இசைவும் ஒவ்வொரு நொடியும் தேவனுடைய ஆவியானவரின் கட்டுப்பாட்டிற்குள் இருப்பது அவசியம். தேவன் மனிதன் மேல் வைக்கும் ஒவ்வொரு ஆசீர் வாதத்தையும், அவன் மேல் வர அவர் அனுமதிக்கும் சோதனை யையும், சாத்தானுக்கு மிகக் குறைவான சாதகத்தை கொடுத்தால் கூட, நம்மை சோதித்து நம் ஆத்துமாவை அலைக்கழித்தழிக்க அவன் அதை எடுத்துக்கொள்ள முடியும். எனவே ஒருவனுக்குக் கொடுக்கப்பட்ட ஆவிக்குரிய வெளிச்சம் எவ்வளவு பெரியதாக இருப்பினும் தேவ தயவையும் ஆசீர்வாதத்தையும் அவன் எவ்வளவு அதிகமாக அனுபவித்தாலும், ஒவ்வொரு நினைவையும் நடத்தி ஒவ்வொரு துடிப்பையும் கட்டுப்படுத்த விசுவாசத்தினால் மன்றாடினவனாக ஆண்டவர் முன்பு எப்போதும் தாழ்மையோடு அவன் நடக்கவேண்டும். PPTam 537.1

தெய்வ பக்தியை அறிக்கைபண்ணும் அனைவரும் தங்களுடைய ஆவியை காவல் காக்கவும், மிக பயங்கரமான தூண்டுதலின் கீழும் சுயத்தைக் கட்டுப்படுத்தவும் கடமைப்பட்டிருக்கிறார்கள். மோசேயின் மேல் வைக்கப்பட்ட இந்தப் பாரங்கள் மிகப் பெரியதாக இருந்தது. அவனைப் போல வெகு சில மனிதர்களே மிகக் கடுமையாக சோதிக்கப்பட்டிருக்கிறார்கள். என்றாலும் அவனுடைய பாவத்திற்கு சாக்குச் சொல்ல இது அனுமதிக்கப்பட வில்லை. தேவன் தமது ஜனங்களுக்கு தாராளமான ஏற்பாடுகளைச் செய்திருக்கிறார். அவர்கள் அவருடைய பெலத்தைச் சார்ந்திருப் பார்களானால், ஒருபோதும் சூழ்நிலைகளால் விளையாடப்பட மாட்டார்கள். மிகவும் வல்லமையான சோதனையும் பாவத்திற்கு சாக்குப்போக்காக இருக்க முடியாது. ஆத்துமாவின் மேல் சகிக்கும்படியாக கொண்டுவரப்படுகிற அழுத்தம் எவ்வளவு அதிகமாக இருந்தாலும், மீறுதல் நமது சொந்த செய்கையாகவே இருக்கிறது. தீமை செய்யும்படி ஒருவனை நிர்பந்திக்கும் வல்லமை பூமியிலும் இல்லை, பாதாளத்திலும் இல்லை. நம்முடைய பெலவீனமான இடங்களில் சாத்தான் நம்மைத் தாக்குகிறான். ஆனாலும் நாம் மேற்கொள்ளப்பட வேண்டிய அவசியமில்லை. தாக்குதல் எவ்வளவு கடுமையும் எதிர்பாராததுமாயிருந்தாலும் தேவன் நமக்கான உதவியை ஏற்பாடு செய்திருக்கிறார். அவருடைய பெலத்தினால் நாம் மேற்கொள்ள முடியும். PPTam 537.2